உடையாம்பட்டிகாரன்

உடையாம்பட்டிகாரன் கடவுள் சிற்பத்தை ஒரு 'கல்' என்பவர்கள்,
பணத்தை ஒரு 'காகிதம்' என்று ஒத்துக்
கொள்வதில்லை!

காலாற நான் நடந்த,
களத்துமேடு சுகந்தானா..?
நல்ல தண்ணீ நான் குடிச்ச,
நலிஞ்ச ஓடை நலந்தானா..?

காட்டுல என் கால் துளச்ச,
முங்கி முள்ளு சுகந்தானா..?
வலிபொறுக்க நான் மிதிச்ச,
பசுஞ்சாணமது நலந்தானா..?

பசங்க நாங்க கூத்தடிச்ச,
பாலமது சுகந்தானா..?
காத்துல நான் பறக்கவிட்ட,
பட்டமது நலந்தானா..?

குச்சி தந்து வாங்கிவச்ச,
மயிலிறகு சுகந்தானா..?
குறிபாத்து நான் எறிஞ்ச,
நாத்துக்கட்டு நலந்தானா..?

பட்டிக்காட்டில் நான

் பறிச்ச,
பட்டிப்பூவு சுகந்தானா..?
பல்துலக்க நான் ஒடச்ச,
வேப்பங்குச்சி நலந்தானா..?

நித்தம் நீந்தி குளிச்சிருந்த,
கொளமும் அது சுகந்தானா..?
நீராகாரம் நான் குடிச்ச,
கலயமும்தான் நலந்தானா..?

நலமறிய நான் கேட்டேன்!
ஆனா,
என்னக் கேட்க நாதியில்ல!
நம்பித்தான நானும் வந்தேன்...
இந்த பாழும் நகரத்துக்கு!

வாகன சத்தமெல்லாம்...
வண்டு சத்தத்துக்கு ஈடாகுமா..?
இத்தன பேர் இங்கிருந்தும்...
இருக்குதிங்க அனாதை இல்லம்!

அங்க, தண்ணி தெளிச்சு கோலம் போட்டோம்.
இங்க, தண்ணி இல்லாம ஓலம் போட்டோம்.
'குக்கர்' சொல்லுது 'பொங்கலோ பொங்கல்'
கோயில் 'மிஷின்' அடிக்குது மேளச்சத்தம்!

பணத்த பாத்த மக்கா-மனித
மனத்த பாத்ததுண்டா!

எங்காத்தா சொல்லும்...
நாலு ஓடைய தாண்டுனா
நம்ம வயலுடான்னு!
இங்கயும் சொல்றான்...
நாலு சாக்கடைய தாண்டுனா
சந்துக்குள்ள வீடுன்னு!!

ஒத்தயடிப் பாதயில...
நெரிசலின்றி போய்வருவோம்!
கட்டவண்டி ஏறி நாங்க...
காடுகள தாண்டிடுவோம்!
மாடுகள மேய்ச்சு நாங்க...
மனநிறைவா வாழ்ந்திடுவோம்!
அசந்துவர தூக்கத்துல...
கனவுபல கண்டிடுவோம்!
வீறுகொண்ட சிங்கம்போல...
வீதியெங்கும் வந்திடுவோம்!
வெக்கப்படும் பொண்ணப் பாத்தா...
'வெள்ளந்தியா' சிரிச்சிடுவோம்!
அன்பு வச்ச உள்ளத்துக்கு...
ஆயுசுக்கும் உழைச்சிடுவோம்!
அதுல வர சந்தோசத்தில்...
ஆயுள் நூறு வாழ்ந்திடுவோம்!

ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து  தப்பிக்க முடியுமா...?இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்க...
16/09/2025

ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து தப்பிக்க முடியுமா...?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

மேகம்+நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை உண்டாக்கும்.

இந்த அதீத ஆற்றல் கொண்ட மின்னல் கீற்று மேகத்திற்கும் நிலத்திற்கும் இடையே உள்ள காற்றை படுவேகமாக கிழிக்கும். இப்படி கிழித்து பிரிக்கும்போது, காற்று அதே வேகத்துடன் பின்னோக்கி விரிவடையும்.

இப்படி வேகமாக விரிவடையும்போது ஏற்படும் பயங்கரமான ஒலி தான் இடி.

சிலர் நினைப்பது போல் மேகங்கள் மோதிக்கொள்ளும்போது தான் இடி உருவாகும் என்பது தவறான கருத்து. மின்னல் காற்றை கிழித்துக் கொண்டு பயணிக்கும்போது காற்று உருவாக்கும் ஒலி தான் இடி.

உதாரணமாக...

ஒரு பட்டாசில் தீ வைக்கிறோம். திரி மருந்தை அடைந்ததும் அது ஒலியுடன் வெடிக்கும். சரி தானே...?

ஆனால், ஒரு பலூனை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஒரு ஊசியால் குத்தினால் அது எப்படி பலத்த ஓசையுடன் வெடிக்கிறது...? உள்ளே மருந்து என எதுவும் இல்லையே...? எப்படி ஒலி உண்டானது...?

