13/04/2025
#பாரதியஜனதாகட்சி தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு செய்த நன்மைகள்.!
கவுண்டர், பிள்ளைமார், செட்டியார், முதலியார் போன்ற பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.!
தமிழக முதல்வராக இருந்த #எடப்பாடிபழனிச்சாமி அரசாணையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார்.!
2021 சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்காக சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கி இருந்த மத்திய உள்துறை அமைச்சர் #அமித்ஷா முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை எச்சரித்த காரணத்தினால் தேவேந்திர குல வேளாளர் அரசாணை கோப்புகளை உடனடியாக மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தார்.!
அரசாணை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது, தமிழகத்தை சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.!
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த தி.மு.க தென்காசி எம்பி தனுஷ்குமார் அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் அவர்களும் கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் வெளிநடப்பு செய்தனர்.!
தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளிமாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக நிறைவேறியது.!
400-க்கும் மேற்பட்ட கோயில்களில் வழிபாட்டு உரிமைமுறைகள் பெறுகின்ற சமூகம்.!
சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வழியில் வந்த சமூகம்.!
1936-க்கு முன்பு வரை எஸ்சி பட்டியலில் இல்லாத சமூகம்.!
தமிழ்நாட்டின் மூத்த வேளாண்குடி சமூகம் என்பது போன்ற பல்வேறு வரலாற்று பெருமிதங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் குறிப்பேடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.!
தேசிய தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைவராக கூரியூர் சுப.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராகவும், ரயில்வே வாரிய உறுப்பினராகவும் பரமக்குடி பொன்பாலகணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.!
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.!
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.!
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஆறு வழக்கறிஞர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.!
ஒரே நேரத்தில் நம் சமூகத்தை சேர்ந்த ஆறு நபர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டது இது தான் முதல்முறை.!
மத்திய அரசின் தேசிய ஏற்றுமதி வளர்ச்சி வாரியத்தின் இயக்குனராக புரட்சிக்கவிதாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.!
மத்திய அரசின் தேசிய சேமிப்பு கிடங்குகள் நிறுவனத்தின் இயக்குனராக திருநெல்வேலி மகாராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.!
பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட தலைவராக ஆனந்தன் அய்யாசாமி, அவர்களும், திருநெல்வேலி மாவட்ட தலைவராக முத்துப்பலவேசம் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்புகளிலும், மாவட்ட பொறுப்புகளிலும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த எண்ணற்ற நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் அதிகளவில் கட்சிப்பதவிகளை கைப்பற்றி, ஆளுமைகளை உருவாக்கி தமிழக அரசியலில் ஆளுமைமிக்க சமூகமாக தேவேந்திர குல வேளாளர் சமூகம் திகழ வேண்டும் என்பது மட்டுமே சமூகப் பற்றாளர்களின் உணர்வாக இருந்து வருகிறது.!
தேவேந்திர குல வேளாளர் அரசாணை மூலமாக நம் சமூகம் அரசியல் வளர்ச்சி பெற்றுள்ளது.!
பட்டியல் வெளியேற்றம் மூலமாக அரசியல் வளர்ச்சி பெற வேண்டும்.!
வருங்கால தலைமுறை தலைநிமிர்வு பெற வேண்டும் என நினைக்கிறோம்.!
தலித்தியவாதிகள் சமூகத்தின் அரசியல் வளர்ச்சியை பார்ப்பது இல்லை. அரசாணை மூலமாக பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. பட்டியல் வெளியேற்றம் மூலமாக வளர்ச்சி பெற்று விடக்கூடாது என்று #தலித்தியவாதிகள் சதித்திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.!
பட்டியல் வெளியேற்றம் எந்த அரசு செய்து தருகின்றதோ ..... அவர்களுக்கே 2026 சட்டமன்றம் தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் வாக்குகள் இல்லை எந்த அரசாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும் ....!??