Jokes Tamil Tanglish and fun

  • Home
  • Jokes Tamil Tanglish and fun

Jokes Tamil Tanglish and fun jokes,poems and fun in Tamil and English.....by Vijayanirmala M.A.,B.L.,alias NirmalaUday.......

sirikka mattume...90% sondha karpanai.....vaai vittu sirichaa noi vittu pogum...be free to reply,comment....and do share....try to promote if you like this page...

16/06/2025

ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தை பற்றி ஏற்கனவே அவரோடு வேலை பாத்தவங்க பலபேர் சொல்லி இருக்காங்க... "இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க"ன்னு...
அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்... முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...

சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேட்க வேண்டாம்ன்னு முதல் பையனை எழுப்பி...

"உன் பேர் சொல்லு"

"பழனி"

"உன் அப்பா பேரு"

"பழனியப்பன்",

அடுத்தப் பையனை எழுப்பி ,

"உன் பேர் சொல்லு"

"மாரி"

"உன் அப்பா பேரு"

"மாரியப்பன்..."

அவருக்கு கொஞ்சம் டவுட் வருது 🤔...
இருந்தும் அடுத்தப் பையனை எழுப்பி...

"உன் பேர் சொல்லு"

"பிச்சை"

"உன் அப்பா பேரு"

"பிச்சையப்பா"

இப்போது அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு..

அடுத்தப் பையன எழுப்பினாரு...

"முதல்ல நீ உன் அப்பா பேரைச்சொல்லு..."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)

"ஜான்"

"இப்பொ உன் பேரைச் சொல்லு"

"ஜான்சன்"

கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி...😈

அடுத்த பையன எழுப்பி,
"உன் அப்பா பேரை சொல்லு..."

"டேவிட்.."

"உன் பேரு...?"

"டேவிட்சன்"

கொலவெறி ஆயிட்டாரு😬

கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையனை எழுப்பி,

"உன் தாத்தா பேரை சொல்லு"

"சார்... அப்பாவோட அப்பாவா?, அம்மாவோட அப்பாவா?"

ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு😬,

"அப்பாவோட அப்பா"ன்னாரு

"வீரமணி",

"சரி அப்பா பேரு?",

"வீ.ரமணி",

"உன் பேரு?",

"வீ.ர.மணி..."

🥺🥺🥺🥺

அப்புறம் என்ன... அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லியாம்...
😜😜😜

08/06/2025

டன் கணக்கில் துணி துவைக்கும் இடம் எது.?...*

வாஷிங்டன் தான், வேற எது? ஹாஹாஹா...!*

ரொம்ம காஸ்ட்லியான கிழமை எது?
வெள்ளிக்கிழமை தான், வேற எது? ஹாஹாஹா!

ஒருத்தன் தலையில் இருந்து இலையா கொட்டுச்சாம், ஏன்?
ஏன்னா அவன் மரமண்டையாம். ஹாஹாஹா!

எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வெச்ச எந்த பிரியாணி ஃபெயில் ஆகும்?
முட்டை பிரியாணி தாங்க. பேர்லயே முட்டை இருக்கும்போது எப்படி பாஸ் பண்ணுவாங்க? ஹாஹாஹா!

கோயிலுக்கும் சாமிக்கும் என்ன வித்யாசம்?
வேறென்ன, கோயில் சிம்பு நடிச்சப்படம், சாமி விக்ரம் நடிச்ச படம். இதுதான வித்யாசம். ஹாஹாஹா!

ஆப்பிள நரிக்கி வெச்சா என்னாகும்?
வேற என்னாகும்? நரி சாப்டுடும். ஹாஹாஹா!

அமெரிக்கால பிறந்த குழந்தையோட பல்லு என்ன கலர்ல இருக்கும்?
அட பிறந்த குழந்தைக்குத்தான் பல்லே இருக்காதே. ஹாஹாஹா!

சாப்பிட முடியாத கனி எது?
வேற எது, நம்ப பால்கனிதான். ஹாஹாஹா!

எந்த ஊருல அதிர்ஷ்டமே இருக்காது?
வேற எங்க, நம்ம லக்னோ லதான். லக்னோன்னு வெச்சதுக்கு பதிலா ஒரு எஸ் போட்டு லக்எஸ்னு வெச்சு இருக்கலாம். ஐடியா இல்லாத பசங்க, ஹாஹாஹா!

