ThisaiyettumTamil SELVA

ThisaiyettumTamil SELVA Book Reader & Book Reviewer , Speaker

05/08/2025

உஷா சுப்பிரமணியன் - 70 களில் எழுதிய எழுத்தாளர்.நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண்களின் அகச்சிக்கலை தன் கதைகளில் எழுதிய படைப்பாளி.இவரின் "மாறுபடும் கோணங்கள் " என்ற கதையை உங்கள் முன் பரிமாறுகிறேன். பசியாற வாருங்கள்...

செல்வா
திசையெட்டும் தமிழ்

#உஷாசுப்பிரமணியன்கதைகள்​ #திசையெட்டும்தமிழ்​ ​ ​
​ ​ ​
​ ​
​ ​
#உஷாசுப்பிரமணியன்

25/07/2025

🎤 ஏங்க..... திருக்குறள் பற்றி பேசுனா 3 லட்சம் பரிசுங்க.....

🎤 ஆமாங்க "யான் அறக்கட்டளை " நடத்துற " குறளின் குரல்" சர்வதேச இணைய வழி திருக்குறள் பேச்சு போட்டில கலந்துக்குங்க பரிச அள்ளுங்க.....

🎤 போட்டி பற்றி தெரிஞ்சுக்க இந்த காணொளிய பாருங்க ...

https://www.yaan.live@

இந்த அறிவிப்பு காணொளிய உங்கள் நண்பர்களுக்கு பகிருங்க...
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​
​ ​



































08/07/2025

சமூகத்தில் அடித்தட்டு மக்கள் படும் அவஸ்தைகளையும், தொழிலாளர்கள் படும் வேதனைகளை தன் எழுத்தில் பதிவு செய்தவர்.எப்படி தொழிலாளர்கள் பெரு முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என்பதை காத்திரமாக எழுதியுள்ளார்

#விந்தன் #திசையெட்டும்தமிழ்







#தமிழ் #தமிழ்எழுத்தாளர்கள்
#தமிழ்சிறுகதைகள்
#மறுமணம் #இரண்டுரூபாய்
#மறுபடியும் #மனக்குறை
#ஏசுநாதரின்வாக்கு #பத்தினிதெய்வம்

07/07/2025

யாளி- தமிழ் கோவில் சிற்பங்களில் தவறாது உள்ள சிற்பம் யாளி தான்.யாளி என்பது உண்மையில் ஒரு காலத்தில் நம் மண்ணில் இருந்த விலங்கா? அல்லது நம் முன்னோர்களின் கற்பனையில் உருவான ஒன்றா? அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்லும் நாவல்.விடை காண வாருங்கள் என்னோடு .....

செல்வா
திசையெட்டும் தமிழ்
#திசையெட்டும்தமிழ்

யாளி (Yali) என்பது தமிழின் தொன்மமான கலை மற்றும் கட்டிடக்கலை வடிவங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒரு கல்பனைக் கிருமி (myth...
24/06/2025

யாளி (Yali) என்பது தமிழின் தொன்மமான கலை மற்றும் கட்டிடக்கலை வடிவங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒரு கல்பனைக் கிருமி (mythical creature) ஆகும். இது பெரும்பாலும் தென்னிந்தியக் கோவில்களில் சிற்பங்களாக காணப்படுகிறது.

யாளியின் முக்கிய அம்சங்கள்:

முன்பக்கம் சிங்கம் போலவும்,

மீது பகுதி யானை போலவும்,

சில நேரங்களில் புலி, நரி, கொலைச்சிறுத்தை, பாம்பு போன்ற பலவித விலங்குகளின் அம்சங்களை சேர்ந்த கலவை உருவாகவும் இருப்பது வழக்கம்.

சில யாளிகள் கருடம் போல இருபதிற்கும் இருக்கின்றன.

யாளியின் அடையாளம்:

பேராண்மை, வீரம், துணிச்சல் ஆகியவற்றின் உருவகமாக கருதப்படுகிறது

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட பல பழமையான கோவில்களில் யாளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

மண்டப தூண்களில், நுழைவு வாயில்களில், வீதி வழிபாட்டு வாகனங்களில் சிற்ப வடிவமாக யாளிகள் பன்மைப்படங்களுடன் இருப்பது வழக்கமாகும்.

23/06/2025

மத்தகம் - யானையின் வாழ்வினுடே மனிதர்களின் காம, குரோதங்களை தொட்டுக் காட்டிச் செல்லும் குறுநாவல் இது. யானை பற்றி எழுதி தீர்க்கிறார் ஜெ . யானை பற்றி வர்ணனைகளுக்காகவே பல முறை வாசிக்கலாம்.வாருங்கள் பு(ம)த்தகத்தில் பயணிக்க...

செல்வா
திசையெட்டும் தமிழ்
#திசையெட்டும்தமிழ்

கேலக்ஸி குழுமம் நடத்திய உலகளாவிய சிறுகதை போட்டி 2025 நடைபெற்றது.இதில் போட்டிக்கு மொத்தம் 327 சிறுகதைகள் வந்திருந்தது.அதி...
22/06/2025

கேலக்ஸி குழுமம் நடத்திய உலகளாவிய சிறுகதை போட்டி 2025 நடைபெற்றது.இதில் போட்டிக்கு மொத்தம் 327 சிறுகதைகள் வந்திருந்தது.அதில் நான் எழுதிய முதல் சிறுகதையான "வெறியாட்டு" இரண்டாம் சுற்றில் 80 சிறுகதைகளில் ஒன்றாக வந்தது. நான் எழுதிய முதல் சிறுகதைக்கு கிடைத்த அங்கீகாரம்.கேலக்ஸி குழுமத்திற்கு நன்றி

18/06/2025

தீண்டாமையின்
வேர்களில்
தீ வைத்தவன் 🔥

சாதியின் பேரால்
புறந்தள்ளியோர் முன்
சாதித்துக் காட்டியவன்

என் வாழ்நாள்
வாசிப்பின் வழிகாட்டி
அம்பேத்கர்

வாருங்கள் அம்பேத்கரை வாசிக்க

செல்வா
திசையெட்டும் தமிழ்
#திசையெட்டும்தமிழ்

12/06/2025

தமிழ் இஸ்லாமிய விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் மற்றும் இஸ்லாமிய சமூக விமர்சனம் போன்றவற்றை முன்னிறுத்துபவை கீரனூர் ஜாகிர்ராஜா வின் எழுத்துக்கள்.கருத்த லெப்பை ஜாகிர்ராஜாவின் முக்கிய படைப்பு. வாருங்கள் லெப்பையுடன் பயணிக்க....

செல்வா
திசையெட்டும் தமிழ்
#ஜாகீர்ராஜா
#திசையெட்டும்தமிழ்

23/04/2025

23/04/2025

நாம் இன்று அருந்தும் காபிக்கு பின்னால் எத்தனை ஆண்டு கால வரலாறு உள்ளது.மலையில் மட்டுமே விளையும் காபித் தளர்களை தரைக்காட்டுக்கு கொண்டு வர மனிதர்கள் பட்டபாடுகளை மட்டுமல்ல கழுதைகள் பட்ட துன்பத்தையும் விவரிக்கிறது இந்நாவல்.வாருங்கள் கழுதைப் பாதையில் பயணிக்க...

செல்வா
திசையெட்டும் தமிழ்

Address

Pattukkottai
614601

Alerts

Be the first to know and let us send you an email when ThisaiyettumTamil SELVA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share