காரணம், நாம் காற்றை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஊசியால் குத்தும் போது, அடைத்து வைக்கப்பட்ட காற்று அதீத வேகத்தில் வெளிப்பட்டு வெளிக்காற்றுடன் சேர்ந்து விரிவடையும்போது தான் இந்த ஒலி உண்டாகும்.

இதே பலூனை நீங்கள் நிலாவில் வெடித்தால், அங்கே ஒலி கேட்காது. ஏனெனில், அங்கு காற்று இல்லை. அது விரிவடைய முடியாது.

இதே போல் தான்...ஒரு அணுகுண்டை வெடிக்க வைக்கும்போது அந்த வெடிப்பில் உண்டாகும் ஆற்றல் காற்றை கிழித்து வேகமாக விரிவடைய செய்யும்போது தான் அந்த 'பூம்ம்ம்' ஒலி நமக்கு கேட்கும்.

இதே அணுகுண்டை நிலாவில் வெடித்தால் நமக்கு ஒளி மட்டுமே தெரியும். ஒலி கேட்காது.

ஆக, மின்னல் உருவாகும்போது அது காற்றை கிழித்து பாதையை உருவாக்கும்போது காற்று வேகமாக விரிவாகும் நிலையில் கேட்கும் ஒலி தான்
இடி.

சரி இப்போது மின்னலை பார்ப்போம்.

மழையை உருவாக்கும் குமுலோநிம்பஸ் மேகங்கள் அடர்த்தியாக திரண்ட பின்னர் அதே வேகமாக சுமார் 10-15 கிமீ வரை மலை போல் வளரும்.

இந்த மேகத்திற்குள் சிறிய ஐஸ் துகள்கள்(ice crystals) மற்றும் பெரிய ஆலங்கட்டிகள்(hails) பல பில்லியன் எண்ணிக்கையில் காணப்படும்.

சிறிய ஐஸ் துகள்கள் positive charge-வுடன் மேகத்தின் மேற்பரப்பிற்கு சென்று விடும். பெரிய ஆலங்கட்டிகள் negative charge-வுடன் மேகத்தின் அடிப்பாகத்தில் தங்கிவிடும்.

பின்னர் இவை பலமாக மோதிக்கொள்ளும்போது ஒரு electric current உருவாகும். இந்த கரண்ட் மேகத்திலிருந்து வெளிப்பட்டு சுமார் 50 மீட்டர் வரை மட்டுமே கீழே பூமியை நோக்கி நீளும்.

இதற்கு அடுத்த நிலையில், பூமியில் உள்ள மனிதர்கள் உள்பட அனைத்து பொருட்களும் இந்த மழை, புயல் நேரங்களில் ஒருவித மின்னழுத்த பாதையை வெளியிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Streamer எனக் கூறுவார்கள்.

மனிதர்கள், மரங்கள், வீடுகள், கம்பங்கள் என செங்குத்தாக நிற்கும் அனைத்தும் இந்த Streamer- களை வெளியிடுவார்கள். இவை மேல்நோக்கி செல்லும்.

இப்போது மேலே 50 மீட்டர் தொலைவு வரை வந்த electric current-ஐ இந்த Streamer தொட்டு இணைந்து விட்டால், கீழே எதன் மூலம் இந்த Streamer வெளியானதோ அது மீண்டும் ஒரு பலமான return stroke கொடுக்கும். இதுவும் electric current-ம் சேர்ந்து தான் ஒரு பயங்கரமான மின்னல் வெட்டை உருவாக்கும்.

பலரும் நினைப்பது போல் மின்னல் மேகத்திலிருந்து தோன்றி அப்படியே பூமியில் உள்ளவைகளை நேரடியாக தாக்காது. மின்னல் என்பது கிட்டத்தட்ட பூமியில் உருவாகி மேலே செல்கிறது.

உதாரணமாக....

மின்னல், இடி அடிக்கும்போது நாம் வெளியே செல்கிறோம். நாம் எப்போதும் செங்குதாகவே நடப்போம்/நிற்போம்.

அதே சமயம், நாம் இருக்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம், கம்பம், வீடு என எதுவும் இல்லை.

இப்போது மேலே அந்த electric current 50 மீட்டர் தொலைவில் (மேகத்திலிருந்து) ஒரு பாதையை உருவாக்க Streamer-காக காத்துக் கொண்டு இருக்கும்.

கீழே நடக்கும் நம் தலை மற்றும் உடலில் இருந்து Streamer வெளியாகி மேல் நோக்கி செல்லும்.

இரண்டும் இணையும்....return stroke ஏற்படும். இப்போது electric current-க்கு பாதை கிடைத்ததும் அந்த பாதையின் எல்லை வரை அது பயணம் செய்யும்.

அந்த பாதையின் எல்லை எது....?

நம் தலை தான்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்...பூமியும் Streamer-களை வெளியிடும். ஆனால், flat-ஆன பூமி வெளியிடும் Streamer மேலே செல்வதற்குள் செங்குத்தாக நிற்கும் நாம் வெளியிடும் Streamer விரைவாக மேலே சென்று இணைந்து விடும்.

