
05/11/2024
Repost for new followers
Dabbe : The possession - 2013
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கபடும் பேய் படங்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் துருக்கி மொழியில் எடுக்கபடும் பேய் படங்கள் மட்டும் பயம் என்பதை விட, ஒரு அமானுஷ்ய மனநிலையை உருவாக்கும். Siccin series கூட அப்படி ஒரு மனநிலையை உண்டாக்கியது .எந்த மாதரி அமானுஷ்ய மனநிலை என்றால், உங்கள் வீட்டு வழியாக பிண ஊர்வலம் சென்ற பிறகு, அவர்கள் விசி சென்ற பூவின் வாசனை உங்களை ஒரு மாதிரி disturb செய்யும், சாலையில் நடக்கும் போது அந்த பூ மீது கால் பட்டுவிட்டால், அய்யோயோ செத்து போனவன் நம்ம கூடயே நம்ம வீட்டுக்கு வந்துர போறான் என்று தோன்றும். அப்போது எல்லாம் நம் மனம் ஒருவித மனநிலைக்கு செல்லும். அதை விவரிக்க இயலாது. அது தான் இந்த துருக்கி பேய் படங்கள் நமக்கு கொடுக்கிறது.
இந்த படத்தின் visuals எப்படி இருக்கும் என்றால்? நீங்கள் 80s 90s kids என்றால், கண்டிப்பாக நான் சொல்ல போகும் சம்பவங்களை கடந்து வந்து இருப்பிர்கள். நீங்கள் சிறு வயதாக இருந்த போது, மின்சாரம் போய் விட்டால், பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என்று எல்லோரும் ஒன்று கூடி விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றி கதை அடிப்பார்கள்.அந்த விளக்கின் வெளிச்சதிலயே அவர்கள் எல்லாம் காஞ்சனா பேய் போல தெரிவார்கள். அப்போது தான் அதிலயே வயதில் மூத்த ticket ஒன்று ஆரம்பிக்கும்.. 'Current இல்லைனு சலிச்சுகிறிங்களே, நாங்க எல்லாம் சின்ன வயசா இருக்கும் போது, கரண்டே கிடையாது.. விளக்கு தான்.. கும் இருட்டில் வயகாட்டை தாண்டி வருவேன்... அப்போ ஆறு அடிக்கு ஒரு உருவம், கருப்பு நிறம், பளிங்கி மாதரி கண்ணு மின்னுது... என்னையே வெறிக்க பார்க்குது.மாரியத்தாளா வேண்டிகிட்டு ஒடுறேன்" என்று அந்த கிழவி சொல்ல ஆரம்பித்தால் போதும் நமக்கு எல்லாம் அல்லு விட்டுரும். இந்த மாதரி பழைய ticketகள் பேய் கதை சொல்லும் போது நம் மனதில் disturbed ஆக ஒரு visuals ஓடும். அந்த மாதரி visualகளை ஒன்றாக நம் mindக்குள் புகுந்து திருடி தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். அதனால் தான் இந்த மாதரி படங்கள் எல்லாம் பயம் வருவதை விட psychologicalஆக disturb செய்யும்.
சரி dabbe- The possesion படத்தின் கதை என்ன? நம் ஊரில் கொல்லிவாய் பிசாசு என்றால், வெள்ளைக்காரன் சாத்தான் என்பான். Turkey போன்ற இஸ்லாமிய நாட்டில் அதை ஜின் என்பார்கள். எப்படிப்பட்ட ஜின்னையும் விரட்டி விடுவான் faruk. ஆனால் இதை நம்ப மறுக்கிறார் நாயகியான மருத்துவர் Ebru. நீயே ஆள் set செய்து ஜின்னை விரட்டுவது போல் நாடகம் போடுற... நான் ஒரு ஆளை காட்டுறேன்... அவ என் friend தான்.. இரண்டு வருஷமா பேய் பிடித்து இருக்கு என்று சொல்றாங்க.. ஆனா என்னை பொறுத்த வரை அவளுக்கு psychological disorder தான்... முடிஞ்சா அவளை குணப்படுத்தி காட்டு என்று அவனை கூட்டி செல்கிறாள். அவர்கள் செய்யும் அத்தனை விஷயங்களையும் cameraவில் record செய்கிறாள்..
அந்த கிரமாத்திற்கு போகும் வழியே என்னமோ 1945ல் சுடுகாட்டிற்கு போகும் வழி போல இருக்கும். இவர்கள் அந்த சாலையில் காரில் செல்லும் போது.. Head lightல் அந்த ஒத்தையடி பாதை தெரியும் போதே மனதில் திக் திக் தொடங்கி விடுகிறது. அதுவும் போகிற வழியில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி கும் இருட்டில் லைட்டை அடித்து ஒரு இடத்தை பார்ப்பார்கள்.. தக்காளி மொத்த செய்வினை செய்யும் இடம் ஒன்றை காட்டுவார்கள். மனது பக் பக் என்று அடிக்கும்... அதுவும் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும்.. உங்கள் கனவில் இடிந்த போன வீடுகளுக்கு மத்தியில் நீங்கள் நடப்பது போல கண்டு இருக்கிறிர்கள் என்றால்.. அப்படி தான் இந்த கிராம வீடுகள் இருக்கும்.. இரண்டு மணி நேரம் படம் ஓடுகிறது.. ஆனால் தெரியவில்லை. இரவு நேரத்தில் தனியாக இருக்கும் போது பார்த்து விடாதீர்கள்.. Sound effectஏ உங்களை கக்கா போக வைச்சுரும். மீதி படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இது பயம் மூட்டும் படம் என்பதை விட உங்களை disturb செய்யும் படம். கடைசியில் இது ஒரு உண்மை சம்பவம் என்று போட்டார்கள். அடி ஆத்தி என்று தோன்றிற்று. Dabbe seriesல் இது நான்காவது பாகமாம்.. நான் இதை மட்டும் தான் பார்த்தேன். ஓவ்வொரு பாகமும் ஒவ்வொரு கதை என்பதால் நீங்கள் வரிசையாக பார்க்க வேண்டும் என்று இல்லை.. அதனால் தான் நான் directஆக DABBE - the possession பார்த்தேன்
பேய் பட விரும்பிகள்.. தாரளமாக பார்க்கலாம். பேயிற்கு பயப்படுவார்கள், தப்பி தவறி கூட இந்த படம் பக்கம் வந்து விடாதீர்கள்.. அப்புறம் ஜீன் உங்க நெஞ்சு மேல ஏறி குத்த வைச்சு உட்கார்ந்து உங்களையே குறு குறு என்று பார்க்கும்..
நன்றி
மைலோ