22/10/2023
வேலைவாய்ப்பு
/
வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்.. 40,000 ஃபிரஷ்ஷர்களை வேலைக்கு எடுக்கவுள்ள டிசிஎஸ் நிறுவனம்..
வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்.. 40,000 ஃபிரஷ்ஷர்களை வேலைக்கு எடுக்கவுள்ள டிசிஎஸ் நிறுவனம்..
TCS Freshers Recruitment : ஃபிரெஷ்ஷர்களை வேலைக்கு எடுக்கவுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விளம்பரம்
அசத்தலான வேலை வாய்ப்பு.!
ஐடி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பணிநீக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக அளவில் லட்சக்கணக்கான ஊழியர்களுடன் இயங்கி வரும் பல நிறுவனங்களும் கடந்த சில மாதங்களில் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், டிசிஎஸ், விப்ரோ இன்று அனைத்து நிறுவனங்களுமே அடங்கும்.
ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வருவது ஒரு பக்கம் பிரச்னையாக இருந்து வரும் நிலையில், மற்றொரு பக்கத்தில் ஃபிரெஷ்ஷர்களை வேலைக்கு எடுப்பதும் குறைந்திருக்கிறது. ஏற்கனவே கேம்பஸ் தேர்வில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட ஃபிரெஷ்ஷர் மாணவர்களுக்கு வேலைக்கான ஆர்டர் வழங்கப்படாமல், பணியில் சேராமல் நிலுவையில் இருக்கிறது என்று ஏகப்பட்ட தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.