Vishnupuram Publications

Vishnupuram Publications Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vishnupuram Publications, Publisher, Vadavalli, Coimbatore.

பெங்களூர் கட்டண உரைமுன்பதிவு லிங்க் முதல் கமெண்டில்
24/03/2024

பெங்களூர் கட்டண உரை

முன்பதிவு லிங்க் முதல் கமெண்டில்

'சங்கச் சித்திரங்கள்' - விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!! Please find link in the first comment சங்கப் பாடல்களை வாசிக்கையில...
18/04/2023

'சங்கச் சித்திரங்கள்' - விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!
Please find link in the first comment
சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது … எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம்
#சங்கச்சித்திரங்கள் #ஜெயமோகன்

ஜெயமோகனின் 'பேய் கதைகளும் தேவதை கதைகளும்' சிறுகதை தொகுப்பு- விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!  Please find the link in the ...
17/04/2023

ஜெயமோகனின் 'பேய் கதைகளும் தேவதை கதைகளும்' சிறுகதை தொகுப்பு- விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!
Please find the link in the first comment!
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர்.எப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன். அவற்றின் உளநுட்பங்களும் கவித்துவ ஆழங்களும் என் வாசகர்களால் பெரிதும் உணரப்பட்டும் உள்ளன.வாழ்க்கையைக் கற்பனை மூலம் அறிய முயல்பவர்கள் தினம் தினம் காணும் பேய்கள் பல. அவனுள் குடிகொண்டுள்ள பேய்களோ பற்பல. இத்தொகுப்பில், முற்றிலும் அப்படிப்பட்ட கதைகளால் ஆன ஓர் உலகை உருவாக்கியுள்ளேன். குற்றம், பாவ உணர்ச்சி, தனிமை ஆகியவற்றின் வெளிப்பாடுகளாகவே இக்கதைகளைக் காண்கிறேன்.
#ஜெயமோகன் #விஷ்ணுபுரம் #பேய்கதைகள்

ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதை தொகுப்பு - விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!  Please find the link in the first comment! இத்தொ...
07/04/2023

ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதை தொகுப்பு - விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!
Please find the link in the first comment!
இத்தொகுதியில் ஜெயமோகன் எழுதிய எட்டு கதைகள் உள்ளன. இவற்றில் ’துணைவன்’ கதையை விரிவாக்கி வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது. வெவ்வேறு கதைக் களங்களும், கதை சொல்லும் முறையும் கொண்ட கதைகள் இவை. மனித உள்ளத்தின் ஒளிப்படாத ஆழங்களை நோக்கிச் செல்லும் பயணங்கள்.
#துணைவன் #ஜெயமோகன் #விஷ்ணுபுரம்

"துணைவன்" சிறுகதை தொகுப்பு - விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!  கின்டிலில் வாங்க - https://www.amazon.in/%E0%AE%A4%E0%AF%81...
06/04/2023

"துணைவன்" சிறுகதை தொகுப்பு - விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!
கின்டிலில் வாங்க - https://www.amazon.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-Thunaivan-Tamil-Jeyamohan-ebook/dp/B0C1G8WK3K/ref=mp_s_a_1_4?crid=36V8HJDPSXG34&keywords=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&qid=1680777527&sprefix=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%2Caps%2C557&sr=8-4
#துணைவன்
#ஜெயமோகன் #சிறுகதை #வெற்றிமாரன் #விடுதலை

ஜெயமோகனின் "வெண் கடல்" - சிறுகதை தொகுப்பு!!  விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!  கின்டிலில் வாங்க... Please find link in the...
30/03/2023

ஜெயமோகனின் "வெண் கடல்" - சிறுகதை தொகுப்பு!!
விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!
கின்டிலில் வாங்க... Please find link in the comments.
#ஜெயமோகன் #விஷ்ணுபுரம் #வெண்கடல்

சிறுகதைப் பயிலரங்கம்! -யுவன் சந்திரசேகர்,எம். கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன் தேதி: 28, 29, 30 ஏப்ரல் (வெள்ளி,சனி,ஞாயிறு) ந...
22/03/2023

சிறுகதைப் பயிலரங்கம்! -யுவன் சந்திரசேகர்,எம். கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன்
தேதி: 28, 29, 30 ஏப்ரல் (வெள்ளி,சனி,ஞாயிறு)
நெறியாளர்கள்: யுவன் சந்திரசேகர்
எம். கோபாலகிருஷ்ணன்
க.மோகனரங்கன்

இடம்: சத் தர்ஷன் - கோவை
கட்டணம்: Rs.3000 ( தங்குமிடம்,உணவு ,தேநீர் உட்பட )
தொடர்புக்கு: 9840065000
[email protected]

'இரவு' - விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!  இந்த இரவில்இப்புவியில்எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன !காட்டில் கரிய பெரும...
21/03/2023

'இரவு' - விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!
இந்த இரவில்

இப்புவியில்

எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன !

காட்டில் கரிய பெரும் யானைகள்

மண்ணுக்குள் எலிகள்

நீருக்குள் மீன்கள்

பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்

நாளைய புவி

இங்கே கரு புகுகிறது

நிறைவுடன்

சற்றே சலிப்புடன்

பெருமூச்சு விட்டுக் கொண்டு

திரும்பிப் படுக்கிறது

இரவு
#ஜெயமோகன் #விஷ்ணுபுரம் #இரவு

ஜெயமோகன் எழுதிய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு - நத்தையின் பாதை விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!  Please find the link in t...
17/03/2023

ஜெயமோகன் எழுதிய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு - நத்தையின் பாதை
விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு!!
Please find the link in the first comment!
இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில், அரசியலில் பங்கெடுக்க முடிகிறது.

அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன. பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை, சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன. இலக்கியம் எழுதுவது, வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று. இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை

Address

Vadavalli
Coimbatore
641041

Alerts

Be the first to know and let us send you an email when Vishnupuram Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vishnupuram Publications:

Share

Category