Vidiyal Pathippagam

Vidiyal Pathippagam Vidiyal Pathippagam is a nonprofit book publishing house based in Coimbatore.

48-வது சென்னை புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27 முதல் சனவரி 12 வரை விடியல் அரங்கு எண்: 247இடம்: YMCA Grounds, நந்தனம்.
28/12/2024

48-வது சென்னை புத்தகக் கண்காட்சி
டிசம்பர் 27 முதல் சனவரி 12 வரை
விடியல் அரங்கு எண்: 247
இடம்: YMCA Grounds, நந்தனம்.

காசாவின் குழந்தைகளுடன் கரம்கோர்ப்போம்!பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இன்று தொடுக்கப்பட்டிருக்கும் போர் மனித வரலாற்றில் மிகவு...
25/12/2024

காசாவின் குழந்தைகளுடன் கரம்கோர்ப்போம்!

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இன்று தொடுக்கப்பட்டிருக்கும் போர் மனித வரலாற்றில் மிகவும் அநீதியான நிகழ்வுகளுள் முக்கியமானது.
எவ்வித ஈவு இரக்கமுமின்றி, அனைத்து சர்வதேசப் போர்ச் சட்டங்களையும், மனித உரிமைச் சட்டங்களையும் மீறி மிகவும் கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும்.

2023 அக்டோபரில் தொடங்கியது முதல் இன்று வரை 20,00,000-திற்கும் மேற்பட்ட பா-ல-ஸ்தீன மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றபட்டுள்ளனர். 45,000-திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 17,000-திற்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீனக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது இஸ்ரேல். கொல்லப்பட்ட குழந்தைகளின எண்ணிக்கையில் 3000 குழந்தைகள் 5 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இப்போரினால் பல லட்சம் மக்களும் குழந்தைகளும் படுகாயமுற்றும் உணவும் மருத்துவ உதவியுமின்றி மிகுந்த துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அங்கு நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை வெளிககொண்டுவரும் பத்திரிக்கையாளர்களும் பெரும் அளவில் கொல்லப்படுகின்றனர்.
பா-ல-ஸ்தீன மக்களுக்கு உதவிகள் கிடைக்காதவாறு அனைத்து வழிகளையும் தடைசெய்திருக்கிறது இஸ்ரேல்.

அத்தகையத் தடைகளையும் மீறி பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு செயற்பாட்டாளர்களும் மனித உரிமைச் ஆர்வலர்களும் அமைப்புகளும் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். அம்முயற்சிகளின் ஒரு பகுதியே “A Million Kites” என்ற ஆங்கிலப் புத்தகம். காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் அடங்கியத் தொகுப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “பத்து லட்சம் பட்டங்கள்” என்ற புத்தகமாக வெளிவருகிறது.

ஆங்கில புத்தக விற்பனையின் மூலம் பெறப்படும் 100 சதவீத இலாபம் காசா குழந்தைகளின் நிவாரண நிதிக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல, தமிழ் மொழிபெயர்ப்பு புத்தக விற்பனையின் மூலம் பெறப்படும் 100 சதவீத இலாபமும் காசா குழந்தைகளின் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.

காசாவின் குழந்தைகளுக்கு நம்மால் இயன்ற இச்சிறு உதவியினைச் செய்து இணைந்து கடமையாற்ற அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்!


விடியல் பதிப்பகம்

உலகெங்கிலும் பாசிசம் வளர்வதற்கு அடிப்படையாக இருப்பது முதலாளித்துவ சமூக அமைப்பின் பொருளாதார நெருக்கடிகள். இவ்வமைப்பின் பொ...
24/12/2024

உலகெங்கிலும் பாசிசம் வளர்வதற்கு அடிப்படையாக இருப்பது முதலாளித்துவ சமூக அமைப்பின் பொருளாதார நெருக்கடிகள். இவ்வமைப்பின் பொருளாதாரக் கொள்கையாக விளங்கும் புதிய தாராளவாதக் கொள்கையினால் ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் கூர்மையாகும் அதே வேளையில் பாசிசமும் பல்வேறு வடிவங்களில் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மையை விளக்கும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம்.

சோவியத் கூட்டமைப்பு வீழ்ந்து உலகமயமாக்கல் பொருளாதாரத்திற்கு உலகம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் மார்க்ஸ் தன் கல்லறையில்...
24/12/2024

சோவியத் கூட்டமைப்பு வீழ்ந்து உலகமயமாக்கல் பொருளாதாரத்திற்கு உலகம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் மார்க்ஸ் தன் கல்லறையில் இருந்து மீண்டு வந்து அமெரிக்காவில் இருக்கும் சோஹோ நகரில் மக்களுடன் உரையாடுவதாக எழுதப்பட்டிருக்கிறது சோஹோவில் மார்க்ஸ் என்ற புத்தகம். புகழ்பெற்ற மக்கள் வரலாற்று அறிஞரான ஹோவர்டு ஜின், ஒரு-நபர் நாடக வடிவத்தில் ஆர்வம்கூட்டும் இந்தக் கற்பனையை வடித்துள்ளார்.

ஒருநாட்டின் அல்லது ஒரு இனத்தின் வரலாறு என்பது அந்நாளைய அரசுகள், அரசர்கள் பற்றிய செய்திகளின் தொகுப்பு மட்டுமன்று: அக்காலத...
24/12/2024

ஒருநாட்டின் அல்லது ஒரு இனத்தின் வரலாறு என்பது அந்நாளைய அரசுகள், அரசர்கள் பற்றிய செய்திகளின் தொகுப்பு மட்டுமன்று: அக்காலத்தில் கொள்கை, குறிக்கோள்களுடன் வாழ்ந்த பெருமக்களின் வாழ்க்கை நிகழ்வுகளும் அதில் அடங்கும். அவ்வகையில் தமிழாசிரியர் பணியில் ஈடுபட்டிருந்த நாட்களை இந்நூலின் மூலம் பதிவு செய்துள்ளார் புலவர் பண்ணன்.

24/12/2024

1980 ஆம் ஆண்டுக்கு சற்று முன் பின்னாக "துக்ளக்.சோ" தனது இதழில் 'எங்கே பிராமணன்' என்றொரு தொடரை எழுதினார்.இந்தத் தொடர் பார்ப்பனர்களின் பெருமையை பார்ப்பனர்கள் எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருந்தது. மேலும் கதைப்போக்கில் திருக்குறள் கற்ற ஒருவரை எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு அந்தத் தொடரில் எழுதியிருந்தார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் மாந்த நேயமுடையவரே மனிதரில் சிறந்தவராக இருக்க முடியும் என்று விளக்கும் வகையில் ‘பிராமணன் இங்கே' என்றொரு நாவலை எழுதினார் புலவர் பண்ணன் அவர்கள். இந்நூல் தமிழ்நாட்டு அரசின் பரிசு பெற்ற நாவலாகும்.

Vidiyal Pathippagam is a nonprofit book publishing house based in Coimbatore.

24/12/2024

Address

A51, Balan Nagar, Masakkalipalayam Road, Peelamedu
Coimbatore
641004

Opening Hours

Monday 10:30am - 5:30pm
Tuesday 10:30am - 5:30pm
Wednesday 10:30am - 5:30pm
Thursday 10:30am - 6pm
Friday 10:30am - 6pm
Saturday 10:30am - 6pm

Telephone

+919443468758

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vidiyal Pathippagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vidiyal Pathippagam:

Share

Category