ஆக, எலக்ட்ரிக் கரண்டின் டார்க்கெட் நம் தலை தான்.

சரி, நாம் நிற்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம் உள்ளது. யாரை எலக்ட்ரிக் கரண்ட் தேர்வு செய்யும்...?

அஃப்கோர்ஸ், உயரமான மரம் தான் பிரைமரி டார்க்கெட்..ஆனால், நாமும் ஆபத்தில் தான் இருப்போம்.

ஏனெனில், மரம் வெளியிடும் Streamer மேலே இணைந்தவுடன் பாதை ஏற்படும் மரத்தின் உச்சி வரை எலக்ட்ரிக் கரண்ட் வந்துவிடும். அருகில் வேறு ஏதாவது உயரமாக இருந்து அது Streamer-ஐ வெளிப்படுத்தும்போது அந்த எலக்ட்ரிக் கரண்ட் அசுர வேகத்தில் அங்கே Jump செய்துவிடும்.

இதனால் தான் உயரமான மரத்திற்கு அருக நிற்க கூடாது என்கிறார்கள்.

சரி, மேலே எலக்ட்ரிக் கரண்ட் தயார் நிலையில் உள்ளது...கீழே நாம் நடக்கிறோம்...நம்மை விட உயரமானது எதுவும் அருகில் இல்லை. நம்மை இன்னும் சில வினாடிகளில் மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர முடியுமா..?

முடியும்.

வெளியே நீங்கள் நிற்கும்போது/நடக்கும்போது உங்கள் உடல் Streamer-களை வெளியிடும். அப்போது...

உங்கள் தலைமுடிகள் நேராக நிற்கும்..

உங்கள் தோலை யாரோ வருடி விடுவதுபோல் தோன்றும்...

உங்களிடம் இரும்பு சாவி, செயின், மோதிரம், டூல்ஸ் என ஏதாவது இருந்தால் அவை vibrate ஆகும்.

இந்த மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒரு இருப்பிடத்திற்குள் படுவேகமாக நுழைந்து விட வேண்டும்.

இருப்பிடம் இல்லையெனில், அப்படியே கீழே அமர்ந்து இரண்டு கால்களுக்கு இடையில் தலையை கீழ்புறமாக தொங்கவிட்டு இரண்டு காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டும்.(கமெண்ட்டில் போட்டோ பார்க்கவும்)

அதாவது, ஒரு செங்குத்தான நிலையை மேலே உள்ளவனுக்கு கொடுக்க கூடாது.

ஆக, மின்னல் என்பது தானாக, எதேச்சையாக உங்களை தாக்கவில்லை. அதாவது, அது தாக்கும் இடத்தில் நீங்கள் நிற்கவில்லை.

மாறாக, நீங்கள் அங்கே சென்று அந்த மின்னலை வா வா என அழைத்ததால்(Streamers) அது உங்களை குறிவைத்து தாக்கியது. ஒருவேளை, நீங்கள் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், அங்கே மின்னல் தாக்குவதும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஏனெனில், மேகங்கள் நகரும்போது காத்திருக்கும் அந்த எலக்ட்ரிக் கரண்ட் வேறு ஒரு இடத்தில் உயரமான பொருள் மீது தாக்கியிருக்கும்.

ஆக, இடியை மேகங்கள் உருவாக்கவில்லை. அது காற்றிலிருந்து வெளியாகிறது...மின்னல் மேகத்திலிருந்து நேராக நம்மை தாக்கவில்லை. நாம் அதனை கீழே இருந்து வரவழைக்கும் ஒரு 'இணைப்பு புள்ளியாக' இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம்!

Pudukukottai malauedu arch  அந்த ந ( நகராட்சி) எவன் தலையில விழுந்து எவன் குடி அழிய போறதுக்கு முன்னாடி இத பாத்தா நல்லது
11/09/2025

Pudukukottai malauedu arch அந்த ந ( நகராட்சி) எவன் தலையில விழுந்து எவன் குடி அழிய போறதுக்கு முன்னாடி இத பாத்தா நல்லது

நிஜ்யு ஹிபாகுஷா (Nijyuu Hibakusha) சுட்டோமு யமகுச்சியின் கதை யமகுச்சி ஐப்பானில் உள்ள நாகசாகியில் மார்ச் 16,1916 அன்று நட...
13/08/2025

நிஜ்யு ஹிபாகுஷா
(Nijyuu Hibakusha)

சுட்டோமு யமகுச்சியின் கதை

யமகுச்சி ஐப்பானில் உள்ள
நாகசாகியில் மார்ச் 16,1916 அன்று நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.

படிப்பில் கெட்டியான அவர்
நன்றாகப் படித்து டோக்யோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியானார்.

