S chinnaraj Dindigul

S chinnaraj Dindigul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S chinnaraj Dindigul, Dindigul.

19/06/2025

ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.

அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை "கீரை" ஆகின்றது

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "தழை".

நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் "தாள்" ஆகின்றன.

சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்குப் பெயர் "மடல்".

கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் "தட்டு" ஆகின்றன.

கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் "தோகை" (சோகை) என்றாகின்றன.

தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் "ஓலை" என்று சொல்லப்படுகின்றன.

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.

இதுவே தமிழின் சிறப்பு....

படித்ததில் பகிர்ந்தது

08/06/2025

நிலத்தை வைத்திருக்கும்
உரிமையாளர் ஒரு நிலத்தையோ,
அல்லது மனையையோ அளக்க
முற்படும் பொழுது பெரும்பாலும்
அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை...

குறிப்பாக நிலவரைபடம்
FMB பற்றி தெளிவாக
நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத
ஒரு புதிராகவே இருக்கிறது.
எனவே ஒரு நிலத்தை எப்படி
அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

• 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560

26/05/2025

#பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.
அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்....

கோவில் உண்டியலுக்கு செலுத்தினால் #காணிக்கை...

யாசிப்பவருக்கு கொடுத்தால்
#பிச்சை...

அர்ச்சகருக்குக் கொடுத்தால்
#தட்சணை....

கல்விக் கூடங்களில்
#கட்டணம்...

திருமணத்தில்
#சீதனம்....

திருமண விலக்கில்
#ஜீவனாம்சம்....

விபத்துகளில் இறந்தால்
#நஷ்டஈடு...

இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் #காப்பீடு....

வங்கிகளில் வைத்தால் #வைப்புந்தொகை...

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
#தர்மம்....

நாமாக விரும்பி ஏழைகளுக்குக்
கொடுத்தால்
#தானம்...

திருமண வீடுகளில் பரிசாக
#மொய்...

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது
#கடன்....

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது
#அன்பளிப்பு...

விரும்பிக் கொடுத்தால்
#நன்கொடை....

நீதிமன்றத்தில் செலுத்தினால்
#அபராதம்....

அரசுக்குச் செலுத்தினால்
#வரி....

அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு
கொடுத்தால் அது
#நிதி...

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது
#சம்பளம்...

தினமும் கிடைப்பது
#கூலி...

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம்.....

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்
#லஞ்சம்...

கடன் வாங்கினால் அத்தொகைக்கு
#அசல்...

வாங்கியக் கடனுடன்
கொடுக்கும் போது
#வட்டி....

தொழில் தொடங்கும் போது
#முதலீடு...

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #லாபம்.....

குருவிற்குக் கொடுக்கும் போது #குருதட்சணை....

ஹோட்டலில் நல்குவது
#டிப்ஸ்.....

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...
இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்...

சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்...

சிலர் உறவுகளை இழக்கின்றனர்...

சிலர் கற்பை இழக்கின்றனர்...

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...

பலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்....

நீங்கள் வாங்கும் நிலம் உண்மையிலே உங்கள் சொத்தா?நம்ம தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் – ECR, OMR, ...
17/04/2025

நீங்கள் வாங்கும் நிலம் உண்மையிலே உங்கள் சொத்தா?

நம்ம தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் – ECR, OMR, சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர், செங்கல்பட்டு மாதிரி ஏரியால வியாபாரம் சூடா நடக்குது.

ஆனா…
நீங்க வாங்குற நிலம் உண்மையான பத்திரமா? இல்ல அரசுக்கு சேர்ந்த "புறம்போக்கு" நிலமா?
இதைக் கேட்கறதுக்கு ரொம்ப பேர் தயங்குறாங்க.

ஆனா வாங்குறதுக்கு கையில் லட்சக்கணக்கா பணம் வைச்சுக்கிட்டு,
அடிப்படை தகவல தெரியாம விட்டுட்றாங்க.

