03/08/2025
நட்பின் நிறம்...நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல, அது நம் வாழ்க்கையின் ஆன்மா! நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் உங்கள் குணத்தைக் காட்டுகிறது, ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் உங்களையே வெளிப்படுத்துகிறார்கள். "உன்னை அறிய வேண்டுமா? உன் நண்பனைப் பார்" என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது!
மழைநீர் போல் தூய்மையான நட்பு, பெற்றோருக்கு அடுத்தபடியாக நம் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. வீடு, ஊர், நாடு எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு, ஆனால் உண்மையான நட்புக்கு எல்லையே கிடையாது! பள்ளி, அலுவலகம், பேருந்து, ரயில், டீக்கடை - எங்கு வேண்டுமானாலும் இந்த அற்புதமான பந்தம் பிறக்கலாம்.
கண்ணீரை துடைப்பது கைத்துணடு, ஆனால் இதயத்தின் வலியை ஆற்றுவது நட்பு மட்டுமே! துன்பம் வரும்போது முதலில் இறைவனை நினைக்கிறோம், அடுத்து நம் உள்ளத்தில் தோன்றுவது நல்ல நண்பர்களின் முகங்கள்தான். அன்பையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் இந்த அற்புத சக்தி நட்புக்கு மட்டுமே உரியது!
நல்ல நட்பு வளர்பிறை - நாளுக்கு நாள் வளரும்! தீய நட்பு தேய்பிறை - சிறிது சிறிதாக மறைந்துபோகும். எனவே நல்ல நட்பை நேசிப்போம்! வாசிப்போம்! சுவாசிப்போம்!
#நட்பு #தமிழ்