இளம் வயதிலேயே நாட்டில் உள்ள மிகப்பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான மிட்சுபுஷியில் கப்பல் கட்டும் பொறியாளரானார். தனது சொந்த ஊரில் இயங்கி வந்த மிட்சுபுஷி தொழிற்சாலையில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

அவருக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

உலகப் போர் சூழலில்,
மிட்சுபுஷி நிறுவனம் ஜப்பான் இம்பீரியல் ராணுவத்துக்குத் தேவையான கப்பல்கள், டோர்பிடோக்கள், தளவாடங்களை மும்முரமாகத் தயார் செய்து கொடுத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், இவருடன் சேர்ந்து இவருடன் பணியாற்றும் அகிரா இவனாகா, குனியோஷி சாட்டோ ஆகிய நண்பர்களுக்கு- 400 மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஹிரோஷிமா நகரில் உள்ள மிட்சுபுஷி கப்பல் தொழிற்சாலையில் மூன்று மாதங்கள் பணிபுரிய "மாற்றுப் பணி" வழங்கப்பட்டது.

மூன்று மாதங்கள் செவ்வனே தனது கடமைகளை முடித்த பின்
ஆகஸ்ட் 6,1945 அன்று காலை
ரயில் மூலம் மூவரும் நாகசாகி பயணத்திற்கு ஆயத்தமாகினர்.

இந்நிலையில் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து செல்லும் போது
தனது அலுவலக முத்திரையை மிட்சுபுஷி அலுவலகத்தில் மறந்து வைத்ததை உணர்ந்து மீண்டும் அலுவலகம் நோக்கி நடக்கிறார்.

நண்பர்கள் இருவரும் மிட்சுபுஷி கப்பல் கட்டும் இடத்துக்கு சென்று விட்டு ரயில் நிலையத்துக்கு வருவதாகக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் சரியாக காலை 7 மணியில் இருந்தே
இரண்டு பி29 அமெரிக்க போர் விமானங்கள் அவ்வப்போது ஹிரோஷிமா வான் எல்லைக்குள் வருவதும் போவதுமாக இருக்கவும்

ஏர் ரெய்டு சைரன்கள் ஒலிக்கவும்
பிறகு அமைதியாகவும் என்று இருந்தன.

கடந்த சில நாட்களாகவே இவ்வாறு
அமெரிக்க விமானங்கள் ஒத்திகை பார்த்து வந்தபடியால் புலி வருது கதை போல ஹிரோஷிமா மக்களும்
ஏர் ரைடு சைரன்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.

சுட்டோமுவும் காலை 8 மணி போல் ஒலித்த சைரன்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் அலுவலகத்தில் தனது முத்திரையை எடுத்துக் கொண்டு வெளிய வரும் போதே

சூரியனை விஞ்சும் அளவு பெரிய ஒளிக் கீற்று அவரைத் தாக்கியது.
கூடவே பெரிய அதிர்வு அலை வர அவர் அருகில் இருந்த சாக்கடையில் இறங்கி முகத்தை மூடிக் கொள்ள முயன்றும் அந்த பலமான விசை அவரை அங்கிருந்து அருகில் உள்ள உருளைக்கிழங்கு நடவு செய்யப்பட்ட வயலுக்குள் வீசியது.

முகம் கை கால் உடல் என முழுவதும் தீக்காயங்களுடன் தனது நண்பர்களைத் தேடி ரயில் நிலையம் சென்றால் அங்கு இல்லை.

அருகில் இருந்த மிட்சுபுஷி தொழிற்சாலையில் இரு நண்பர்களும் உயிருடன் இருந்ததை அறிந்து மகிழ்ச்சி கொண்டார்.

மூவரும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைபெற்றுக் கொண்டு
அன்றைய இரவு பங்கர்களுக்குள் அடைக்கலம் புகுந்தனர்.

அடுத்த நாள் காலை
ரயில் நிலையம் இயங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

உடனடியாக ஆகஸ்ட் 7 ஆம் தேதி நாகசாகிக்கு வண்டியேறி
ஆகஸ்ட் 8 நாகசாகி அடைந்தார்.

அங்கு அவரது தாயால் கூட இவரை அடையாளம் காண முடியவில்லை.
முகம் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டதால் ஏதோ பேய் பிசாசு தான் வருகிறது என்று நினைத்ததாக அவரது தாய் பதிவு செய்திருக்கிறார்.

ஆகஸ்ட் 8 அன்று அருகில் இருந்து மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு அன்றைய நாள் முழுவதும் ஓய்வில் இருந்தார்.

ஆகஸ்ட் 9, என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து, நாகசாகியில் உள்ள தனது மிட்சுபுஷி அலுவலகத்துக்குச் சென்றார்.

அங்கு இவரது வருகையை அறிந்த
இயக்குனர் பணியாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்வைக் கூட்டி

ஹிரோஷிமாவில் என்ன நடந்தது என்று கேட்டார்.

ஹிரோஷிமாவில் நடந்ததை சுட்டோமு விவரித்ததை கேட்டதும்..

