23/05/2025
கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் 78 ஆண் வீரர்களும், 37 பெண் வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்
கரூர் கூடைப்பந்து குழு இணைந்து நடத்தும் LR.G நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 64ம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டியும், KVB சுழற்கோப்பைக்கான 10ம் ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் 22/05/2024 முதல் 27/05/2024 வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் அகில இந்திய அளவில் தலைசிறந்த எட்டு ஆண்கள் அணியும் நான்கு பெண்கள் அணியும் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையிலும் பெண்கள் போட்டிகள் லீக் முறையில் நடைபெறுகிறது. வருகிற மே 22 ஆம் தேதி துவக்க நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு கையுந்து பந்து கழகத்தின் பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் மற்றும் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் கலந்து கொண்டு முதல் போட்டியினை துவக்கி வைத்தார். இந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் 78 ஆண் வீரர்களும் 37 பெண் வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களில் 18 இன்டர்நேஷனல் வீரர்களும், 57 தேசிய அளவிலான வீரர்களும், 10 சர்வீஸ் அளவிலான வீரர்களும், 14 மாநில அளவிலான வீரர்களும், 16 ரயில்வே அளவிலான வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் முதல் போட்டியாக இந்தியன் நேவி அணியும் பெங்களூர்வை சேர்ந்த எம் ஆர் கிங்ஸ் அணியும் மோதி கொண்டதில் 58/73 என்ற புள்ளி வித்தியாசத்தில் இந்திய நேவி அணி வெற்றி பெற்றது மற்றொரு ஆட்டத்தில் ஐஓபி சென்னை அணியும் இந்தியன் ஆர்மி அணியும் மோதிக்கொண்டது இதில் 64/72 என்ற புள்ளியின் அடிப்படையில் இந்தியன் ஆர்மி அணி வெற்றி பெற்றது.