Colachel Today /குளச்சல் டுடே

  • Home
  • Colachel Today /குளச்சல் டுடே

Colachel Today /குளச்சல் டுடே ᴡᴇʟᴄᴏᴍᴇ ᴛᴏ ᴛʜᴇ ᴏFFɪᴄɪᴀʟ ᴩᴀɢᴇ oF ᴄᴏʟᴀᴄʜᴇʟ ᴛᴏᴅᴀy

"குளச்சல்" – தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக முக்கிய வரலாற்று சிறப்புமிக்க துறைமுக நகரம்.
(2)

Everything About kanniyakumari district . Our Insta Page : https://www.instagram.com/colachel_today

குளச்சல் அருகே திருட வந்த இடத்தில் சில்மிஷம்குளச்சல் அருகே உள்ளே ஒரு கிராமத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் தனியாக ...
07/10/2025

குளச்சல் அருகே திருட வந்த இடத்தில் சில்மிஷம்

குளச்சல் அருகே உள்ளே ஒரு கிராமத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது அதிகாலை கொள்ளையன் ஒருவன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார். அப்போது அப்பெண்ணை பார்த்த கொள்ளையன் திருட வந்ததை மறந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றார். அப்போது பெண் கூச்சலிட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த ஜோஸ் ஆன்றனி(24) என்பவரை கைது செய்தனர்.

Thankyou ......♡⁠‿⁠♡
07/10/2025

Thankyou ......♡⁠‿⁠♡

06/10/2025

நாகர்கோவில் கோணம் அனந்தனார் கால்வாய்க்குள் எதிர்பாராத விதமாக கவிழ்ந்த டாரஸ் லாரி. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயர்த்தப்பினார். லாரியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி செய்ய கோரிக்கைகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்,தேங்காய்பட்டணம்,  குலசேகரம், குளச்சல், தக்க...
06/10/2025

ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி செய்ய கோரிக்கை

குமரி மாவட்டம் மார்த்தாண்டம்,
தேங்காய்பட்டணம், குலசேகரம், குளச்சல், தக்கலை பகுதிகளில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையுவும். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து செல்லவும் நேரடி பேருந்துவசதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளா ஸ்கூட்டர் குமரியில் மீட்புமார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு ஸ்கூட்டர் நீண்ட நாட்களாக நின்றது. போலீசார...
06/10/2025

கேரளா ஸ்கூட்டர் குமரியில் மீட்பு

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு ஸ்கூட்டர் நீண்ட நாட்களாக நின்றது.

போலீசார் அதற்கு அபராதம் விதித்தபோது கேரளா கொல்லம் பரவூர் ஷீலாவின் ஸ்கூட்டர் என்பதும், 7 மாதத்திற்கு முன் அது திருட்டு போனதும் தெரிந்தது.

நேற்று ஷீலா மார்த்தாண்டம் வந்து ஸ்கூட்டரை திரும்ப பெற்று சென்றார். கொல்லத்தில் திருடிய ஸ்கூட்டரை மார்த்தாண்த்தில் வைத்து விட்டு திருடன் சென்றிருக்கலாம் என போலீசார் கூறினர்.

பைக் விபத்தில் பார்மசிஸ்ட் உயிரிழப்புகுமரி மாவட்டம் சென்னித்தோட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் (27) வெளிநாட்டில் பார்மசிஸ்டாக வேல...
06/10/2025

பைக் விபத்தில் பார்மசிஸ்ட் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சென்னித்தோட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் (27) வெளிநாட்டில் பார்மசிஸ்டாக வேலை செய்து வந்தார்.

தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவர் விக்னேஷ்(25) என்பவருடன் அக்.4 அன்று இரவு பைக்கில் காப்புக் காடு ரோட்டில் சென்றபோது தட்டவிளை பகுதியில் மின்கம்பத்தில் பைக் மோதியது.

இதில் ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

05/10/2025

கன்னியாகுமரியில் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கடற்கரை திடலில் அமர்ந்து சூரிய உதயத்தை ரசித்து குடும்பத்துடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தையும் பார்வையிட்டனர்

05/10/2025

கன்னியாகுமரி மாணவி ஆல் இந்தியா டாப்பர் ரேங்க் சாதனை

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மாதவலாயத்தைச் சேர்ந்த அப்துல் காதர் – செய்யதலி தம்பதியினரின் மகளும், மஹ்பூப் ஹுஸைன் அவர்களின் மனைவியுமான குல்ஃபியா அவர்கள், SMRV கல்லூரியில் கம்பியூட்டர் புரோகிராமர் அஸிஸ்டண்ட் படிப்பு படித்து தேர்வு எழுதியதில் முதல் தரம் (All India Topper Rank) பெற்றிருக்கிறார்கள். அவருக்கு பிரதமர் மோடி பாராட்டி விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் குல்ஃபியாவின் இந்த சாதனை, தமிழ்நாட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

குளச்சல்: மாயமான சிறுவர்களை கண்டுபிடிக்க கேட்டு ஆர்ப்பாட்டம்குறும்பனையைச் சேர்ந்த ராஜம் என்பவரின் மகன்கள் இருவர் கடந்த 2...
04/10/2025

குளச்சல்: மாயமான சிறுவர்களை கண்டுபிடிக்க கேட்டு ஆர்ப்பாட்டம்

குறும்பனையைச் சேர்ந்த ராஜம் என்பவரின் மகன்கள் இருவர் கடந்த 2023 நவம்பர் 3 அன்று சைமன்காலனி கடற்கரையில் மாயமான சம்பவத்தில், சிறுவர்கள் கடலில் தவறி விழுந்து இறந்ததாக போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதை ஏற்க மறுத்த தாயார், சிறுவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் லெனினின்ட் (செங்கொடி) சார்பில் நேற்று குளச்சல் காமராஜர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

04/10/2025

பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு காவல் உதவி எண்கள் QR குறியீடு வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள்

SCAN CONNECT RESOLVE

ஆட்டோ மற்றும் பொதுத்துறை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை மற்றும் அனைத்து துறை எண்கள், கம்ப்ளைன்ட் போர்டல் அடங்கிய QR குறியீட்டை இன்று 04-10-25 தொடங்கி வைத்தார்கள்.

உதவி எண்கள்


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் whatsapp எண்
அனைத்து காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள்,

மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு தொலைபேசி எண்

தீயணைப்புத் துறை

குழந்தை பாதுகாப்பு,

பெண்கள் பாதுகாப்பு

நெடுஞ்சாலைத்துறை

ஆம்புலன்ஸ் உதவி
மற்றும் அனைத்து துறை உதவி எண்கள்

புகார்கள் பதிவு செய்ய

Tamilnadu Police Citizen portal
சைபர் குற்றங்கள் பதிவு செய்வது,
செல்போன் மிஸ்ஸிங்(CEIR portal)

சமூக வலைதள பக்கங்கள்
குமரி மாவட்ட காவல்துறையின்
Facebook
Instagram
Twitter ஆகிய சமூக வலைத்தள பக்கங்கள்

ஆகியவற்றை இந்த QR கோடு பயன்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்..

03/10/2025

ஒருவர் உயிரிழப்பு

இன்று குமரி மாவட்டம் மணவாளகுறிச்சி பாலம் சந்திப்பில் அரசு பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார் .

ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்

3.10.25

Address


Alerts

Be the first to know and let us send you an email when Colachel Today /குளச்சல் டுடே posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share