"எப்படி ஒரு குண்டைப் போட்டு ஒரு நகரையே உருக்குலைய வைக்க முடியும்? இதெல்லாம் நம்பும்படியாக இல்லை" என்று அந்த தொழிற்சாலை இயக்குநர் பேசிக் கொண்டிருக்கும் போது

மீண்டும் அதே பளிச்சென்ற மின்னல் கீற்று பாய்ந்தது.
இம்முறை ஐந்து அதிர்வு அலைகள்.

சுட்டோமுவுக்குத் தெரிந்து விட்டது.
இது ஹிரோஷிமாவில் தான் உணர்ந்த அதே விஷயம் என்று உடனே மேஜைக்கு கீழ் சென்று ஒழிந்து கொண்டார்.

இவ்வாறு ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களிலும் அணுகுண்டு வெடித்த கிரவுண்ட் ஜீரோவுக்கு மிக அருகில் இருந்து வீச்சை வாங்கியவர் இவர்.

போர் ஓய்ந்த காலகட்டத்தில்
அணுகுண்டு தரும் துன்பத்துக்கு ஆளானவர்களை
"ஹிபகுஷா" என்று அழைக்கும் மரபு தோன்றியது.

அவர்களுக்கு முன்னுரிமை அட்டைகள் வழங்கப்பட்டு சிகிச்சையில் முன்னுரிமை, அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு மானியம் ஆகியவை வழங்கப்பட்டன.

1957 இல் சுட்டோமுவும் ஹிபாகுஷாவாக அங்கீகரிக்கப்பட்டு முன்னுரிமை அட்டையைப் பெற்றார்.

ஆனாலும்,
போர் ஓய்ந்த ஜப்பானில் ஹிபாகுஷாக்கள்
சமூக வெறுப்புக்கும் அருவருப்புக்கும் உள்ளானது உண்மை.

அணுக் கதிர் வீச்சுக்கு உள்ளாகி கடும் காயங்களைக் கண்டவர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர்.
இத்தகையோருக்கு முறையான வேலைவாய்ப்பு , புணரமைப்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டன.

கதிர் வீச்சுக்கு உள்ளான பெண்களுக்கு திருமணமாவதில் சிக்கல் தோன்றியது. குழந்தை பிறப்பு நடக்காது என்பது போன்ற மூடநம்பிக்கைகள் பரவின.

அவர்கள் இருக்கும் இடங்களில் கதிர் வீச்சு அபாயம் உண்டு என்ற மூடநம்பிக்கை செய்தி பரவியதால்
ஹிபகுஷாக்கள் பொதுவெளிகளில் அங்கம் வகிக்க இயலாமல் அருவருக்கப்பட்டனர். வீடு கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

இதனால் மனரீதியான தாக்குதலுக்கு ஹிபகுஷாக்கள் உள்ளாக்கப்பட்டனர்

இதன் விளைவாக
தங்களுக்கு நேர்ந்த அணுகுண்டு சார்ந்த அனுபவங்களை சமூகத்தின் ஒதுக்குதலுக்கு பயந்து அஞ்சி வெளியே சொல்லாமல் பலர் வாழ்ந்து வந்தனர்.

சுட்டோமு யமகுச்சியும் தனது 90 வயது வரை
இது குறித்து வாய் திறக்காமல் அமைதி காத்தார்.

தனது வாழ்வின் இறுதி பத்தாண்டுகளில் தான் அணுகுண்டுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு வலு சேர்க்க தனது வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறினார்.

2009 ஆம் ஆண்டு
ஜப்பான் அரசாங்கம்
அவரை இரண்டு அணுகுண்டுகளின் தாக்கத்தை துயரத்தை சந்தித்தவர் என்று அங்கீகாரம் வழங்கியது.
அவருக்கு வழங்கப்பட்ட பெயரே
" நிஜ்யு ஹிபாகுஷா " அதாவது
இரண்டு முறை அணுகுண்டின் தாக்கத்தை துயரத்தை அனுபவித்தவர் என்று அர்த்தம்.

இவரைப் போன்று 165 பேர்
இரண்டு அணுகுண்டுகளின் தாக்கங்களை பெற்றிருந்தனர் என்று கூறப்பட்டாலும்
அவர்களுக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்னமே இறந்து விட்டனர்.

போர் முடிந்த காலத்தில் ஆறு லட்சம் + ஹிபகுஷாக்கள் இருந்த சூழ்நிலையில்
தற்சமயத்தில் 2025இல் சுமார் ஒரு லட்சம் ஹிபகுஷாக்கள் வாழ்ந்து வருவதாக ஜப்பான் அரசு கூறுகிறது.

இவர்கள் அனைவரும் அணுகுண்டின் தாக்கத்தைப் பெறும் போது குழந்தைகளாகவும் சிறார் சிறுமியராகவும் இருந்தவர்கள்.
இப்போது 86+ வயதை அடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஹிபகுஷாக்கள் இணைந்து நடத்தும் தன்னார்வ தொண்டு அமைப்பான
"நிஹன் ஹிடாங்யோ" (NIDAN HIDANKYO) என்பது
அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அமைப்பாகும்.

