27/01/2024
குதிரையின் குமாரனுக்கு கோவில்
அய்க்கோர்ட் ஜட்ஜாக இருந்து பிறகு Hindu Religious Endowment Board தலைவராகவும் இருந்த டி.சதாசிவ அய்யர் அவர்களும்..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரான ஏ.பாலசுப்பிரமணியம் அவர்களும் இணைந்து கையெப்பமிட்டு வெளியிட்டதுதான்..!!
அமிர்தலிங்கம் அய்யர் எழுதிய Ramayana Vimarsa என்கின்ற புத்தகம். இதை மதுரை விஜயா பிரின்டர்ஸ் வெளியிட்டார்கள்.
அமிர்தலிங்கம் அய்யர் என்பவர் இராமாயண ஆய்வாளர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்.
இப்போது விசயத்திற்கு வருவோம்.
பல நாட்கள் நடத்தப்படும் அசுவமேத யாகத்தில் பல கால்நடைகள் பலியிடப்படும். முக்கியமாக குதிரைகள், தினசரி பலியிடப்படும்.
குதிரைகள் மாமிசத்துடன் தடபுடலான விருந்துகள் நடைபெறும். முக்கியமாக இந்த விருந்துகள் படைக்கப்படுவதற்கு முன்னால், சிறிது உபவாசம் இருக்கவேண்டும்.
அந்த உபவாசத்தில் இசை இசைக்கப் படும், அதற்கேற்றாற் போல் நாட்டிய மாடுவார்கள். அதற்கேற்ற மாதிரி மந்திர உச்சாடனைகளும் உண்டு.
இராமாயணத்தில் தசரதனின் மனைவியான கவுசல்யா உடன் இருந்த குதிரை கொல்லப்படும் இடம்தான் இந்த யாகத்தில் மிகவும் முக்கிய அம்சமாகும்.
(கிருபாளானி ஏனம் தரபை பரமய முத ஸ்லோகம் 33.)
கவுசல்யா முழு இரவும் ஆண்மை மிகுந்த அந்தக் குதிரையுடன் கூடியிருந்தாள். அது அவளது கடமையுமாகும்.
தசரதனின் மற்ற இரண்டு மனைவிகளும் யாகத்தில் இருந்த மதகுருமார்களின் கட்டளைப்படி தனித்தனியே இருந்த இரண்டு குதிரையோடு கூடினர்,
முதல் நாள் இந்தக் கூடல் முடிந்த பிறகு, குதிரையின் ஆண்குறி இருக்கும் அடிவயிற்றுப் பாகத்தை ஆண்குறியோடு வெட்டி தீயிலிட்டு பொசுக்குவார்கள்.
அதில் வடமொழியில் என்ன சுலோகம் சொன்னார்கள் என்று யாருக்காவது தெரியவேண்டும் என்றால், சிவானந்த சரசுவதி அவர்கள் எழுதிய ‘‘ஞானசூரியன்’’ புத்தகத்தில் சமஸ்கிருதத்தோடு எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். (தாய்மார்களை,பெண்களை வைத்துக்கொண்டு அந்த சுலோகங்களைப் படிக்கவே முடியாது)
குதிரையின் ஆண்குறி தீயில் பொசுங்கும் வாசனையை தசரதனை நுகரச் சொல்லி மதகுருமார்கள் மந்திரம் ஓதுவார்கள்.
அதன் பிறகு குதிரையின் இதர உடல் பாகங்களை தீயில் வெட்டி எறிந்து பொசுக்குவார்கள்.
குதிரையின் வெந்துபோன செழுமை யான பாகங்களை 16 மூத்த மதகுரு மார்களுக்கு சாப்பிடக் கொடுப்பார்கள்.
இவ்வாறு நடக்கும் அசுவமேத யாகம் தொடர்ந்து பல நாட்கள் நடக்கும். இப்படி நடக்கும் கொடூர யாகம்பற்றி யும், அசுவமேத யாகத்தின் முடிவு பற்றியும் இராமாயணத்தின் சுலோகம் 46-இல் வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
கடைசி 2 சுலோகங்களான 59 மற்றும் 60 சுலோகங்களில் அஸ்வமேத யாகத்தின் சில விதிமுறைகள் தசரதனுக்காக தளர்த்தப்பட்டுள்ளது.
இதில் தசரதனும், அவனது மனைவிகளும், பிள்ளைகளும், மதகுருமார்களுடன் சேர்ந்து யாகத்தில் கொல்லப்பட்ட அசுவத்தை (குதிரையை) சாப்பிடுவார்கள்.
பிற்காலத்தில் குதிரையுடன் கூடச் சொல்லும் அசிங்கமான பாலியல் செயல்கள் மற்றும் யாகத்தில் அவித்த கால்நடைகளை சுவைத்து உண்பது போன்றவை தெய்வதீனச் செயலாகவும் புனிதமாகவும் கருத்தப்பட்டது.................................
///முதன் முதல் குதிரை எப்போது பாரத நாட்டில் அறிமுகம். குதிரை நம் மண் மிருகமல்ல இதை விளக்கி விட்டு பிறகு உங்கள் கதை சொல்லுங்கள்....///