Win Express Kovai

  • Home
  • Win Express Kovai

Win Express Kovai உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்கள் வின் ?

26/11/2021

அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் மூன்று வேளாண் சட்டங்களை முறைப்படி நாடாளுமன்ற.....

19/11/2021

வேளாண் சட்டங்கள் வாபஸ் மேட்டுப்பாளையத்தில் CITU பொது தொழிலாளர் சங்கத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனி...

18/11/2021

கந்து வட்டி நெருக்கடி தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு கோவில்பட்டியில் வருவ...

18/11/2021

உடுமலையிலிருந்துபொள்ளாச்சி பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த போலீ.....

06/11/2021

கோவை ஹோப் காலேஜ் பகுதி மசக காளிபாளையம் சாலையில் லால்பகதூர் நகர் உள்ளது இதில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் ....

03/11/2021

கோவை கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வி எம் சந்திரசேகர் இவர் நேற்று முன.....

29/10/2021

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் ஊராட்சியில் மிகப.....

08/10/2021

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் சாலையோரம் கடைகளை அமைத்து வியாபாரிகள் விதவைகள் கணவனால் கைவிடப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் விற்பனை செய்து வருகிறார்கள் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்
நெறிமுறைகளின் அடிப்பைடையில் கடைகளை அமைத்துள்ளனர் இங்கு விற்பனைகள் மிகவும் குறைவு அன்றாடம் இரவு வீடு திரும்பி செல்லும்போது சொற்ப வருமானமே கிடைக்கின்றது போதிய வருமானம் இன்றி கடனில் தவிக்கின்றனர் இந்த சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் கடைகளை அடைப்பதால் விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மாற்றுத்திறனாளிகள் இவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் நகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளுக்கு என்று எந்த ஒரு உதவியோ ஊக்கத்தொகையும் தராத சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கு என்பது மிகவும் கடினமாக உள்ளது எங்கள் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்படைய செய்கிறது ஏற்கனவே இரண்டு ஊரடங்கு காலத்தில் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் எங்கள் குழந்தைகளை காப்பாற்ற எங்களுக்கு வேறு வழியில்லை என்று புலம்புகின்றனர் நகராட்சி நிர்வாகம் எங்களுக்கு தகுந்த உதவிகளை செய்ய வேண்டும் அதனுடன் நாங்கள் கடைகளை நடத்த சிறந்த வழிகாட்டி நெறிமுறைகளை ஆயத்தப்படுத்த வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள்.

08/10/2021

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு புது காய்கறி மார்க்கெட் எதிரே உள்ளபகுதியில் நெடுஞ்சாலை ஓரங்களில் ஏராளமான மரங்கள் பல வருடங்களாக தன்னார்வலர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு பச்சைப் பசேல் என்று வளர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் தந்து வந்தது ஏழை சுமை தூக்கும் தொழிலாளர்கள் அந்த மரத்தின் நிழலில் தங்களின் உடல் வலியை களைய இளைப்பாறி வந்தனர்
இந்நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு வந்த தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவர்களை வெயிலிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு பயன் தந்து வந்த மரங்கள் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினரால் நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான இடத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் வைத்திருந்த எச்சரிக்கை பலகை மற்றும் பத்திற்கு மேற்பட்ட மரத்தை வேருடன் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளது இதனைப் பார்த்த இந்த மரங்களைப் பராமரித்து வந்த தொழிலாளர்களும் பொதுமக்களும் வேதனை அடைந்தனர் இன்று 75வது சுதந்திர தினத்தன்று அப்பகுதியில் பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் நெடுஞ்சாலை பகுதிகளில் அந்த தொழிலாளர்கள் 75 மரக்கன்றுகள் வைக்கவும் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தான் வேதனையின் உச்சம்
நம் தமிழ்நாட்டில் மரங்களின் இரு கண்களாக கருதப்படுவது, மரம் தான்.ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து நாம் கட்டடங்களாக மாற்றிவிட்டதின் விளைவே இவை.“கிளி வளர்த்தேன் பறந்து விட்டது”,”அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது”,மரம் வளர்த்தேன் இரண்டும் வந்துவிட்டது,என்றார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கூறினார்.அதனை நாம் கடைபிடித்தே ஆகவேண்டும்.மரங்களை, பயன்களை தெரிந்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அனைவரும் ஆர்வமாக . சமீப காலமாக மரம் வளர்த்து வருகிறார்கள் ஆனால் ஒரு சிலர் நெடுஞ்சாலை துறையினருக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள மரங்களை கூட வேருடன் வெட்டி சாய்த்து விடுகிறார்கள் அவர்கள் மீது பெரும்பாலும் அரசு அதிகாரிகள் பெரிய அளவு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை இதனால் தன்னிச்சையாக பல தனியார் நிறுவனத்தினர் அரசு நிலத்தில் உள்ள மரங்களை வேருடன் அப்புறப்படுத்தி விடுகிறார்கள் தன்னார்வலர்கள் கஷ்டப்பட்டு வளர்த்தும் மரங்களை இனியேனும்
வெட்டாதவாறு அரசும் அதிகாரிகளும், பாதுகாத்து மரங்களை வெட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு சமூக ஆர்வலர்கள் மரம் நடுவதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் மேலும் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள புது காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள வெட்டப்பட்ட மரங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் மேலும் ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்களை நட வேண்டும் என்று நீதிமன்றம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தி உள்ளது என்பதையும் நாம் நினைவூட்டுகிறோம்.