வில்லங்கச் சான்றிதழ் ( EC ) இருக்குதே, எனக்கேன்ன பிரச்சனை?" – இது தான் முதல்ல ஆபத்து!
பெரும்பாலானவர்கள் என்ன நம்புறாங்க தெரியுமா?

வில்லங்கச் சான்றிதழ் (EC) இருக்கா? அப்டினா எல்லாம் சரி தான்!"

EC-ல பார்த்தா, அந்த நிலம் மேல யாரும் அடமானம் ( mortgage ) வைக்கல, வழக்கு ( legal case ) இல்லன்னு தான் சொல்லுது.
ஆனா, அது அரசு நிலமா, நத்தம் நிலமா, மேய்க்கால் நிலமா – அதெல்லாம் EC-ல வராது.
அதான் நமக்கு வைக்கப்பட்ட பொறி! ( biggest trap )

தமிழ்நாட்டுல சில வகை நிலங்கள் பொது உபயோகத்திற்காகவே விடப்பட்டிருக்கு.

✅புறம்போக்கு நிலம்:

பொதுவான பயன்பாட்டுக்கே – சாலை, ஆற்றங்கரை, இடைநிலம்

✅நத்தம் நிலம்:

குடிசை கட்ட தற்காலிகமாக அனுமதிக்கப்படும் அரசு நிலம்

✅மேய்க்கால் நிலம்:

மாடு, மஞ்சுகள் மேய வைக்கும் இடம்

✅ஏரி சார்ந்த நிலம்:

Buffer area – நிலக்கரை / நிலநீர் பாசன சேமிப்பு

இந்த இடங்கள்ல சொந்தமா யாரும் மனையோ மொத்த இடமும் வைக்ககூடாது.
இருந்தால் கடுமையான வழக்குகள் வந்து நிலமும், வீடும் தொலைஞ்சுடும்!

Urban Land Development-ல் இருக்கா? – அதையும் பாருங்க!

நீங்க வாங்குற நிலம் CMDA / DTCP approval area-க்குள்ளா வருதா?
அது Urban Land Ceiling (ULC) Act-ல் excess land-a classify பண்ணிருக்காங்களா?
அல்லது Master Plan-படி future development zone ஆக பதிவா இருக்கு?

இது எல்லாமே பாத்து தான் வாங்கணும்.
சிலர் அரசு நிலங்களை ( Government lands ) தனியார் மனை பிரிவு ( private layout ) மாதிரி மறு விற்பனை ( resale ) பண்ணறாங்க – பின்னாடி பிரச்சனை வருது!
அதனால, ULC clearance, CMDA zone, Master Plan extract –
இவையெல்லாம் ஆராய்ச்சி பண்ணுறது அவசியம்!

புறம்போக்கு நிலத்தை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது ?

குறிப்பிட்ட சர்வே எண்ணின் வரைபடம் சொத்திற்கு உரிய கிராமத்தின் வரைபடம் ( FMB Sketch / Village Map ) மூலமா
நிலம் எந்த இடத்துல இருக்கு, அரசு நிலத்தின் எல்லைக்குள் ( Govt boundary ) வருகிறதா இல்லையா என்று சரி பார்க்க வேண்டும்.

✅அ-பதிவேடு- ல
( A-Register Copy )

அந்த நிலம் எந்த வகைன்னு வருவாய் துறை ஆவணங்களிள் ( Revenue Records ) பதிவு பண்ணிருப்பாங்க அத பாக்கணும்.

✅பட்டா காப்பி ( Patta Copy )

ரெகுலர் பட்டால இருக்கா? அல்லது, அசைன்மென்ட் பட்டா ( Assignment Patta ) மாதிரியான ஆபத்தான ஆவணமா இருக்கா ?

✅டி.எஸ்.எல்.ஆர்/ யூ டி ஆர் / அர்பன் ஜோன் - ல( Town Survey Number / UDR Record
Urban zone ) இருக்கா? சர்வே எண் ( Survey Number ) சேர்க்கப்பட்டுள்ளதா?

✅RTI – DRO / Revenue Dept / CMDA:
அந்த நிலம் ULC-ல இருக்கா? Govt acquisition pending?

