Thagadur

Thagadur News and Media
Computer Sales & Services

தஞ்சாவூரில், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
22/07/2025

தஞ்சாவூரில், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய தொகுதிகளில் பேசினார். தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரே பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமியுடன் ஆர்.காமராஜ், மா.சேகர் உள்ளிட்டோர் வந்தனர். மாநகர செயலாளர் சரவணன், எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல் மற்றும் நெற்கதிர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசத்தொடங்கியதும், அந்த பி.ஜே.பி கொடியை கீழே இறக்குங்க மறைக்குது என்றார். ``முதல்வர் ஸ்டாலின் 50 மாதங்களை வீணாக்கி விட்டார்....

தஞ்சாவூரில், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி ...

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்த...
22/07/2025

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துணை முதல்வராக இருந்துகொண்டே 'Hari Hara Veera Mallu' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுவே பவன் மக்கள் பணியில் இல்லை என்ற விமர்சனத்தை கிளப்பியது. இப்படம் இந்த வாரம் வியாழக்கிழமை ஜுலை 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பாஜக-வின் அரசியலை பேசிவரும் பவன் கல்யாண் இந்து மதத்தைக் காப்பதற்காகப் போராடும் இக்கதையில் நடித்திருக்கிறார்....

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்த....

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதிய...
22/07/2025

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம். பெற்றோரை இழந்த நிலையில், தனது பாட்டியுடன் சிறுமி திஷியா வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது உறவினர்களுடன் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பம் பெற வேண்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்குக் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை அலுவலகத்திற்குச் சென்ற சிறுமி திஷியா அங்கிருந்த அதிகாரிகளிடம், "நானும் படித்து மாவட்ட ஆட்சியர் ஆகப் போகிறேன்" எனக் கூறியுள்ளார்....

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், .....

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நி...
22/07/2025

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது. மத்திய அரசு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற முடியவில்லை. நிமிஷா பிரியா வழக்கு பின்னர், கேரளாவின் 'கிராண்ட் முஃப்தி' என அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் என்பவர் இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டி ஈரானின் உலகப் புகழ்பெற்ற சூஃபி அறிஞர் ஹபீப் உமர் பின் ஹஃபீஸை தொடர்புகொள்ள, அவர் தரப்பினர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் ஏமன் ஜனாதிபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்....

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான க...

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள்,...
22/07/2025

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு ஆலை இயங்கி வருகின்றன. இந்தப் பட்டாசு ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். சேதம் அடைந்த பட்டாசு ஆலை இந்தப் பட்டாசு ஆலைகளில் மனிதத் தவறுகள் மற்றும் இயற்கை காரணமாக அடிக்கடி வெடிவிபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் 2023-ல் விருதுநகர் கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாகத் தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் வழக்கை விசாரித்தது வருகிறது....

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழ....

ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்த இடத்தில் மல்லை சத்யா இருந்தார். கொரோனா நேரத்தில் வைகோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அ...
22/07/2025

ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்த இடத்தில் மல்லை சத்யா இருந்தார். கொரோனா நேரத்தில் வைகோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் திடீரென துரை வைகோ கட்சிக்குள் என்ட்ரியானர். பிறகு ம.தி.மு.க-விலிருந்த சீனியர் நிர்வாகிகளுக்கு எதிராக லாபி செய்யத் தொடங்கினார். அந்த வரிசையில் மல்லை சத்யாவையும் சீண்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் 'ஈகோ' மோதல் உச்சமடைந்து. ஒரு கட்டத்தில் வைகோவிடம், 'மல்லை சத்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்' எனத் துரை வைகோ தெரிவித்தார். அதற்கு வைகோ சம்மதிக்கவில்லை. இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இருப்பினும் இருவருக்கும் இடையிலான 'ஈகோ' மோதல் தொடர்ந்தது....

ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்த இடத்தில் மல்லை சத்யா இருந்தார். கொரோனா நேரத்தில் வைகோவுக்கு உடல்நலக்குறைவு ஏற.....

