
19/04/2023
மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில், இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாடார் மகாஜன சங்க தலைவர் வி எஸ் பி குருசாமி வெள்ளையன் நாடார் தலைமையில் பொறையார் உறவின் முறை, நாடார் இளைஞர் அணி அமைப்பினர் கலந்துகொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர். பின்பு மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் நாடார் உறவின்முறை நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.