இது எல்லாத்தையும் தெரிஞ்சு தான் நிலம் வாங்கணும்.
மட்டுமல்ல – வாங்கியவங்க கூட verify பண்ணிகிட்டீங்கன்னா நல்லது.

வாங்கறதுக்கு முன்னாடி இந்த 5 கேள்விக்குள்ள பதில் இருக்கணும்:

1, EC மட்டும் இருக்கா, இல்லை Patta-வும் சரியா இருக்கா?

2, அந்த நிலம் எந்த Survey Map-ல் locate பண்ணலாம்னு தெரியுதா?

3, Govt land-க்கேச்சா overlaps பண்ணுதா?

4, பழைய ஆவணம் மட்டும்தான் இருக்கா?

5, பக்கம் ஏதாவது ஏரி, குளம், Government Reserve Area இருக்கா?

2023ல OMR பக்கம் ஒரு அப்பார்ட்மெண்ட் விற்கப்பட்டது.
பின்னாடி அது ஒரு பாறை நிலம் – govt land. அப்படின்னு தெரியவந்தது
50 பேருக்கு மேல பாதிக்கப்பட்டாங்க…
நீதிமன்ற வழக்கு நடந்து, அப்பார்ட்மெண்ட்டை இடிக்க ஆர்டர் (demolition notice ) வந்துச்சு.

சிறு தகவல், பெரிய பாதுகாப்பு!

சொத்து வாங்குறதுன்னா அது வாழ்க்கை முழுக்க நிம்மதியா இருக்கணும்னு தான்.
ஆனா, govt land, purambokku, illegal resale, fake patta – இந்த மாதிரி விஷயங்கள் வந்துட்டா,
இழந்த காசு – புயலால தூக்கற மாதிரி தொலைஞ்சுரும்!

நிலம் மட்டும் வாங்காதீங்க… நிம்மதியையும் வாங்குங்க!
அதுக்காக… பரிசோதனை செய்யாம ஒரே ஓட்டத்தில் போகாதீங்க!

நீங்க வாங்கற இடம் – அரசுக்கும் பிரச்சனையில்ல, ஆவணத்துக்கும் குறைச்சலில்லனு வழக்கறிஞர் ஓட ஒப்புதல் பெற்று
advocate opinion, records verification, CMDA check, map analysis –
எல்லாம் பண்ணிட்டு தான் இறுதி முடிவு எடுக்கணும்!

இது போன்ற மேலதிக தகவல்களுக்கு whatsapp மூலம் இணைய
https://chat.whatsapp.com/LjypKO4KmLSDpkMOwq2gVo

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு
( FAIRA )

S.K முத்துராமன்,

நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் ( FAIRA )

#புறம்போக்கு #பட்டா #சிட்டா #அடங்கல் #வில்லங்கசான்றிதழ் #வருவாய்த்துறை #மேய்க்கால்புறம்போக்கு #ஆவணம் #பத்திரம்

08/04/2025

நில அளவுகள் அறிவோம்.

1 ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்

1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்

1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்

1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்

1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்

1 ஏக்கர் – 100 சென்ட்

1 சென்ட் – 435.6 சதுர அடிகள்

1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்

1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்

1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்

1 மீட்டர் – 3.281 அடி

1 குழி – 44 சென்ட்

1 மா – 100 குழி

1 காணி – 132 சென்ட் (3 குழி)

1 காணி – 1.32 ஏக்கர்

1 காணி – 57,499 சதுர அடி

1 டிசிமல் – 1 1/2 சென்ட்

1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)

1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)

1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)

1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)

1 கிலோ மீட்டர் – 3280 அடி

1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு

1.61 கிலோ மீட்டர் – 1 மைல்

1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)

1 செயின் – 66 அடி (100 லிங்க்)

1 லிங்க் – 0.66 அடி

1 கெஜம் – 3 அடி

8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)

1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)

22 கெஜம் – 1 செயின் (66 அடி)

10 செயின் – 1 பர்லாங்கு

1 இன்ச் – 2.54 செ.மீ

1 செ.மீ – 0.3937 செ.மீ

1 கெஜம் – 0.9144 மீட்டர்

1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)

1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்

1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்

30 சதுர மைல் – 1 டவுன்சிப்

640 ஏக்கர் – 1 சதுர மைல்..

