13/01/2022
அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தொடர் 2,600 மணி நேர இணைய பன்னாட்டு சங்கம விழாவின் ஒருங்கிணைப்பாளர்களை,
முதல்அமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்*
அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தின் 10ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 2 ஆயிரத்து 600 மணி நேர பன்னாட்டு சங்கமம் நிகழ்ச்சி இணையவழியில் நடத்தப்பட்டது.
இளைஞர்கள், மாணவர்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90வது பிறந்தநாளை மையமாக வைத்து நிகழ்வுகள் நடத்தப்பட்டது. அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தோடு, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சர்வதேச வர்த்தக, கலாச்சார வளர்ச்சி பேரவை, Apj அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை,ராமேஸ்வரம்,இந்தியா பிரைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், விஜிபி உலகத்தமிழ் சங்கம், சார்ஜா பிரெயன் ஓ பிரெய்ன் இன்டர்நேஷனல், கனடா நாட்டு பெண்கள் கூட்டமைப்பு, புதுவை தி சென் அகாடமி,தேசிய கல்வி அறக்கட்டளை-கல்லிடைக்குறிச்சி, கவிதை வானில் கவிமன்றம், போஸ்டர்ஸ் அகாடமி உட்பட பல நிறுவனங்கள் பங்கேற்றன. நிகழ்வில் 25 ஆயிரம் பேர் இணைவழியில் பங்கேற்று கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இது பொதுமக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பன்னாட்டு சங்கமம் நிகழ்வை நடத்திய அசிஸ்ட் உலக சாதனை நிறுவன தலைவர் ராஜேந்திரன், முனைவர் முகைதீன்,Dubai ,முனைவர் கவிதாசெந்தில்நாதன், முனைவர் கலாவிசு, பிரியா கார்த்திக், ஒருங்கிணைப்பாளர்கள் இசையமைப்பாளர் தேவ்குரு, ஓம்சக்தி ரமேஷ், ராமச்சந்திரன், அருண்தாமஸ், தேசிய விருதளர் மணிமாறன் ஆகியோரை முதல்அமைச்சர் ரங்கசாமி, துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Dr.R.Rajendran,Founder
Assist World Records,
www.assistworldrecords.com