25/01/2024
ஏக இறைவனின் திருப்பெயரால்....
*தமுமுக கோவை மத்திய மாவட்டம் சார்பாக கங்கா மருத்துவமனையில் செய்தியாளர் நேச பிரபு அவர்களுக்கு 7 யூனிட் ரத்த தானம்*
திருப்பூர் மாவட்டம் நியூஸ் 7 செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் நேச பிரபு அவர்கள் 24/01/23 நேற்று இரவு பல்லடம் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
தற்போது அவர் கோவை கங்கா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
*காயமடைந்த நேச பிரபு அவர்களுக்கு ரத்தம் தேவை என தகவல் வெளியானது*.
தகவல் அறிந்தவுடன் *தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் சர்புதீன் அவர்களின் தலைமையில் உடனடியாக கங்கா மருத்துவமனைக்குச் சென்று தமுமுக நிர்வாகத்தின் சார்பில் 7 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது*.
*பாதிக்கப்பட்ட நேச பிரபு அவர்களின் சகோதரன் கவியரசு அவர்களை சந்தித்து தற்போதைய உடல் நலம் குறித்தும் நேற்று இரவு நடந்த கொடூர சம்பவம் குறித்தும் விசாரித்தனர்*.
*தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்கள் அலைபேசி மூலம் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்*