
21/08/2025
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை தமிழகத்தின் பெரிய மற்றும் முக்கியமான அணையாக விளங்குகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைக் கடக்கும் போதும், அணை முழுக் கொள்ளளவை அடையும் போதும், அதில் நீர் திறக்கப்படும் போதும் மேட்டூர் அணை முக்கியச் செய்தியாக மாறும்.
அந்தளவிற்கு இந்த அணை முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம் இது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பெரிய அணைகளில் ஒன்றாகவும், இதன் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பயனடைவதாலும் மேட்டூர் அணை இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது.
முக்கிய நீராதாரமாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் திகழும் மேட்டூர் அணை கட்டப்பட்டும் 90 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று அதன் 92ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1924ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமான பணிகள் 1934ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இந்த ஆண்டின் ஆகஸ்ட் 21ஆம் நாள் அணை நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.