
07/12/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு,
மிகுந்த கண்ணியத்திற்கும், பெரும் மரியாதைக்குமுரிய, கண்மனி நாயகத்தின் வழித்தோன்றலும்,ஆரணி பாவாவின் கலீபாவும்,உடுமலை பூர்வீக பள்ளியின் தலைமை இமாமாகவும் மேலும் பல்வேறு மார்க்கப்பணியின் ஒளிவிளக்காகவும் திகழ்ந்த மாசற்ற பண்பாளரும், பணிவின் குன்றாகவும் வாழ்ந்த அல்ஹாஜ் S.M.ஈஸா பைஜி ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்கள் இவ்வுலகைப்பிரிந்து மறுமையின் பயணத்தை தொடர்ந்துள்ளார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஹழ்ரத் அவர்களின் கப்ரின் வாழ்வும்,மறுமை வாழ்வும் சிறப்படைய நாம் அனைவரும் துஆ செய்வோமாக!
கருணையாளன் அல்லாஹ் அவர்களோடு மறுமையின் அனைத்து படித்தரங்களிலும் நலவாக நடந்து கொள்வானாக! ஆமீன்.
அவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் தஆலா அழகிய பொருமையை தந்தருள்வானாக! ஆமீன்.