CPIM Puducherry

CPIM Puducherry Official page of Communist Party of India (Marxist) - Puducherry State Committee.
(1)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

ஆங்கிலத்தில் சுருக்கமாக CPM (அல்லது) CPI-M என்று அழைக்கப்படும் இக்கட்சியின் முழுப்பெயர் Communist Party of India (Marxist) எனப்படும். இந்தியாவில் மொத்தம் 6 தேசியக் கட்சிகளே உள்ளன, அவற்றுள் மார்க்சிஸ்ட் கட்சியும் ஒன்று.

மக்கள் ஜனநாயக புரட்சியை அடிப்படையாகக் கொண்ட இக்கட்சி இந்தியாவில் மு

தலாளித்துவத்தையும், சாதியத்தையும் எதிர்த்து தொடர்ந்து களத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.

விவசாயிகளையும், உழைப்பாளிகளையும், மாணவர்களையும், பெண்களையும் திரட்டி வர்க்க ரீதியிலான போராட்டத்தை கூர்மைபடுத்திக் கொண்டிருக்கிறது.

மார்க்சியம் என்னும் தத்துவ அடிப்படையில் சுரண்டலற்ற, ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க திட்டமிட்டு பயணம் செய்துகொண்டிருக்கிறது.

வாருங்கள் இணையுங்கள் புதுச்சேரியை இந்தியாவை பாதுகாப்போம்.

27/05/2026
2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மாஹி சட்டமன்ற தொகுதியில் சிபிஐ(எம்) ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள  சட்டமன்ற உறுப்பினர் தோ...
18/05/2026

2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மாஹி சட்டமன்ற தொகுதியில் சிபிஐ(எம்) ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் தோழர் T. அசோக்குமார் அவர்கள் சிபிஐ(எம்) புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் s.ராமசந்திரன் அவர்களை இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
#2026

ஊதியம் மற்றும் வேலை நிலைமையில் மாற்றம் கோரி போராடிய காஞ்சிபுரம் சாம்சங் மற்றும் எஸ் ஹெச் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பன்னாட்டு ந...
04/05/2026

ஊதியம் மற்றும் வேலை நிலைமையில் மாற்றம் கோரி போராடிய காஞ்சிபுரம் சாம்சங் மற்றும் எஸ் ஹெச் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்த தோழர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு வேலூர் சிறையில் 21 நாட்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட தோழர் இ.முத்துக்குமார் உள்ளிட்ட ஆறு தோழர்கள் விழுப்புரத்தில் தங்கி முதன்மை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையொப்பம் இடுகிறார்கள். அவர்களது நியாயமான உரிமை கேட்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புதுச்சேரி சி.பி.எம். மாநிலச்செயலர் தோழர் எஸ்.ராமச்சந்திரன் சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், தினேஷ்குமார், விஜயகுமார், மணிபாலன் ஆகியோர் தோழர்களைச் சந்தித்து வர்க்க உணர்வையும் தோழமையையும் வெளிப்படுத்தினர்.

பத்திரிகை செய்திபுதுச்சேரி தேதி: 27-04-2026புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி நீக்கம் மற்றும் இந்தித் திணிப்பு முயற்சி: ஒன்றிய...
27/04/2026

பத்திரிகை செய்தி
புதுச்சேரி தேதி: 27-04-2026

புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி நீக்கம் மற்றும் இந்தித் திணிப்பு முயற்சி: ஒன்றிய அரசின் கல்வி உரிமைப் பறிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

வணக்கம். "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் புகுத்தப்பட்டபோதே, இது இந்தி மற்றும் இந்துத்துவா திணிப்பிற்கான முதற்படியே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்தது. ஆனால், அப்போது புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் 'எக்காரணத்தைக் கொண்டும் இந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம்' என்று மாணவர்களுக்கும் மக்களுக்கும் வெற்று வாக்குறுதி அளித்தனர். இன்று அந்த வாக்குறுதியைத் தகுந்த ஆதாரங்களுடன் அரசு மீறியுள்ளது அம்பலமாகியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, ஒன்றிய அரசின் கைப்பாவையாகப் புதுச்சேரி கல்வித்துறை செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது." .

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாகவே, யூனியன் பிரதேச அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசு மாணவர்கள் மீது அடுத்தகட்டத் தாக்குதலை நடத்தியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்திலிருந்து பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு, இந்தி அல்லது சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. புதிய அமைச்சரவை பொறுப்பேற்பதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது.

இந்தியாவின் பிற மாநிலங்களை விடப் புதுச்சேரி மொழிப் பயிற்றுவிப்பில் முற்றிலும் மாறுபட்டது. இங்கு தமிழ், தெலுங்கு (ஏனாம்), மலையாளம் (மாகி) மற்றும் பிரெஞ்சு ஆகிய நான்கு மொழிகளும் தாய்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 1956-ஆம் ஆண்டு கையெழுத்தான 'ட்ரீட்டி ஆஃப் செஷன்' (Treaty of Cession) ஒப்பந்தத்தின்படி, மக்கள் பிரதிநிதிகள் விரும்பும் வரை பிரெஞ்சு மொழி ஆட்சி மொழியாகத் தொடரும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் சர்வதேச வேலைவாய்ப்புகளில் பிரெஞ்சு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. இச்சலுகைகளைப் பறிக்கும் வகையில், 'இந்துத்துவா' அரசியலைப் புகுத்துவதற்கான சோதனைக்களமாகப் புதுச்சேரியை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது.

