
26/12/2024
புதுச்சேரி முத்தியால்பேட்டை : 20- ஆம் ஆண்டு சுனாமி நினைவுநாளை முன்னிட்டு ஈரம் ஃபவுண்டேஷன் தலைவரும் முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான ஈரம் ராஜேந்திரன் தலைமையில் முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதி கடற்கரையில் சுனாமி பேரலையால் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்சியாக கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் ஊர்பொதுமக்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஈரம் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.