தினேஷ் எப்போதும் சேர்லே உட்கார்ந்துட்டு இருப்பானாம் ஏன்?
ஏன்னா? அவன் சேர்மனாம். பேட்மேன்னா எங்க உட்காருவாரு? ஹாஹாஹா!

பிரியா ஒரு உணவ சாப்பிடும்போது மட்டும் காத மூடிக்கிட்டே சாப்பிடுவாளாம், ஏன்?
ஏன்னா அது 'இடி'யாப்பமா? ஹாஹாஹா!

சர்க்கிளுக்கும், ட்ரையாங்கிளுக்கும் டெஸ்ட் வெச்சா யாரு ஃபெயில் ஆவாங்க?
சர்க்கிள் தான். ஏன்னா அதுக்குத்தான் மூளையே இல்லையே. ட்ரையாங்கிளுக்குத்தான் 3 மூளை இருக்கே. ஹாஹாஹா!

தினேசுக்கு கல்யாணமாம். ஆனா அவன மண்டபத்துக்கு கூட்டிக்கிட்டு போகாம, சுடுகாட்டுக்கு கூட்டிக்கிட்டு போறாங்களாம். ஏன்?
ஏன்னா? தினேஷ் அடக்கமான பொண்ணு வேணும்னு கேட்டானாம். அப்போ கரெக்ட்டாதான் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க. ஹாஹாஹா!

ஆகாஷ் அவனோட அப்பா பேர எழுதி ஃபிரிட்ஜ்குள்ள வெச்சுட்டானாம். ஏன்?
ஏன்னா, அவனோட அப்பா பேர கெட்டுப்போகாம பாத்துக்கிறானாம். ஹாஹாஹா!

ஒரு ஸ்கூல்ல எக்ஸாம் அன்னிக்கு எல்லாரும் கலர் டிரஸ் போட்டுட்டு போனாங்களாம்.
ஏன்னா அது மாடல் எக்ஸாமாம். ஹாஹாஹா!

ரம்யா, நகை கடையில போய் மோதிரம் வாங்கி. அதை காலில் அணிந்து கொண்டாராம் ஏன்?
ஏன்னா, அது 'கால்' பவுன் மோதிரமாம். அப்போ ரம்யா செஞ்சசு சரிதானே? ஹாஹாஹா!

ராகுல் தினமும் ஸ்கூலுக்கு மெதுவாத்தான் போவானாம், ஏன்?
ஏன்னா, அவன் போற வழில ஸ்கூல் உள்ளது. மெதுவாகச் செல்லவும்னு போர்ட் வெச்சு இருக்காங்களாம். அப்போ மெதுவாத்தானே போக முடியும். ஹாஹாஹா!

சூர்யா காய்கறிகளுக்கு கிச்சுகிக்சு மூட்டிக்கிட்டு இருந்தானாம். ஏன்?
ஏன்னா, அவங்க அப்பா காய்கறியெல்லாம் அழுகாம பாத்துக்க சொன்னாராம்.

100க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு?
வேற என்ன? 0 தான் இருக்கு.....ஆ...சுடுதே...(சுட்டது😝)

26/05/2025
26/05/2025
07/05/2025

வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???

கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.

வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு!😂

"என் மருமகள் எப்பவும் குனிஞ்ச தலை நிமிர மாட்டா!"

"அவ்வளவு அடக்கமா?"

“நீ வேற, எப்பவும் 'வாட்ஸ் அப்',insta,fbலயே இருப்பா!
X#####################xx😂
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?

மனைவி: ஒரு ஸ்பூன் fevicolபோட்டேன்.!!.

🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

30/04/2025

உண்மை!! ❤️❤️
,
பற்றி தெரியாத பத்து உண்மைகள்
1. நிறுவுதல் மற்றும் வரலாறு: BMW, Bayerische Motoren Werke AG, ஜெர்மனியின் முனிச்சில் 1916 இல் நிறுவப்பட்டது, ஆரம்பத்தில் விமான இயந்திரங்களைத் தயாரித்தது. நிறுவனம் 1920 களில் மோட்டார் சைக்கிள் உற்பத்திக்கு மாறியது மற்றும் இறுதியில் 1930 களில் ஆட்டோமொபைல்களுக்கு மாறியது.
2. ஐகானிக் லோகோ: BMW லோகோ, பெரும்பாலும் "ரவுண்டல்" என்று குறிப்பிடப்படுகிறது, இது நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் நான்கு நாற்கரங்களுடன் குறுக்கிடும் கருப்பு வளையத்தைக் கொண்டுள்ளது. இது விமானப் பயணத்தில் நிறுவனத்தின் தோற்றத்தைக் குறிக்கிறது, நீலம் மற்றும் வெள்ளை தெளிவான நீல வானத்திற்கு எதிராக சுழலும் உந்துசக்தியைக் குறிக்கிறது.
3. தொழில்நுட்பத்தில் புதுமை: வாகனத் தொழில்நுட்பத்தில் அதன் கண்டுபிடிப்புகளுக்காக BMW புகழ்பெற்றது. இது 2013 இல் உலகின் முதல் மின்சார கார், BMW i3 ஐ அறிமுகப்படுத்தியது, மேலும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது.
4. செயல்திறன் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் பாரம்பரியம்: BMW மோட்டார்ஸ்போர்ட்டில், குறிப்பாக டூரிங் கார் மற்றும் ஃபார்முலா 1 பந்தயத்தில் வலுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பிராண்டின் M பிரிவு, அவற்றின் வழக்கமான மாடல்களின் உயர்-செயல்திறன் மாறுபாடுகளை உற்பத்தி செய்கிறது, அவற்றின் துல்லியமான பொறியியல் மற்றும் உற்சாகமான ஓட்டுநர் இயக்கவியல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.
5. உலகளாவிய இருப்பு: BMW ஒரு உலகளாவிய வாகன நிறுவனம்
6. சொகுசு மற்றும் வடிவமைப்பு: BMW ஆனது ஆடம்பர மற்றும் தனித்துவமான வடிவமைப்பிற்கு ஒத்ததாக உள்ளது, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வசதியுடன் நேர்த்தியுடன் கலக்கும் வாகனங்களை உருவாக்குகிறது.
7. நிலையான நடைமுறைகள்: BMW அதன் வாகனங்களில் சுற்றுச்சூழல் நட்பு பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை இணைத்து, அதே போல் BMW i4 மற்றும் iX போன்ற மாடல்களுடன் மின்சார வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, நிலைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது.
8. Global Manufacturing: BMW ஆனது ஜெர்மனி, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகள் உட்பட, உலகளவில் பல உற்பத்தி வசதிகளை இயக்குகிறது, இது உலகளாவிய ரீதியிலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தியையும் உறுதி செய்கிறது.
9. பிராண்ட் போர்ட்ஃபோலியோ: அதன் புகழ்பெற்ற BMW பிராண்டிற்கு கூடுதலாக, நிறுவனம் MINI மற்றும் Rolls-Royce ஐயும் கொண்டுள்ளது, இது பல்வேறு வகையான வாகன சுவைகள் மற்றும் ஆடம்பரப் பிரிவுகளை வழங்குகிறது.
10. கலாச்சார தாக்கம்: BMW வின் வாகனங்கள் பெரும்பாலும் வழிபாட்டுக்குரியதாக மாறுகிறது

30/04/2025
07/04/2025
07/04/2025
😲🤣
07/04/2025

😲🤣

27/03/2025

😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂

ஏ‌ன்யா.. அ‌ந்த ‌தீ‌ப்‌பிடி‌ச்ச க‌ட்டி‌ட‌த்‌தி‌ல் இரு‌ந்து 6 பேரை‌க் கா‌ப்பா‌த்‌தினது‌க்கா அவரை போ‌லி‌ஸ் ‌பிடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போகுது.
ந‌ல்லது‌க்கே கால‌மி‌ல்லை‌ போ..

‌நீ‌ங்க வேற?

அ‌ந்த க‌‌ட்டிட‌த்‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர் கா‌ப்பா‌த்‌தி வெ‌ளிய கொ‌ண்டு வ‌ந்ததா சொ‌ல்றவ‌ங்க 6 பேரும் தீயணைப்புப் படை வீரர்களாம்.

😊 😄😊 😄😊

"ஜெயிலுக்குள்ள என்ன கலாட்டா?

"எல்லா வசதியும் செய்து தர்ற அரசு,

'டாஸ்மாக்' வசதியும் செய்து தரணுமாம்!"

ஏ.எம்.இர்பான்

😊 😄😊 😄😊
என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
எப்படி சொல்றே?

அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!

🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂...copycat copy

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jokes Tamil Tanglish and fun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jokes Tamil Tanglish and fun:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share