20/09/2025
பிரியமான சகோதர சகோதரிகளே,
1920ல் அடால்ப் ஹிட்லர் நாஸி இயக்கத்தை உருவாக்கியபோது, அதற்கான கொள்கைகளை பரிசுத்த வேதாகமத்திலிருந்துதான் வடித்திருக்கக்கூடும் என்று நம்புகிறேன்; அதுவே பின்னாட்களில் (அப்போஸ்தலர் நடபடிகள் 18:2) நம் தேசம் உட்பட, உலகின் அனைத்து நாடுகளுக்குள்ளும் ஊடுறுவிக் கிடக்கின்றன என்றால் மிகையாகாது. சரி, போகட்டும். ஆனால் கிறிஸ்தவ சபைகள் தங்கள் உள்வீட்டாராலேயே சீர்குலைவடைவதைக்குறித்து தூய ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தியதையே நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்:
ஆவியானவரின் ஏவுதலின்படி பிரசங்கிப்பதையும் ஆலோசனைகள் வழங்குவதையும் புத்திமதிகள் சொல்வதையும் கிறிஸ்தவ சபைகளே ஏற்பதுமில்லை; அவ்வாறு பேசுவோரைக் குற்றங்கண்டுபிடித்து, ஆவிக்குரிய பாதிப்புக்குள்ளானோராகவும் (Spiritual Victims) ஆக்கிவிடுகிறார்கள்.
ஆவிக்குரிய பாதிப்புக்குள்ளானோர் அநேகரை பரிசுத்த பைபிளில் தொடர்ச்சியாகக் காண முடிகிறது.
உ-ம்: * இஸ்ராயேல் மக்களாலேயே தாவீதுக்கு உண்டான பாதிப்புகள்.
* யூதர்களாலேயே நெகேமியா, எரேமியா, இயேசுவின் சீடர்கள், ஸ்தேவான், பவுல்,பர்னபா போன்ற அநேகருக்கு உண்டான பாதிப்புகள்.
* யூதர்களாலேயே இயேசு பெற்ற மரண தண்டனை.
In our days also most of them are victimised by their own people.
இதுதான் இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளிலும் நடந்துகொண்டிருக்கின்றன. சொல்லப்படும் அல்லது பேசப்படும் காரியங்களைப் புரிந்து கொள்ளாமலேயே, ஊழியர்கள் மேலும் பிரசங்கிப்போர் மீதும் குற்றம் சுமத்த கொஞ்சமும் கூச்சப்படுவதுமில்லை; தங்கள் தவறுகளை உணர்ந்து கொள்வதுமில்லை. என்னைப் பொறுத்தவரை பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவன்தான் கிறிஸ்துவின் ஊழியன். இதைத் தவிர்த்து, சபை மக்களுக்கும் சபை தலைவர்களுக்குமேற்ற பிரசங்கியாயிருக்க முயல்வோமாயின், நம் திருச்சபைகள் இன்னமும் பல சீர்கேடுகளைச் சந்தித்துக் கொண்டேதானிருக்கும்.
இந்நிலையில் 20.09.2025 சனிக்கிழமை அதிகாலை 01.45 மணிக்கு திடீரென விழித்தபோது, நான் சந்தித்த சில பாதிப்புகளினிமித்தமாக பல காரியங்களைக் குறித்துக் குழம்பிய நிலையில் சிந்தித்துக்கொண்டே கிடந்தபோது, தூய ஆவியானவர் என்னை மண்டியிடச் செய்தார்.
" ..... என்னுடைய தவறுகளை எனக்கு உணர்த்தும் ஆண்டவரே ... நான் பேசியதினிமித்தமாக பிறர்முன் தலைகவிழ்ந்து நிற்க வேண்டியது உம்முடைய சித்தமா....?...."..... கண்ணீரோடு ஜெபித்தபோது, என் இடது காதிற்குள் ஒலித்த குரல்: "அப்போஸ்தலர் 18:9 - 10 " ....
அப்படியே என் தலை இடதுபக்கம் திரும்பிப் பார்த்தது; யாரையும் காணவில்லை. உடனே பரிசுத்த வேதாகமத்தைத் திறந்து அப்போஸ்தலர் நடபடிகள் எட்டாம் அதிகாரம் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வசனங்களைப் படிக்க ஆரம்பித்தேன்:
"இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்த பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்"
அப்படியே உறைந்து போய்விட்டேன்.
அந்த அதிகாரம் முழுவதையும் மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க இறையாற்றல் என்னை ஆட்கொள்வதை உணர்ந்தேன். அதைத்தான் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். தைரியமாக கிருபாசனத்தண்டை வாருங்கள்; கிருபையின் வார்த்தைகளைத் தைரியமாக பிரசங்கியுங்கள்.
ஆண்டவராகிய இயேசு எனக்குத் தந்துள்ள வசன ஊழியத்திற்காக அவரைத் துதியுங்கள். நன்றி, நன்றி.
- Dr. A. Jebasingh Joseph
Perinbha Vaalvu Ministries, Coimbatore.