
13/12/2024
ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் நம் நாட்டிற்கு வருது.. இரண்டரை மில்லியன் டாலர் பரிசுத்தொகையோடு.. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் இருபது கோடி ரூபாய் இருக்கலாம்.. பணம் இரண்டாம்பட்சம்.. ஒரு இந்தியராக மொத்த நாடும் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்...
அறிவு மற்றும் கணித்தலின் பெரும் அளவுகோலாக கருதப்படும் சதுரங்க விளையாட்டில் வெற்றிகளை குவிப்பதின் மூலம் ஆனந்த் மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்..
இச்சாதனையை பெற்ற உலகின் 18 வயதே நிரம்பிய இளம் வீரர் என்கிற சாதனையையும் நிகழ்த்திய தம்பிக்கு இதயம் கனிந்த பாராட்டு.
நல்லவை பகிற்வோம் நால்வருக்கு..