11/08/2017
ரேசன் கடைகளில் விநியோகம் செய்ய
2,600 டன் அரிசி நாமக்கல் வந்தது
நாமக்கல்:
ரேசன் கடைகளில் விநியோகம் செய்ய நாமக்கல், ரயில்வே ஸ்டேனுக்கு, 2,600 டன் ரேன் அரிசி வந்தது. நாமக்கல், ரயில்வே ஸ்டேனுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, கால்நடை தீவன பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன. அதன்படி, மாவட்டத்தில் செயல்படும் ரேன் கடைகளில், பயனாளிகளுக்கு வினியோகம் செய்வதற்காக, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 41 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம், 2,600 டன் ரேன் அரிசி, நாமக்கல் வந்தது. அவை, லாரிகள் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கு குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டன.