இவர்கள் 1956 முதல் தொடர்ந்து அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்புக்கு 2024 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமானதும் தகுதியானதுமாகும்.

இரண்டு முறை அணுகுண்டைத் தாங்கிய
சுட்டோமு அவர்களின் மனைவி மற்றும் மகன் இருவரும் புற்று நோய் வந்து இறந்தனர்.

சுட்டோமு அவர்களும்
வாழ்நாள் முழுவதும் வெள்ளை அணுக்கள் குறைபாடு, ஒரு பக்க காது கேளாமை, கண் புரை, தீக்காய வடுக்களுடன் வாழ்ந்து
தனது 93வது வயதில் 2010 ஆம் ஆண்டு இரைப்பைப் புற்று நோய் ஏற்பட்டு இறந்தார்.

அவரது தியாகம் போற்றப்படட்டும்.

ஹிபகுஷாக்கள் பற்றி அறிந்து கொள்ளும் அதே வேளையில்
நாம் போர் மற்றும் அணு ஆயுதங்களை எதிர்க்க வேண்டும்.

இனியும் உலகில் எங்கும் ஹிபகுஷாக்கள்
உருவாகாமல் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேண்டாம் இனியொரு ஹிபகுஷா

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

கடைக்கு போய் 'பெயர்சொல்லாதது' வாங்கிட்டுவா...~ அப்டினா வசம்பு தானம்மா.
05/07/2025

கடைக்கு போய் 'பெயர்சொல்லாதது' வாங்கிட்டுவா...
~ அப்டினா வசம்பு தானம்மா.

14/04/2025
07/03/2025

தற்போதைய மனநிலை. ரொம்ப பேசாத. முடிஞ்ச அளவு அமைதியாவே இரு. எவனுக்கும் எதையும் நிரூபிச்சு காட்டனும்னு எந்த கட்டாயமும் இல்ல. புடிச்சத மட்டுமே பண்ணு. மனசுக்கு அது புடிச்சா மட்டுமே பண்ணு. ரொம்ப நல்லவன். ரொம்ப திறமையானவன்னுலாம் யாருக்கும் காட்டிட்டு இருக்க வேண்டாம். அவங்களா வந்து நம்மட்ட கேக்குற வரை கண்ண மூடிட்டு உதவனும்னு எந்த ஒரு கட்டாயமும் இல்ல. நம்ம கையால உடையாத எதையும் நம்ம தான் போய் சரி பண்ணனும்னு அவசியமும் இல்ல. நம்ம மதிப்பையும் யாரும் அளவிட வேண்டாம், நம்ம தவறுகளையும் யாரும் திருத்த வேண்டாம். நம்ம உண்டு. நம்மலோட இந்த நாட்கள் உண்டு. நமக்குள்ள இருக்க இந்த நிசப்தம், நிம்மதி, நிறைவு உண்டு. இது போதும் இப்போதைக்கு…

படித்ததில் பிடித்தது ப்+ஆ+ம்பு = பா..ம்பு --------------------------- ஒருநாள் இரவில் இரண்டு குப்பிகளின் முடிவில் கைலாசம்...
14/01/2025

படித்ததில் பிடித்தது

ப்+ஆ+ம்பு = பா..ம்பு
---------------------------
ஒருநாள் இரவில் இரண்டு குப்பிகளின் முடிவில் கைலாசம் கண்கள் அடைக்க பாடத் துவங்கினார்.

“சத்ழ்வகுண்ண..போத..ழ்ன்‌ன்! சழ்வகுண்.. ண.. போழ்த.. ழ்ன்‌ன்! சரணமேது..”
“சத்ழ்வகுண்ண..போதழ்..ழ்ன்‌ன்! சர்ழ்வ.. குண்ணப்போழ்தழ்ன் சரணமேது..”

அப்போது வயலில் கூட்டமாக நின்றுகொண்டு வாத்துக்கறியின் எலும்புகளை ருசித்துக் கொண்டிருந்த எலிகளைப் பார்த்த பாம்பு ஒன்று பதுங்கிப்பதுங்கி வந்து கொண்டிருந்தது. கூட்டமாக இருந்த எலிகளைக் கண்டு அகமகிழ்ந்த பாம்பு நினைத்துக் கொண்டது.

‘என்னடே இது! என்னிக்குமில்லாம இன்னிக்கின்னு பாத்து பயலுவ கூட்டமா நிக்கானுவளே? தேடும்போது கிடைக்க மாட்டானுவோ! செவத்த பசிக்கின்னு சொல்லி எறும்பு புத்துல வாய வுட்டு கடிபட்டதுதான் மிச்சம்! பசி தீரலை! இன்னிக்கி ரெண்டு பயலையாவது தூக்கிரணும்!’ என்று பறந்து வந்து கொண்டிருந்த போது,

“சத்ழ்வகுண்ண..போத..ழ்ன்‌ன்! சழ்வகுண்..ண..போழ்த..ழ்ன்‌ன்! சரணமேது..”

