19/08/2025
“1967-ல் பிறந்த இவரு ...90 க்குள்ளவே ...
கன்னட சினிமாவோட faceயே மாத்தினாரு …”
“இவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை…
இவர் ஒரு இயக்குனர், எழுத்தாளர், பாடகர்… முக்கியமா… ஒரு சிந்தனையாளரா இருக்கிறாரு..
உண்மையிலேயே, இந்திய சினிமாவில அவரைப் போல யோசிக்கிறவர்கள் ரொம்ப கம்மி. விமர்சகர்களும், பார்வையாளர்களும் அவரோட படங்களின் அர்த்தத்தை புரிஞ்சுக்க நிறைய நேரம் எடுத்துகிட்டாங்க. ஆனா புரிஞ்ச பின்பு, உப்பெந்திரா ஒரே மேதைன்னு ஒத்துக்கிட்டாங்க.
அவரோட படங்கள் அவருக்கான அடையாளத்தை வாங்கி கொடுத்துச்சி ன்னு சொல்லலாம்
அதுலயும் அவரோட Om ன்ற படம் அவருக்கு முக்கியமான படமா அமைஞ்சது … gangsters வோட உண்மை வாழ்க்கையைய ... அதுவும் நெஜ ரௌடிகள வச்சி எடுத்துருப்பாறு....
ஃப்ளாஷ்பேக் குள்ள ஃப்ளாஷ்பேக் போகும்.. அதுலருந்து ரசிகர்கள் இவரை ‘REAL STAR’ன்னு அழைக்க ஆரம்பிச்சாங்க.
அடுத்ததா...
“‘A’… இந்திய சினிமாவுல முதல்முறையா reverse screenplay…,ல
சொல்லப்பட்ட கதை படம்..இந்த படம் சமூக அபத்தங்களை பத்தி பேசியிருக்கும்...
“‘Upendra படத்துல – ‘நானு’ன்னு ஒரே ஒரு பாத்திரம் வழியா…
அகம்பாவம், காதல், வாழ்க்கை தத்துவம்… எல்லாத்தையும் கேள்வி கேட்ருப்பாரு...
“‘Super’…ல இந்தியாவோட எதிர்காலம் எப்படி இருக்கும்? அதை
சமூக அரசியல் சிந்தனைகளோட visual ல காட்டியிருப்பாரூ.
“2002-லையே, ரோபோவா நடிச்ச முதல் இந்திய நடிகர் இவர் தான்…
அதுக்கு ‘Hollywood’னு பேர் வச்சி ரோபோவ காதலிக்க வச்சாரு..
“2018-ல… அரசியல்ல அடியெடுத்து வச்ச இவரு
‘Uttama Prajaakeeya Party’…ய உருவாக்கி.....அது மூலமா
‘பொதுமக்கள் தான் ஆட்சி நடத்தணும்’ன்னு சொன்னாரு
“திரையில் ‘Real Star’…
வாழ்க்கையில் அன்பான கணவர், அன்பான தந்தை.”
அவரோட ஒவ்வொரு படமும்… கதை இல்லை… ஒரு புரட்சி.
அதனால்தான்… அவர் REAL STAR UPPENDRA வா இருகாரு