எனவே பிரெஞ்சு மொழிப் பாடத்தை அகற்றிவிட்டு, எக்காரணத்தைக் கொண்டும் இந்தி அல்லது சமஸ்கிருத மொழியைத் திணிக்கக் கூடாது. இத்தகைய மொழித் திணிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் வலிந்து திணிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. (CBSE) பாடத்திட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதுச்சேரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாநிலப் பாடத்திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்கெனத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனி 'மாநிலக் கல்வி வாரியத்தை' (State Education Board) உடனடியாக உருவாக்க வேண்டும். இதன் மூலம் நமது மண்ணின் கலாச்சாரம் மற்றும் கல்வி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். தாய்மொழிவழிக் கல்வியைப் பறிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் ஒன்றிணைய வேண்டும். இந்த மொழித் திணிப்பு மற்றும் கல்வி உரிமைப் பறிப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தொடர்ச்சியான மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் அணிதிரள வேண்டும்.

தாய்மொழியைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் முன்நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி,
எஸ். ராமச்சந்திரன்,
செயலாளர்,

ஊடாக அறிக்கை:15.04.2026'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் தென் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் மோடி அரசை எப்போதும் 'முத...
16/04/2026

ஊடாக அறிக்கை:
15.04.2026

'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் தென் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் மோடி அரசை எப்போதும் 'முதல் ஆளாக' வரவேற்கும் முதல்வர் ரங்கசாமிக்குக் கடும் கண்டனம்!

புதுச்சேரி: ஒன்றிய பாஜக அரசின் நயவஞ்சகத் திட்டமான நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்குத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பெண்கள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் அரங்கேறும் அதிகாரப் பறிப்பு: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப் போகிறோம் என்று கூறிக்கொண்டு, அதன் மறைவில் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) எனும் பேராபத்தைத் தென் மாநிலங்கள் மீது திணிக்க பாஜக துடிக்கிறது. இது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் அடியோடு குறைக்கும் ஒரு திட்டமிட்டச் சூழ்ச்சியாகும்.

புள்ளிவிவரங்கள் காட்டும் பேராபத்து: இந்தத் தொகுதி மறுவரையறை அமலுக்கு வந்தால்:

நாடாளுமன்ற இடங்கள் 543-லிருந்து 850 ஆக உயரும்.
இதில் ஹிந்தி பேசும் வட மாநிலங்களின் பலம் 207-லிருந்து 543 ஆக (சுமார் 77 சதவீதம்) அதிகரிக்கும்.
ஆனால், தென் மாநிலங்களின் பலம் வெறும் 33 சதவீதம் மட்டுமே உயரும். இதனால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்பட்டு, வட மாநிலங்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்படும்.
புதுச்சேரியைப் புறக்கணிக்கும் மோடி அரசு - மௌனம் காக்கும் முதல்வர்: ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது புதுச்சேரி மாநிலத்திற்கு எந்தவொரு கூடுதல் நிதி ஒதுக்கீடும் வழங்கப்படுவதில்லை. புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கைகளான:

முழுமையான மாநில அந்தஸ்து,
பழைய கடன் தள்ளுபடி மற்றும் கூடுதல் நிதிப் பகிர்வு,
நிதி ஆணையத்தில் (Finance Commission) சேர்த்தல், என எதையுமே ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றுவதில்லை. புதுச்சேரியைத் தொடர்ந்து வஞ்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது மோடி அரசு.
வெட்கக்கேடான அரசியல் அடிபணிவு: இத்தனைப் புறக்கணிப்புகள் மற்றும் அவமானங்களுக்குப் பிறகும், புதுச்சேரி மக்களின் நலனைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல், மோடி அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் - அது மாநிலத்திற்கே எதிராக இருந்தாலும் - எப்போதும் 'முதல் ஆளாக' நின்று வரவேற்கும் ஒரு முதல்வராக ரங்கசாமி அவர்கள் இருப்பது வெட்கக்கேடானது. மாநிலத்தின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைத்துவிட்டு, வெறும் 'வாழ்த்துக் கடிதம்' எழுதும் முதல்வராக அவர் மாறியிருப்பது புதுச்சேரி மக்களுக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமாகும்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இச்சதிக்கு எதிராகக் கொதித்து எழுந்து போராடத் தயாராகி வரும் நிலையில், தனது அரசியல் இருப்பிற்காக ஒன்றிய ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்த முதல்வர் ரங்கசாமி துடிக்கிறார். ஜனநாயகத்தைச் சிதைக்கும் இந்த 'இரட்டை இன்ஜின்' ஆட்சியின் போக்கை சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒன்றிய அரசின் சதித் திட்டத்தையும், அதற்குத் துணை போகும் புதுச்சேரி முதல்வரையும் எதிர்த்து மக்கள் ஓரணியில் திரள வேண்டும் மேலும், தென்னிந்திய மாநிலங்களுக்கு விரோதமான ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு நமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும் நாளை (ஏப்ரல் 16ந் தேதி) கட்சி அலுவலகங்களிலும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், மக்கள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
(எஸ். ராமச்சந்திரன்) மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி மாநிலக் குழு.

Address

Pondicherry

Telephone

+917339602449

Website

http://linktr.ee/pycpim

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Puducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CPIM Puducherry:

Share