16/10/2024
வெவசாயம் பன்றவன் எங்கயோ இருக்கான், ஊர் முழுக்க ஏரிய வெட்டி வச்சிகிட்டு காத்துகிட்டு இருக்கவன் எங்கயோ இருக்கான், மானம் பார்த்த பூமின்னு மானத்தையே பார்த்துகிட்டு இருக்கவன் எங்கயோ இருக்கான்,
மழை, தண்ணீர் சேமிப்பு,மழைநீர் சேமிப்பு,மழையின் அவசியம் இத பத்தில்லாம் 1% கூட விருப்பம் இல்லாதவன் கிட்ட போயி வருஷா வருஷா நீ ஏன் தொங்கி கிட்டு நிக்கிறன்னு ஒண்ணும் புரில.
இனி உன்னை சேமிக்க அவன் ஏரி கட்ட போறது இல்ல, செலவு செஞ்சி குழாய்களை பதிச்சு உன்னை இழுத்து கொண்டு உப்பு தண்ணில உடுறதுக்கு வேணும்ன்னா வேலைகளை செய்வான், ஏன்னா அவண்ட்ட உன்னை சேமிக்க இடம் இல்ல,
அத்தனை ஏரிகளையும் கபலீகரம் செஞ்சி வீடு,ஃபேக்டரி,கல்லூரி,பள்ளி அது இதுன்னு கட்டிட்டான் இனி அதை எல்லாம் இடிக்கவும் முடியாது.
அதனால நீயா பார்த்து அடுத்த அடுத்த வருஷங்களிலாவது, புதுக்கோட்டை,ராமநாதபுரம்,திருநெல்வேலி சுத்துவட்டாரம் அங்க இங்கன்னு மானம் பார்த்த பூமிகள் பக்கம் பெய்றதுக்கு வழிய பாரு.
மானம் பார்த்து நிற்கும் உன் அருமை தெரிந்தவனை விட்டு விட்டு, நீ ஏன் வர்ரன்னு உன்னை காரி துப்புபவனிடம் போய் நீ ஏன் ”மானத்தை” விட்டு இறங்கி நிக்கிற.
மரத்தை எல்லாம் வெட்டி எறிஞ்சிட்டு வீட்டுக்கு நாலு ஏஸி வச்சி செயற்கை வெப்பத்தை ஏற்படுத்துறான், காடுகளை அழித்து காங்ரீட்களை செழிக்க வைக்கிறான், ஒரு சின்ன நகரத்துல நாலு ஜட்டியை வச்சி விக்கிற ஒரு ஜட்டிக்கடைகாரன் தன் கடை போர்டு மறைக்குதுன்னு வாசலில் இருந்த விலைமதிப்பில்லாத ஆக்ஸிஜனை அள்ளி அள்ளி தரும் மரத்தை வெட்டுறான். இந்த இடத்தில் இந்த கடை இருக்கும்ன்னு தெரிவிக்க எவ்ளோவோ டெக்னாலஜி இருக்கு, வாட்ஸப்,ஃபேஸ்புக்,கூகுள் மேப், விளம்பர யுக்திகள்னு, எவனாச்சும் ரோடுல நடந்து போறப்பா, ஆஹா இதோ ஒரு ஜட்டி கடை இருக்கு ஒரு ஜட்டியை வாங்கி போட்டுக்குவோம்ன்னு ரோட்டுலயே நின்னு ஜட்டி போட்டுக்குவானா. ஜட்டி வாங்கனும்ன்னு நெனைக்கிறவன் தான் உன் கடைக்கு வருவான். ஏன் ஜட்டி மரம்ன்னு இதுல குறிப்பிட்டுருக்கேன்னா ஒரு இடத்துல வெட்டப்பட்ட மரைத்தை பார்த்தேன் அதான். மழைலேர்ந்து மரம் ஜட்டின்னு பதிவின் தடம் மாறுது, அதனால இத்தோட நிப்பாட்டு. மெட்ராஸ்ல பெய்யிறத நீ நிப்பாட்டு.
ஆனாலும் ஒண்ணு இப்டில்லாம் மழை இல்லன்னா நிலத்தடில நீர் இருக்காது, வருஷம் முழுக்க நீ குளிக்க முடியாது,குடிக்க முடியாது.
அதனால மழைநீரை எப்படி சேமிக்கிறது, அதை எப்படி வீணாக்காமல் பூமிக்குள் அனுப்புவது என்பதற்கான வழியை யோசிங்க மெட்ராஸ்க்காரன்ஸ்.