21/07/2025
சூர் அட்-தவ்பா (9:104):
"அவர்கள் மன்னிப்புக் கோருவதையும், அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னிப்பான் என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா? நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கிறான்."
கொலோசெயர் 3:13:
"ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்".
பகவத் கீதையில், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மன்னிப்பு மற்றும் கருணை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உபதேசிக்கிறார். துன்பத்தில் இருப்பவர்களை மன்னிப்பதும், அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதும் முக்கியம் என்று அவர் கூறுகிறார். மன்னிக்கும் குணம் ஒருவரின் மன அமைதிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்று கீதை வலியுறுத்துகிறது.
மதங்கள் மாறலாம்.. ஆனால் சொல்லும் கருத்து ஒன்றுதான்.. மன்னிப்பு🙏 மனிதனுக்கு உண்மையாக கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு வரம்.. நமக்கு ஒருவர் தீங்கு செய்துவிட்டார், துரோகம் செய்து விட்டார், நம் நேரத்தை பொருளை வீணாக்கிவிட்டார் என்றால்.. அவரை மன்னித்து கடந்து செல்லும் குணம் அனைவரிடத்திலும் இல்லை.. காயப்படுத்தியவனை காயப்படுத்துவேன், அடித்தவனை அடிப்பேன் துரோகித்தவனை தண்டிப்பேன் என்ற மனநிலை "மன்னிப்பு" என்ற பெருங்குணத்தை இல்லாமல் செய்கிறது.. ஒருவரை மன்னிப்பது மூலம் உங்கள் நேரம், குணம், பொருள் மீண்டும் அவர்களால் வீணாவதை தவிர்க்க முடியும்.. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்து அவர் செய்த தவறை மீண்டும் செய்யாமல் தடுக்க முடியும்.. இறைவன் மனிதனின் தவறை மன்னிப்பது இறைகுணம் என்றால்.. சக மனிதன் செய்த தவறை நாம் மன்னிப்பது இறை வழி தான்..
மன்னித்து பாருங்கள்.. வாழக்கையில் மாற்றம் வரும்!!
-BS