05/09/2025
கோவில் அருகே மண்ணிலிருந்து முடி 😨 வேகமாக வளர்ந்து வரும் அதிசயம் !! கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் கண்டு வணங்கி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சின்ன தகரகுப்பம் பகுதியில் பெரியாண்டவர் முனீஸ்வரன் ஆலயம் உள்ளது, அதற்கு அருகே தரையில் மனித முடி கொத்தாக இருந்துள்ளது,
பின்பு நாளடைவில் அந்த முடி வேகமாக வளர தொடங்கியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் அதைத்தொண்ட முயன்றுள்ளனர்.
மண்ணுக்கு அடியிலும் முடி நீளமாக சென்றதால் பயந்து விட்டு விட்டனர்அந்த முடியை பிடித்து இழுக்க முயன்ற ஒருவர் அன்று இரவு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியதால் பொதுமக்கள் ஒன்று கூடி அங்கு பூஜை செய்ய தொடங்கினர்.