01/01/2026
2026 - ல்
சுயப் பராமரிப்பும் மனநலமும்
உறக்கமும் மனநலமும்:
ஒருவரின் மனநலத்திற்கு உறக்கம் இன்றியமையாதது. நினைவாற்றல், கவனம் செலுத்தும் திறன் மற்றும் முடிவு எடுக்கும் திறனை மேம்படுத்துகிறது..
நல்ல தூக்கம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, உணர்ச்சி சமநிலையை பாதுகாக்க உதவுகிறது. போதிய அளவு உறங்கினால் மனஅழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் குறையும்.
உடல் உழைப்பும் மனநலமும்:
சீரான உடற்பயிற்சி நடைப்பயிற்சி உடல் உழைப்பு மனநலத்தை மேம்படுத்தும்.
நடைபயிற்சி, ஓட்டம், விளையாட்டுகள், அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவது போன்ற உடலுக்கான பயிற்சிகள் “எண்டார்ஃபின்” ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கின்றன.
மனஅழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கும்.
உடல் உழைப்பு மனச்சோர்வு மற்றும் மனபதற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும், தன்னம்பிக்கையை உயர்த்தி, சமூக உறவுகளை மேம்படுத்துகிறது.
தன்னுடைய உணர்வுகளை அடையாளம் கண்டு, அவற்றை மேலாண்மை செய்தல்: Emotional Self Care*ன
ஒருவர் தன்னுடைய உணர்வுகளை (மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம், கவலை போன்றவை) சரியாக அடையாளம் காண்பதும், அவற்றை முறையாக மேலாண்மை செய்வது முக்கியம்.
தன்னுடைய உணர்வுகளை உணர்ந்து கொள்வதன் மூலம் ஒருவர் தன்னைப் பற்றி நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
எத்தகைய சூழலில் சூழலில் எத்தகைய உணர்வுகள் ஏற்படுகிறது என்பதை அறிந்தால், அதனை சரியாக கையாளலாம். அவசரமான அல்லது தவறான முடிவுகளை எடுக்காமல் தற்காத்துக்கொள்ளமுடியும் .
மேலும், உணர்வுகளை புரிந்து கொண்டு வெளிப்படுத்துவது, உணர்வுகளை கையாள உதவி கேட்பது மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
உணர்வுகளை மேலாண்மை செய்யும் திறனை வளர்த்துக்கொண்டால் நல்-ஆதரவை பெற முடியும். இதன் மூலம் ஒருவர் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளும் வலிமையை பெறுகிறார்
மனநலத்திற்கு உறவுசார்ந்த சுய பராமரிப்பின் (Relational Self-Care) முக்கியத்துவம்* –
உறவுசார்ந்த சுய பராமரிப்பு என்பது குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் சமூகத்துடன் உள்ள உறவுகளை ஆரோக்கியமாக பராமரிப்பதைக் குறிக்கும்.
மனிதன் ஒரு சமூக உயிர்(Social Being) என்பதால், நல்ல உறவுகள் மனநலத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நல்ல உறவுகள் மனஅழுத்தம், தனிமை மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றன. நம்பிக்கையுடன் பேசக் கூடிய ஒருவர் இருப்பது மனதிலுள்ள சுமைகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.
இதனால் மனம் இலகுவாகி, மனஅமைதி கிடைக்கிறது. உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும் உறவுகள் தன்னம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் வளர்க்கின்றன.
பரஸ்பர மரியாதை, அன்பு, புரிதல் மற்றும் ஆதரவு கொண்ட உறவுகள் கோபம், ஏமாற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகளை கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், சமூக உறவுகள் வாழ்க்கையில் அர்த்தம் மற்றும் மகிழ்ச்சி உணர்வை அதிகரித்து, மனவலிமையை, உளவியல் மீள்-திறனை(Resilience) வளர்க்கின்றன.
நலமான மனசு; வளமான எதிர்காலம்..