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்க...
22/07/2025

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறிவுக் களஞ்சியமாக விளங்கினாலும், தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பராமரிப்பின்றி விடப்பட்ட இந்தக் கட்டடம், மேற்கூரை உதிர்ந்து, சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின் வயர்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல், மின்சார விபத்துகளை ஏற்படுத்தும் அபாயகரமான சூழலில் உள்ளது. மழைக்காலங்களில் கட்டடத்திற்குள் தண்ணீர் ஒழுகுவதால், வரலாறு, இலக்கியம், நாவல்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனையாளர்களின் கட்டுரைகள், ஆன்மிகம், சமையல் குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மதிப்புமிக்க புத்தகங்கள் நனைந்து சேதமடைகின்றன....

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500...

நேற்று (ஜூலை 21) பிற்பகல் 1 முதல் 2 மணி அளவில் நடந்த வங்கதேச ராணுவ விமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் ...
22/07/2025

நேற்று (ஜூலை 21) பிற்பகல் 1 முதல் 2 மணி அளவில் நடந்த வங்கதேச ராணுவ விமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 7 பிஜிஐ என்ற போர் பயிற்சி விமானம் ஒன்று அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்பட்டதில் நேற்றுவரை 19 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன. இன்று இவ்விபத்தின் பலி எண்ணிக்கை 27-ஆக உயிரிழந்திருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது....

நேற்று (ஜூலை 21) பிற்பகல் 1 முதல் 2 மணி அளவில் நடந்த வங்கதேச ராணுவ விமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலை....

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக `ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்த...
22/07/2025

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக `ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதிலிருந்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மோடி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளைக் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டி பேசி வருகிறார். மறுபக்கம், இதே விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை முன்வைத்து மோடியின் மௌனம் மற்றும் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்த காங்கிரஸ், சசி தரூரின் பேச்சுக்களால் அதிருப்தியானது. சசி தரூர், மோடி இதை மேலும் பெரிதாக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அமைக்கப்பட்ட குழுவில் காங்கிரஸ் பரிந்துரைக்காத சசி தரூரை சேர்த்து, அக்குழுவுக்கு அவரை தலைவராகவும் நியமித்தது மத்திய பா.ஜ.க அரசு....

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக `ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்....

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியி...
22/07/2025

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சில தினங்களில் செயல்பட இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணி தொடங்கப்பட்டபோது, அதை வைத்து பணம் சம்பாதிக்க மோசடிக் கும்பல் திட்டமிட்டது. அதன்படி, `ஜிப்மர் மருத்துவமனைக்கு செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். மத்திய அரசு நிறுவனம் என்பதால் கை நிறைய சம்பாதிக்கலாம். மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம். முதலில் வருபவர்களுக்குத்தான் முன்னுரிமை’ என்று அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு ஆசை காட்டிய அந்தக் கும்பல், அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் சுருட்டியது....

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்ப....

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய உலகப் புகழ் பெற்ற உருவக புதினம் விலங்குப் பண்ணை. இங்கிலாந்தில் 1945 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 17 ஆம் தேதி...
22/07/2025

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய உலகப் புகழ் பெற்ற உருவக புதினம் விலங்குப் பண்ணை. இங்கிலாந்தில் 1945 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்நாவல் ஏறத்தாழ உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எழுதப்பட்ட காலத்தில் கம்யூனிஸத்தை கிண்டல் செய்த இந்நாவலை, இப்போது எதேச்சதிகாரம் செய்யும் எந்த சித்தாந்தத்துடனும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். தனிநபர் வசம் சிக்கிக்கிடக்கும் சர்வாதிகாரத்தை நையாண்டிச் செய்கிறது, ‘விலங்குப் பண்ணை. லெனினுக்குப் பிந்தைய, கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் அரசியலை கடுமையாக விமர்சிக்கும் இந்நாவல் இப்போது Audio Formatல் Vikatan Playல்

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய உலகப் புகழ் பெற்ற உருவக புதினம் விலங்குப் பண்ணை. இங்கிலாந்தில் 1945 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 17 ஆம் ...

‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.  லேசான தலைச்சுற்...
22/07/2025

‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று(ஜூலை 21) அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் ‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்’ என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் சமூக வலைதள பதிவில், “ ‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார். ...

‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். லே.....

Address

Dharmapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thagadur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share