29/09/2026
🌧️ பஸ் வசதியும் இல்லை... அடுப்பின் சூட்டில்காய்ந்த வெள்ளை ஷூ! – எங்கள் லிட்டில் பிளவர் நினைவுகள் 🏫💔✨
30 ஆண்டுகள் கடந்துவிட்டன... ஆனால் அந்த மழைக் காலத்தையும் நாங்கள் பள்ளிக்கு நடந்தே சென்று அந்த குறுகிய வழி இன்னும் நெஞ்சிலேயே இருக்கிறது! 🌿☔
எங்கள் பள்ளி ஒரு சாதாரண பள்ளி அல்ல. தேயிலைத் தோட்டத்தில் நாள் முழுதும் வேர்வை சிந்தி உழைக்கும் எளிய தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்த தாய்வீடு 🍃. 'நாளைக்கு என்ன நடக்கும்?' என்று தெரியாத அளவுக்கு வறுமை சூழ்ந்த குடும்பங்கள்... பெரும்பாலான பெற்றோருக்கு நாங்கள் என்ன படிக்கிறோம் என்று கூடத் தெரியாது. அவர்கள் சீக்கிரமே வேலைக்குக் கிளம்பிவிடுவார்கள் 💔.
பஸ்ஸிற்குத் தருவதற்கு கையில் காசு இருக்காது; பல கிலோமீட்டர் மழையிலும் குளிரிலும் நடந்தேதான் பள்ளிக்குச் செல்வோம் 🚶♀️🌧️. வழியில் கிடைக்கும் அந்த 50 பைசா எலந்தப்பழமும், விக்கி பழமும் வாங்கி தோழிகளோடு பகிர்ந்து தின்ற அந்த நாட்களின் சுவை, இன்று எந்த சொகுசு உணவகத்திலும் கிடைக்காது 😋🍒.
ஸ்போர்ட்ஸ் டே (Sports Day) வந்துவிட்டால் எங்களுக்குள் ஒரு தனி புதுக்களிப்பு தொற்றிக்கொள்ளும் 🏃♀️🏆! அப்போது போட்டுக் கொள்ள ஒரே ஒரு வெள்ளை நிற ஷூதான் இருக்கும். மழை பெய்து சேறாகிவிட்டால், அந்த ஷூவிற்கு மேலே வெள்ளையைப் பூசி, அடுத்த நாள் காலையில் போட்டுச் செல்வதற்காக இரவெல்லாம் அடுப்பின் மிதமான சூட்டில் வைத்து காயவைப்போம் 🔥👟. அந்த அடுப்பின் வெக்கையிலேயே காலைக்குள் ஷூ நன்றாகக் காய்ந்துவிடும் 🥹
ஆசிரியர்களின் கடுமையான கண்டிப்பு, தவறினால் விழும் பிரம்படிகள்... ஆனால் அந்த கண்டிப்பிற்குப் பின்னால் இருந்த அளப்பரிய அன்புதான் இன்று எங்களை சமூகத்தில் ஒரு நல்ல நிலையில் நிறுத்தியிருக்கிறது 🕯️🙏.
தோழிகளுடன் கைகோர்த்து நடந்த நாட்கள், பள்ளித் தோழர்களைக் கண்டாலே வெட்கப்பட்டு தலைகுனிந்து கடந்துசென்ற அந்த அப்பாவித்தனமான பருவம்... 🙈👭 இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த 'ரீயூனியன்' விழாவில் அனைவரையும் மீண்டும் கண்டபோது, கண்ணீர் துளிர்க்காமல் இருக்க முடியவில்லை 💧.
இன்று நாம் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கலாம் கைநிறைய சம்பாதிக்கலாம்... ஆனால், அந்த எளிய சூழ்நிலையும், பகிர்ந்து உண்ட பாசமும், எங்களை மனிதர்களாக மாற்றிய அந்த லிட்டில் பிளவர் பள்ளியும் தான் எங்கள் அடையாளம்! ❤️🏫
இந்த வரலாற்று நிகழ்வை ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடியதில், ஒரு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக (Organizing Committee Member) இருந்ததை என் வாழ்நாளின் பெருமையாகக் கருதுகிறேன் 👑🎖️.
நமது பள்ளி என்றென்றும் நம் உயிரோடு கலந்தது! 🌸✨
#தாயறிவு