தெரிந்து கொள்ளுங்கள்....

04/04/2025

திண்டுக்கல் மாவட்டம்
கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் -
மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ் விதி 15-ன்படியும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும், தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ன் கீழ் விதி 42B-ன்படியும், தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950-ன் கீழ் விதி 113-ன்படி, அனைத்துத் தொழிற்சாலைகளிலும், மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்டு பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும்.

கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பார்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். பின்னர் ஆங்கிலத்திலும், அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழியிலும் அமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களைத் தலைவராகவும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) உறுப்பினர் செயலராகவும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் மாவட்ட அளவிலான வேலையளிப்பவர் சங்கம் உறுப்பினராகவும் கொண்டு மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லுரிகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 2025 மே 15-க்குள் 100 சதவீதம் தமிழ் பெயர்ப்பலகை வைக்கப்படுவதை உறுதி செய்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும், 2025 மே 15-க்குள் தமிழில் யெர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும்.

எனவே, அனைத்து கடைகள், வணிக சங்கங்கள் உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் சங்கங்கள் தங்களின் குழு உறுப்பினர்களுக்கு இந்தத் தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ்ப் பெயர்ப்பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன் அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.

25/03/2025

பத்திர பதிவு சட்டம் 22A மற்றும் 22B

சுற்றறிக்கை (Circular)
கடித எண்- 33760 / U1 / 2022,Date - 27-09-22

பத்திர பதிவு துறை அவ்வப்போது அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடுகின்றன. இது பதிவுத்துறையில் வேலை செய்யும் அதிகாரிகளுக்கும், பதிவாளர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொருந்தும்.

போலி பதிவு ஆவணம் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனை முற்றிலும் கட்டுப்படுத்த அரசு அவ்வப்போது கடும் சட்டம் கொண்டு வருகின்றது. அந்த வகையில் 22 A மற்றும் 22 B கடந்த அக்டோபர் 2022 ஒரு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது.

22A மற்றும் 22B போலியான ஆவணமாக கருதப்படும் மனைகள் அல்லது பதிவுகள்

1. நகர்ப்பகுதிகளில் உள்ள நிலங்கள், கிராம பஞ்சாயத்திற்கு கீழ் உள்ள நிலங்கள் மற்றும் சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட அரசு நிலங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அரசு நிலங்களுக்கு போலியான பத்திரம் தயாரித்து இருந்தால் அது போலியான ஆவணமாகும்.

2. கிரையம் பெற்ற நபருக்கு அல்லது சொத்தின் உரிமையாளர் சொத்தை அவருக்கே தெரியாமல் பதிவு செய்வது போலியான ஆவணமாக கருதப்படும்.

3. ஏற்கனவே போலியான ஆவணம் என்று அரசால் எழுதப்பட்ட ஆவணம் தெரிந்தும் மறுபடியும் அதற்கு ஆவணம் தயாரித்து பதிவு செய்தல்.

4. வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் வாரிசு சான்றிதழ் போலியானதாக இருந்து பத்திரம் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதுவும் போலியான ஆவணமாக கருதப்படும்.

5. 20.10. 2016 பிறகு அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்திருந்தால் அந்த பதிவும் போலியானது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA )
S.K.முத்துராமன்,
நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர்,( FAIRA)
98 43 43 8000.

24/03/2025

சுய ஒழுக்கமே தவறுகள் நடைபெறாமால் இருப்பதற்கான வழிகள்.

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர், பண்ணவும் நினைக்காதீர்.

2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்.

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்.

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள். செலவு செய்தபின் Tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேட்காதீர்கள்.

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்). அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! (None of your business). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம். அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள்.
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ, பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

10. நீங்கள் ஓட்டுனராகவோ அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc) இருந்தால் கஸ்டமரின் Personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள்.
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சமயம் என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

12. நீங்கள் Guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா' என்று கடுப்பேற்றாதீர்கள்.

