26/01/2025
#தனிமை👍🏼🤝🏼😵💫
மூழ்கிறேன் தனிமையில்
மூச்சிவிடவும் முடியவில்லை
காரணம் தேடுகின்றேன் சிரிக்க
யாரிடமும் பேசாமல் இருந்து
என் குரலும் மறந்தது
தேவையில்லாததையும் நினைக்கிறேன்
நினைப்பதற்கு ஒன்றுமில்லாததால்
மீண்டும் மீண்டும் காரணமில்லாமல்
அனைத்து செயலிகளை தொடுதிரையில்
தொடரந்து தொடர்ந்து மூடுகின்றேன்
கத்தவும் மனமில்லை
அடுத்து எதை நினைத்து புலம்புவது என்று புலம்புகிறேன்
தனிமை மிக கொடுமை....
பிடித்த பாடலை படங்களை நான் கேட்டு
அடையும் மகிழ்ச்சியைவிட பிறருக்கு
பகிரந்து அவருடைய விருப்பத்தையே
நான் கேட்க விரும்புகிறேன்...
ஆனால் சொல்ல யாரும் இல்லை என்றால்
இளையராஜாவும் தோற்றுப்போகிறார்
என் தனிமையில்
சுவாரசியமாக பேச வாழ்க்கையில்
எதையாவது செய்யவேண்டும்
நினைத்து ஆனந்தமடைய...
இல்லையெனில் இருந்தும்
இறந்ததைப் போல்
இந்த தனிமை கொன்றுவிடும்...
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
தனிமைக்கு பதில் பல வழிகள் உள்ளது.
இதில் அறிவுரை கூறி பயனில்லை.
அவர்களது அனுபவத்தைப் பொறுத்தே.
கண்டுபிடிப்போம் நம்பிக்கையுடன்...
நதி எதைத்தேடி போகிறது அதை போல தான் வாழ்க்கையும்.
நதி, வழியில் பல உயிர்களுக்கு நன்மைகளை