08/10/2021

மக்களின் வரிப்பணத்தில் பயனற்ற திட்டத்தை தலைவருடன் கைகோர்த்து பொறியாளரின் உதவியோடு செயல்படுத்திய செயல் அலுவலர் . கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர் பேரூராட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய செயல் அலுவலராக பணியாற்றிய அதிகாரி , மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத ஒரு திட்டத்தினை மக்களின் வரிப்பணம் சுமார் 60 லட்சத்திற்கு மேல் சுவாகா செய்துள்ளார் . சட்டத்தை மீறிய மண்ணை திருடிய மன்னர்கள் சிக்குவார்களா ??

08/10/2021

சென்னையில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் உள்ளே புகுந்து சமீபத்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு (கோ)செய்தியாளர்கள் சங்கம் தமிழ்நாடு பத்திரிகை செய்தியாளர்கள் நலவுரிமைச் சங்கம், அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் மித்ரன் மீடியா அசோசியேஷன் ஆகிய சங்கங்களின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு( கோ) செய்தியாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கை செய்தியாளர்கள் நலவுரிமைச் சங்கத்தின் தலைவர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு கோவை செய்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஜான் மற்றும் பொருளாளர் ஜி. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக சதீஷ் நன்றி கூறினார். முன்னதாக கிருஷ்ணமூர்த்தி, துரை, கணேஷ் பாபு, ரவி உள்ளிட்ட பலர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

08/10/2021

மேட்டுப்பாளையம் : 9 அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக ஒன்றிய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு செயலாளர் எஸ் பாஷா தலைமை தாங்கினார் எஸ்ட்டிடியு முகமது அலி ஏஐடியுசி செல்வம் சிஐடியு ஏ ஜி சுப்பிரமணியம் ஐ என் டி யு சி மூர்த்தி எம் எல் எப் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஏஐடியுசி மாநில துணை செயலாளர் ரவி சிஐடியு மாவட்ட பொறுப்பாளர் ரத்தினகுமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் ரயில்வே வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்கள் மின்சாரம் சுரங்கங்கள் வானூர்தி நிலையங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைப்பதை உடனே நிறுத்த வேண்டும் பெட்ரோல் டீசல் எரிவாயு போன்றவைகளின் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் மேலும் விவசாய பாதுகாப்பு சட்டம் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டம் மின்சார திருத்த சட்டம் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜா சாகுல் அமீது சம்சுதீன் சித்திக் மகாலிங்கம் பாபு பதுருதீன் நிஜாமுதீன் ஜாவித் சென்னியம்மா பாத்திமா மல்லிகா நபிஷா மற்றும் ஏஐடியுசி ராமதாஸ் செந்தில் சக்திவேல் ஹெச்எம்எஸ் பால தண்டபாணி ஐஎன்டியுசி மூர்த்தி சென்ட் முரளி ஆனந்தன் அணில் வினோத் எல்பிஎஃப் குட்டி சண்முகம் எஸ்ட்டிடியு அஷ்ரப் அலி யூசூப் ஆட்டோ கனி ராஜன் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் காதில் பூவை சுற்றிக் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு படையல் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் மேலும் கூடியிருந்த பெண்கள் வாயில் வடை சுடும் போராட்டத்தை நடத்தினார்கள்

Address

No. 30, Sri Ram Nagar, 4th Street East, Chettipalayam Main Road

Alerts

Be the first to know and let us send you an email when Win Express Kovai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Win Express Kovai:

  • Want your business to be the top-listed Media Company?

Share