Vanga Sirikalam

Vanga Sirikalam Just for fun

02/10/2024

So cute 🥰

24/09/2024

மறுபிறவி தருவது கடவுள் இல்ல மருத்துவர் தான் 😍

22/09/2024
21/09/2024

11/09/2024

**வணக்கம்**..... 🍒நண்பர் ஒருவர் வெளியூர் செல்ல Call Taxi ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்...
24/02/2024

**வணக்கம்**..... 🍒

நண்பர் ஒருவர் வெளியூர் செல்ல Call Taxi
ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்டியிருந்த ஆங்கில வாக்கியம்.

*Duck or Eagle
You decide*

அடுத்து அவர் கவனத்தை
கவர்ந்தது (Clean and shiny)பளிச்சென்று சுத்தமாக இருந்த கார்.

டிரைவர் நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார்.

அவரே வந்து கார் கதவை திறந்து
நண்பரை அன்போடு அமர சொன்னாராம்.

அழகான டிரைவிங். கேட்டதற்கு
மட்டும் தெளிவான பதில்.

நண்பர் அந்த ஓட்டுனரின் அழகிய செயல்களால் மிகவும், கவரப்படார்.

பொதுவாக Call Taxi டிரைவர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்ட்த்தோடு.

இந்த டிரைவர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார்.
பட்டதாரியும் கூட.

அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

இல்லை சார். நானும் மற்ற டிரைவர்ஸ்
போல்தான் இருந்தேன். சத்தம் போட்டு கொண்டு.குறை கூறி கொண்டு "என்றார்.

எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர்....

ஒரு Client seminar ஒன்றிற்கு சென்றேன். சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நுழைந்தேன். அந்த seminar என்னை மாற்றி விட்டது" என்றார்.

என்ன Seminar?

உங்களை நீங்களே உயர்த்திக்
கொள்வது எப்படி ?

என்ன சொன்னார்கள்?

பல அறிவுரைகள். என்னை மிகவும்
கவர்ந்தது இதுதான்.

காலையில் எழுந்திருக்கும் போதே
இந்த நாள் சரியாக இருக்காது என்று எதிர்மறை சிந்தனையோடு எழுந்தால் அந்த நாள் கண்டிப்பாக நன்றாக இருக்காது."

இதையே ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
அப்போதுதான் அதன் ஆழம் புரிந்தது.

*If you get up in the morning
expecting a bad day,you will.

Don't be a Duck
Be an Eagle*

*The ducks only make noise and complaints.
The eagles soar above the group*.

அந்த அறிவுரை என்னை
மிகவும் கவர்ந்தது.

என்னை நானே சுய பரிசோதனை
செய்து கொண்டேன்.

நான் Duck போல இருப்பதை உணர்ந்தேன். ஏன் Eagle போல இருக்க கூடாது என்று எண்ணினேன். என்னை நானே மாற்றி கொண்டேன் என்றார்.

எல்லா Customer இடமும் அன்போடு பணிவாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.

மன அமைதி மட்டுமல்ல. என் வருமானமும் பெருகியது. Always my taxi busy.ஒரு முறை பயணம் செய்தவர்கள், என்னையே அழைக்க ஆரம்பித்தார்கள்" என்றார்.

நண்பர் சொன்னபோது எனக்கே
அவரை பார்க்க வேண்டும் போல்
இருந்தது.

அவர் சொன்னது உண்மைதான்.

எந்த வேலையாக இருந்தாலும்,
நாம் நடந்து கொள்ளும் நடத்தையும்,அர்ப்பணிப்பு உணர்வுமே,
(behaviour and involvement) நம்மை உயர்த்தும்.

உயர உயர வாழ்வில்
Eagle போல பறக்க வைக்கும்.

இப்பொழுது நம் முன்னால்
இருக்கும் ஒரே கேள்வி :

நாம் எப்படி வாழ வேண்டும்?
Duck or Eagle ?

முடிவு எடுக்க வேண்டியது நாமே.

நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக,
நல்ல அப்பாவாக, நல்ல கணவனாக,
நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக, குறிப்பாக நல்ல குடிமகனாக மாறுவது
எல்லாமே நம் கையில்தான்.

பயணிக்க போவது சிறிது காலமே. அனைவரிடமும் அன்பை செலுத்துவோம். அன்பை பெறுவோம். நம்மை நாமே
உயர் சிந்தனையால் Eagle போல
வானத்தை போல நம் நல்லெண்ண
சிறகுகளால் பறப்போம்... ✍️

C2C

Thank you

Address

Erode
638455

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanga Sirikalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category