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய Opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப Shy டைப்பா? வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.

14. நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் / பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல.
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான் etc).

15. வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள்.
(No one likes advices).

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள்.
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்ட்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ? என்று கேட்காதீர்கள். எங்க ஏரியாவில் கம்மி ரேட் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
'வீடு நல்லா இருக்கு கங்கிராட்ஸ்' என்று முதலில் சொல்லுங்கள்.

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள்.
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். Accept it.

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி / உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள்.
உங்கள் Designation ஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம்.
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம்.
(Unless they are your spouse / lover)
நீங்கள் Guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள்.
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது Offensive. (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ,
கோலம் போடும் போதோ, வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

23. பாடல்களை எப்போதும்
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

24. ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி Comment செய்யாதீர்கள்.
(என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல).

25. டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

26. மற்றவரின் Taste / Preference களைக் குறை சொல்லாதீர்கள்.
(இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!).

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28. குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.
ஏன் என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்.

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.
அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

*நாகரிகங்கள்

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு.
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம்...

17/02/2025

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

அருகம்புல் பொடி:
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

நெல்லிக்காய் பொடி:
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.

கடுக்காய் பொடி:
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி:
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.

அமுக்கரா பொடி:
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி:
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நாவல் பொடி:
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி:
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி:
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி:
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி:
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி:
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி:
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி:
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி:
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி:
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தயப் பொடி:
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி:
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி:
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி:
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி:
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி:
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி:
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி:
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி:
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி:
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி:
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி:
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி:
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி:
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி:
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி:
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கை விதை பொடி:
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி:
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி:
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்:
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி:
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி:
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி:
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி:
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி:
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி:
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி:
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி:
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி:
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி:
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நாவறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி:
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி:
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி:
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி:
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி:
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாழை பொடி:
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி:
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி:
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்...

26/01/2025

தவளை கத்தினால் மழை.
🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்.
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்.
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ.
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை.
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...
#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..
அனைவரும் அறிந்துகொள்ள #பகிருங்கள்...❣️

19/01/2025

*விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ.*

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன.

ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது.

62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

*அந்த நாடுகள்*

அங்கோலா

பார்படாஸ்

பூடான்

பொலிவியா

பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்

புரூண்டி

கம்போடியா

கேப் வெர்டே தீவுகள்

கொமோரோ தீவுகள்

கூக் தீவுகள்

டிஜிபவுட்டி

டொமினிகா

எல் சால்வடார்

எத்தியோப்பியா

பிஜி

கபோன்

கிரீனடா

கினியா பிசாவு

ஹைதி

இந்தோனேஷியா

ஈரான்

ஜமைக்கா

ஜோர்டான்

கஜகஸ்தான்

கென்யா

கிரிபாட்டி

லாவோஸ்

மகாவோ

மடகாஸ்கர்

மலேஷியா

மாலத்தீவுகள்

மார்ஷல் தீவுகள்

மொரிஷியானா

மொரிஷியஸ்

மான்ட்செரட்

மொசம்பிக்

மியான்மர்

நேபாளம்

நையூ

ஓமன்

பலாவு தீவுகள்

கத்தார்

ருவாண்டா

சமோவா

செனகல்

சீசெல்ஸ்

சியாரா லியோன்

சோமாலியா

இலங்கை

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

செயின்ட்லூசியா

செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்

தான்சானியா

தாய்லாந்து

தைமூர்

டோகோ

டிரினாட் மற்றும் டோபாகோ

துனிஷியா

துவாலு

வனுடு

ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.

14/01/2025

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

• 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560 சதுர அடி
எனக்கு பகிர்ந்தவர்க்கு நன்றி

Address

Dindigul

Alerts

Be the first to know and let us send you an email when S chinnaraj Dindigul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S chinnaraj Dindigul:

Share