என்ற குரலைக் கேட்ட பாம்பு திடுக்கிட்டு அண்ணார்ந்து பார்க்கவும், கிணற்று மேட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த கைலாசம் குப்பியைத் தட்டி பாம்பின் மீது விடவும், குப்பியில் இருந்து தெறித்த வெள்ளிநிறத் திரவம் வாயைப் பிளந்தவாறே நின்ற பாம்பின் தொண்டைக்குள் புகுந்து பாம்பின் தொண்டை எரிந்தது. பானம் பாம்பின் குடலுக்குள் சென்றதுதான் தாமதம். பாம்பானது பரவச நிலையை அடைந்தது.

‘என்ன தண்ணியப்பா இது? பயங்கரமா இருக்கே! வயல்ல பூச்சிக்கொல்லி மருந்தடிச்ச தண்ணிய குடிச்சிருக்கோம்! கொளத்துல மனுசங்குளிச்ச தண்ணிய குடிச்சிருக்கோம்! காட்டுக்குள்ள வரைக்கும் போய் அங்க ஓடுத நரி நக்குன தண்ணிய குடிச்சிருக்கோம்! அந்தத் தண்ணிலயெல்லாம் இல்லாத உஜாரு இந்தத் தண்ணில இருக்குன்னா இது லேசுப்பட்ட தண்ணி கிடயாது!’
என்று எண்ணிக்கொண்ட பாம்பு, இதுநாள் வரைக்கும் இந்த அற்புதத் திரவத்தை தமக்கு அறிமுகம் செய்யாத கடவுளைக் கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டத் துவங்கியது.

‘சர்வத்தையும் அறிந்த கடவுளுக்கு இந்த சர்ப்பத்தின் வசவுச் சொற்கள் கேட்காமல் இருக்குமா?’ சடாரென பாம்பின் முன்பாக தோன்றினார் கடவுள். எடுத்த எடுப்பிலேயே கடவுள் கேட்ட கேள்வி இதுதான்..

“அடப் பரதேசி பாம்பு நாய! நாம்பாட்டுக்கு ரெண்டு மனுச ஜென்மங்கள படச்சி ஒரு தோப்புக்குள்ளாற வுட்டுருந்தேன்.. நீ பாட்டுக்கு ஒரு எழவு ஆப்பிள் பழத்த குடுத்து ஏமாத்தி, அந்த ரெண்டு பேரையும் அம்மணங்குண்டியா ஓட வுட்டதுமில்லாம இப்போ என்னையவா கேள்வி கேக்க! ஒரே சவுட்டுதான்! செத்தொழிஞ்சிருவ செவமே!”

அதற்கு பாம்பு, “அவ்வள பெரீய தோட்டத்துல கெடந்த மரத்துல அந்த மரத்த மாத்தரம் யாந்த் தொடப்புடாதுன்னு சொன்னீரு?”

கடவுள் கடுப்பானார், “ஒஞ்சோலிய பாத்துட்டு போக வேண்டியதானே? தோட்டம் எனக்க தோட்டம்! அங்க ஒன்னய நடமாட வுட்டதே பெருசு! இதுல ஒனக்கு ரோசம் பொத்துக்கிட்டு வருகு! இல்லியாடே? சரி! என்னய எதுக்கு ஏசுன செவமே?”

“இந்தா குடிக்கானுவல்லா அதிசய தண்ணி! அத படச்சீரே! எங்கிட்ட யாஞ்சொல்லலை?””

“ஆமா! இவுரு பெரிய மயிறாண்டி! இவுருகிட்ட கேட்டுகிட்டுதான் நாங் கக்கூசுக்குப் போவணும்? அவனுவளுக்காவது காலும், கையும் இருக்கு! குடிச்சாலும் நடந்தோ, முட்டி போட்டோ போயிருவானுவ! செவமே நீ என்ன செய்வ? அந்தால ஊந்து ஊந்து செத்து கெடப்ப!”

பாம்பு தூக்கித்துப் போனது, கடவுள் அயர்ந்து போய்ச் சொன்னார்,

“நா எங்கடே அந்தத் தண்ணிய படச்சேன்? இந்த எழவுடுத்த மனுச நாய்கள் எல்லாஞ்சேந்து, சாராயம் வடிச்சி குடிச்சதுமில்லாம இந்த பாழாப்போன பாம்புக்கு வேற ஊத்திக் குடுத்து, செவம் நாலரை அடி நீட்டமிருக்குமா? இந்த குள்ள பாம்பெல்லாம் நம்மள மானங்கெட்ட கேள்வி கேட்டுட்டு திரியிது! இந்த மனுசப் பயக்கள வச்சிக்கிட்டு ஒரு மயித்தயும் புடுங்க முடியாது போலிருக்கே? தெரியாம படைச்சித் தொலைச்சிட்டம்டே ஒங்கள! ஊருக்கொரு கடவுளு! கடவுளுக்கொரு சாதி மயிரு! அதுல நீ ஒசத்தி! நா ஒசத்தி’ன்னு சண்ட மண்ணாங்கட்டி வேற! எவந் தின்னாலும் அடுத்த நாளு மஞ்ச நெறத்துலதாம்ல போயாவணும்! இதுல நாம் பெரீய மயிராண்டின்னு சொல்லிட்டு நடக்க வேண்டியது! எல்லாரும் ஒருநாளு மேல வருவீயள்ளா! அன்னிக்கி இருக்குல ஒங்களுக்கு குத்து! எவம் பெரியவம்னு நாங் காட்டுகேன்!”

