01/04/2025
இந்திய பெண்களிடம் மட்டும் 25000 டன் இருக்கிறதாம்
தங்கத்தின் மீதான இந்திய பெண்களின் ஈர்ப்பு காரணமாக சுமார் 25000 டன் தங்கம் இந்திய குடும்பங்களில் இருக்கிறதாம். பாரம்பரியமாக தங்க நகைகள் வாங்கி வைத்திருப்பது முதல் அவசரகாலச் சேமிப்புகள் வரை நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் கிட்டத்தட்ட 25,000 டன் தங்கத்தை வைத்திருப்பதால் இந்தியக் குடும்பங்கள் உலகிலேயே தங்கத்தின் மிகப்பெரிய தனியார் உரிமையாளர்கள் என சொல்லப்படுகிறது. இது உலகின் மொத்த தங்க இருப்புக்களில் சுமார் 11% இப்படி நகை வடிவில் பெண்களிடம் உள்ளது. பெண்களுக்கு இந்த தங்க புதையல் வெறும் அலங்காரத்திற்கு மட்டுமல்ல. கஷ்டகாலத்தில் கை கொடுத்து உதவும் கடவுள். அவசர தேவைக்கு யாரிடமும் கையேந்தாமல் இருக்கும் நகைகளை அடகு வைத்து தேவைகளை நிறைவேற்றும் பெண்கள் இங்கு அதிகம். யார் உதவவில்லை என்றாலும் இந்த தங்கம் பெண்களுக்கு அவசர காலத்தில் உதவுகிறது. தங்கத்தின் விலைகள் உயரும் போது அது ஒரு செல்வமாக வளர்ந்து வருகிறது.
தங்கம் நீண்ட காலமாக இந்தியாவில் பெண்களிடையே, செல்வம், பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. இந்திய கொண்டாட்டங்களில் குறிப்பாக திருமணங்களில் தங்கம் கொண்டாட்டங்களின் இன்றியமையாத பகுதியாகும். மணப்பெண் நகைகளாக இருந்தாலும் சரி, சிறிய தங்கக் கட்டிகளாக இருந்தாலும் சரி தங்க பரிசுகள் இல்லாமல் எந்த இந்திய திருமணமும் முழுமையடையாது. தங்கத்தின் மீதான இந்த கலாச்சார ஈடுபாடு, இந்தியப் பெண்கள் கணிசமான அளவு தங்கத்தை சேமிக்க வழிவகுத்தது, இது பெரும்பாலும் தலைமுறைகளாகக் தொடர்ந்து வருகிறது
சமீபத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு புள்ளிவிவம் இந்திய குடும்பங்களுக்கு தங்கத்தின் மூலம் மட்டுமே 1 வருடத்தில் 750 பில்லியன் டாலர் சொத்து அதிகரிக்கிறதாம்.
25,000 டன்கள் என மதிப்பிடப்பட்ட இந்திய குடும்பங்களில் இருக்கும் தங்கம், அமெரிக்கா, ஜெர்மனி, சீனா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி உட்பட உலகின் முதல் 10 மத்திய வங்கிகளின் ஒருங்கிணைந்த தங்க இருப்புக்களை தாண்டியுள்ளது எனவும் சொல்லப்படுகிறது. அமெரிக்கா 8,000 டன் தங்கத்தையும், ஜெர்மனி 3,300 டன் தங்கத்தையும், இத்தாலி 2,450 டன் தங்கத்தையும், பிரான்ஸ் 2,400 டன் தங்கத்தையும், ரஷ்யா 1,900 டன் தங்கத்தையும் வைத்திருக்கிறது. டிசம்பர் 2024 நிலவரப்படி, ரிசர்வ் வங்கி 876.18 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது.
இது இந்திய குடும்பங்கள் வைத்திருக்கும் மதிப்பிடப்பட்ட தொகையை விட கணிசமாகக் குறைவு.
இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் $2 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹160 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் பெண்கள் தங்கத்தை அதிகம் வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த தங்கத்தில் 40% தெற்குப் பகுதியில் உள்ளது, அதில் 28% தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது.
இந்தியாவின் வருமான வரிச் சட்டங்களின்படி, திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஒப்பிடுகையில், ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது இந்திய கலாச்சாரத்தில் தங்கம் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கையும், செல்வத்தின் அடையாளமாகவும் எதிர்காலத்திற்கான பாதுகாப்பாகவும் தங்கத்தின் மீது பெண்கள் வைத்திருக்கும் உரிமையின் மீது வைக்கப்படும் கணிசமான மதிப்பையும் பிரதிபலிக்கிறது.
உலகிலேயே அதிகமாக இந்திய பெண்களிடம் மட்டும் 25000 டன் இருக்கிறதாம் தங்கத்தின் மீதான இந்திய பெண்களின் ஈர்ப்பு காரண...