நம்ம புதூர்.

நம்ம புதூர். 📍 புதூர்.V முதல்நிலை பேரூராட்சி
📍 விளாத்திகுளம் வட்டம்
📍 தூத்துக்குடி மாவட்டம் - 628 905
புதூர் மற்றும் புதூர் சுற்றுவட்டார பகுதி தகவல்களுக்கு.....

புதூர்  நகரில் இயங்கிவரும் அரசு பொது நூலகத்தில் இணைய வசதிகளுடன் கூடிய கணிணி அறிமுகப்படுத்தப்பட்டு பலமாதங்கள் ஆகிவிட்டது....
15/12/2024

புதூர் நகரில் இயங்கிவரும் அரசு பொது நூலகத்தில் இணைய வசதிகளுடன் கூடிய கணிணி அறிமுகப்படுத்தப்பட்டு பலமாதங்கள் ஆகிவிட்டது.எனவே,மாணவர்கள், அரசு போட்டி தேர்வுக்கு பயில்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


|
|
| |

12/12/2024

அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை(Red Alert) விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக நாளையும் (13/12/2024) நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு

|
|
|
| |

கனமழை காரணமாக இன்று (12/12/2024) ஒரு நாள் மட்டும் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடும...
12/12/2024

கனமழை காரணமாக இன்று (12/12/2024) ஒரு நாள் மட்டும் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

|
|
|
| |

11/12/2024

2023-2024 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நமது புதூர் பேருந்து நிலையம் முன்பு புதூர் வட்டார விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

|
|
| |

என்று தணியும் இந்த கோரிக்கை ஏக்கம்....😴பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை...    |    |    |   |
10/12/2024

என்று தணியும் இந்த கோரிக்கை ஏக்கம்....😴

பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை...



|
|
| |

ஆமா நம்ம புதூர் தான்...😏😏பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை...     |    |    |   |
08/12/2024

ஆமா நம்ம புதூர் தான்...😏😏
பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை...



|
|
| |

தாண்டவமாடும் பன்றிகள் இரையாகும்விவசாயிகள், கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் :தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் அயன்...
22/11/2024

தாண்டவமாடும் பன்றிகள் இரையாகும்விவசாயிகள், கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் :
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் அயன்கரிசல் குளம் கிராமத்தை சேர்ந்தவர் போகன் ராஜ் த/பெ ஆண்டிக் கோனார் (62) இன்று காலை ஊருக்கு வடபுறம் உள்ள தனது மக்காச் சோளம் பயிரிட்ட நிலத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு நிலத்தில் ஈரப்பதம் எப்படி உள்ளது என்பதை சுற்றிப்பார்த்து உள்ளார். திடீரென அங்கு மக்காச் சோளம் பயிருக்குள் மறைந்திருந்துசேதப்படுத்தி கொண்டிருந்த பன்றியை சத்தம் போட்டு விரட்டி உள்ளார். அதை கண்டவுடன் கோபத்துடன் சீறி வந்து மோகன்ராஜை தாக்கியுள்ளது. கையில் காயமடைந்தவர் அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு போன் செய்துள்ளர். சண்முகராஜ் (54) த/பெ சுப்பா ரெட்டியார், ராமசாமி (62) த/பெ சின்னு கோனார் ஆகியோர் அங்கு விரைந்து வந்துள்ளனர். மூவரும் சேர்ந்து பன்றியை விரட்டியுள்ளனர். மீண்டும் கோபத்துடன் திருப்பி தாக்கியுள்ளது. இதனால் ராமசாமி மற்றும் சண்முகராஜை கை, கால், உடல் முழுவதும் பன்றி கடித்து குதறியது. தகவல் தெரிந்த அயன் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மேற்கண்ட மூவரையும்அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதூர் அருகே கம்பத்துபட்டி கிராமத்தை சேர்ந்த அய்யரப்பன் என்ற விவசாயி ஆடு மேய்த்து கொண்டிருந்த நிலத்தில் பன்றி கடித்ததில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை செய்யப்பட்டார். பயிரிட்ட நிலங்களில் களை பறிக்கவோ, உரமிடவோ, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவோ காட்டுப் பன்றிகளின் அட்டூழியத்தால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை பெரும் சேதப்படுத்தி வருகிறது. முற்றிலும் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. பன்றிகளின் அட்டூழியத்தால் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும், சாகுபடி செய்வதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பன்றிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பன்றிகளால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதத்திற்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

20/11/2024

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு.இளம் பகவத் அறிவிப்பு.

|
| |
| |

நாகலாபுரம் மற்றும் கோடங்கிபட்டி துணை மின் நிலையங்கள் முலம் மின்சாரம் வரும் பகுதிகளான புதூர் நகர் மற்றும் குளகாட்டன்குறிச...
19/11/2024

நாகலாபுரம் மற்றும் கோடங்கிபட்டி துணை மின் நிலையங்கள் முலம் மின்சாரம் வரும் பகுதிகளான புதூர் நகர் மற்றும் குளகாட்டன்குறிச்சி,குமாரசித்தன்பட்டி,வெம்பூர்,நாகலாபுரம், பூதலபுரம், கே .துரைச்சாமிபுரம்

ஆகிய பகுதிகளில் நாளை 16-11-2024 மின்தடை.
#புதூர்_வி_பேரூராட்சி #புதூர்மக்கள் #மின்தடை

நமது புதூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரகாளியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா ...
15/10/2024

நமது புதூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரகாளியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா இன்று (15-10-2024) முதல் வரும் ஞாயிறு (20-10-2024) வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி..♥️

பறக்கும் கேமரா காட்சி உதவி : Vyshnav Studios

#நம்ம_புதூர் #புதூர்_பேரூராட்சி

புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமையை முன்னிட்டு புதூர் நகரின் முக்கிய வீதிகளில் அருள்மிகு வரதராஜபெருமாள் கருட வாகனத்தில்  வீ...
05/10/2024

புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமையை முன்னிட்டு புதூர் நகரின் முக்கிய வீதிகளில் அருள்மிகு வரதராஜபெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா...

#நம்ம_புதூர் #புதூர்_பேரூராட்சி

நமது புதூர் பேரூராட்சி 11வது வார்டு பாரதியார் தெருவில் சிதிலமடைந்த பழைய சாலைகளை பெயர்த்து எடுக்கும் பணி நடைபெற்றது. விரை...
05/10/2024

நமது புதூர் பேரூராட்சி 11வது வார்டு பாரதியார் தெருவில் சிதிலமடைந்த பழைய சாலைகளை பெயர்த்து எடுக்கும் பணி நடைபெற்றது. விரைவில் புதிய சாலை(பேவர் பிளாக் ஆக கூட இருக்கலாம்) போடும் பணி தொடக்கம்.
இது மழைக்காலம் என்பதால் பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள்...

#நம்ம_புதூர் #புதூர்_முதல்நிலை_பேரூராட்சி

Address

Pudur

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம புதூர். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share