என்று சொல்லிவிட்டு பாம்பை நோக்கி, “எலேய்! இனிமே என்னய என்னிக்காவது ஏசுனீன்னா மரியாத கெட்டுரும் ராஸ்கல்!” என்று பாம்புக்கு எச்சரிக்கை செய்துவிட்டு, தலையிலடித்துக் கொண்டே விடைகொடுத்தார் கடவுள்.

‘இந்த மனிதர்கள்தான் தனது படைப்பிலேயே சோரம் போன படைப்பு’ என்று கடவுள் பலமுறை உணர்ந்திருந்தாலும் அன்று நடந்த சம்பவமானது அவருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. பின்னே தன்னுடைய ஒரே எதிரியான சைத்தானின் வளர்ப்புப் பிராணியின் வாயிலிருந்து தகாத வார்த்தைகளைக் கேட்டது ஒரு சாமானியமான காரியமா? சோகத்தில் சோர்ந்துபோய் வரப்பு வழியாக நடந்து சென்றார் கடவுள்.

Six years of ''ஆதிக்குடிமக்களும், ஆல்கஹாலும்''

#எதிர்வெளியீடு

“எப்படியும்இருந்து கொண்டே இருகாட்சியில் இல்லையென்றால்காணாமல் தான் போவாய்காணாமல் போனதுக்காககவலைப்படுவார் யாருமில்லைஅவரவர்...
02/01/2025

“எப்படியும்

இருந்து கொண்டே இரு

காட்சியில் இல்லையென்றால்

காணாமல் தான் போவாய்

காணாமல் போனதுக்காக

கவலைப்படுவார் யாருமில்லை

அவரவர் பாத்திரத்துக்கு

அவரவரே பொறுப்பு

எவர் கையையும் எதிர்பாராது

எதுக்காகவும் அலட்டிக் கொள்ளாது,

ஏனென்ற விசாரம் விடுத்து

இருந்து கொண்டே இரு

இருக்கும்வரை இருந்து கொண்டே இரு

எப்படியும்.’’

– ‘விக்கிரமாதித்யன் கவிதைகள்’- புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்பு நூலில் இருந்து ஒரு கவிதை.

16/09/2024

நான் பலமுறை கேட்டு உணர்ந்த அனுபவ சொற்கள் :
தன் வினை தன்னைச்சுடும் –
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை

நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!

முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!

கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!

பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!

கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!

காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில்....

பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ

மட்டுமே இருந்தது !!

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!

அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!

நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!

‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!

‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .

மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....

தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!

இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!

இது தான் உலகநியதி !!

நாம் எதைத் தருகிறோமோ

அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....

நல்லதை தந்தால் நல்லது வரும்,...

தீமையை தந்தால் தீமை வரும் !!

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,

ஆனா....

நிச்சயம் வரும் !!

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்...

28/06/2024

♥️உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,

♥️பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

♥️படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..

♥️சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..

♥️ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

♥️மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..

♥️இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,

♥️தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

♥️அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..

♥️உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,

♥️ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு,
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

♥️இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்,

♥️ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,

♥️அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,

♥️அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

♥️ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

♥️மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

♥️நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

♥️கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது,
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,

♥️உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

♥️மறு பிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்..

♥️மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?.

♥️உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை. வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள் .

படித்ததில் பிடித்தது

Miss you m**s
28/04/2024

Miss you m**s

யாருடையது காவிரி நீர் ?.......பதிவைப் படித்தேன் சரி எனப்பட்டது பதிவிட்டேன்.பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை ப...
01/10/2023

யாருடையது காவிரி நீர் ?.......

பதிவைப் படித்தேன் சரி எனப்பட்டது பதிவிட்டேன்.

பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.

ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.

அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.

"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.

""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.

"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.

"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.
அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.

அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.

நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும் பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.

"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.

Cauvery River, Chola Kingdom, Kallanai, Karikaal Chola, Raja Raja Chola, Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam

மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள் சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.

"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.

நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில் யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.
-----
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.

குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.

ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.

அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.

ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.

அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.

அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.

அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.

கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.

நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.

கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.

ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.

இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
ஆம். கேள்வி சரிதான்.

கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.

உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!

முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

படித்ததில் பிடித்தது உண்மையை உணருவோம்.

Address

Ponnamaravathy

Alerts

Be the first to know and let us send you an email when உடையாம்பட்டிகாரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to உடையாம்பட்டிகாரன்:

Share