20/08/2026
பேராவூரணி - ஆனந்த வள்ளி வாய்க்கால் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் யார்?
ஆனந்த வள்ளி வாய்க்கால் பல இடங்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கழிவுநீரால் மாசடைந்து வருகிறது. வாய்க்காலில் குப்பை கொட்டினாலோ, கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றினாலோ, அவர்கள் மீது அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு வாய்க்காலை சுத்தம் செய்யலாம். ஆனால் அதை மீண்டும் அசுத்தமாக்காமல் பாதுகாப்பது நம்முடைய பொறுப்பு.
நம் குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஒரு சுத்தமான சூழலை விட்டுச் செல்ல முடியாதா?