Salem Reports

Salem Reports � Salem District News & Updates
� Breaking | Reels | Public Issues
� Ground-level reporting

13/09/2026

"தாய்மாமன் தங்க மோதிரம்...

சேலத்தில் 2,300 குழந்தைகள் தேர்வு!" அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில், சேலம் மாவட்டத்தில் ஜூன் 22 முதல் பிறந்த 2,300 குழந்தைகள் பயன்பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக சேலம், மேட்டூர், ஓமலூர், ஆத்தூர் அரசு மருத்துவமனைகளில் தங்க மோதிரங்களை பாதுகாக்க தனி பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

31/08/2026

சேலத்தில் பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொ*லை!

சேலம் அரிசிப்பாளையத்தில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொ*லை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தண்ணீர் தொட்டியில் கிடந்த 2 மூட்டைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை மீட்ட போலீசார், கொ*லை செய்யப்பட்ட பெண் யார், எதற்காக இந்த கொ*லை நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

22/08/2026

சேலம்: இளைஞர் மீது குண்டாஸ்!

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த காதர் ஷெரீப்பின் மகன் சலீம் (30), அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமாரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சலீமை கைது செய்தனர். ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருப்பதால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சலீம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

22/08/2026

சேலம்: நண்பரிடம் ரூ.25 லட்சம் மோசடி!

சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் உதயசூரியன் (37), புதிதாக பேக்கரி தொடங்கி நண்பர் யுவராஜை பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி, பல தவணைகளில் ரூ.25 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பேக்கரி தொடங்காததுடன், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர்.

22/08/2026

சேலம்: சிறை அலுவலர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்!

சேலம் சிறை அலுவலருக்கும், 28 வயது பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு சிறை அலுவலரே காரணம் என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேநேரத்தில், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாகவும், அதை சிறை அலுவலரிடம் மறைத்து மிரட்டியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

19/08/2026

விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த சங்கர் (46), லண்டனில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். இந்நிலையில், இரவு தூங்கச் சென்ற சங்கர், காலையில் எழுந்திருக்கவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில், சங்கரின் மர்மமான உயிரிழப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

19/08/2026

ஓமலூர் அருகே பயங்கர விபத்து: வாலிபர் ப*லி

சேலம் தாராபுரம் காலனியைச் சேர்ந்த நவீன்குமார் (28), ஓமலூர் அருகே தனியார் கல்லூரி முன்பு பைக்கில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ப*லியானார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை ஓமலூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

18/08/2026

கோவிலில் தாலி திருட்டு: போலீசார் விசாரணை!

சேலம் தாதம்பட்டி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில், அம்மன் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கத் தாலி திருட்டு போயுள்ளது. நேற்று காலை கோவிலைத் திறந்தபோதுதான் திருட்டு நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் தலைவர் இராசரத்தினம் அளித்த புகாரின் பேரில், வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

18/08/2026

சேலம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனைகளில் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் லலித் ஆதித்யா நீலம் உத்தரவிட்டுள்ளார். மேலும், காலி மனைகளில் குப்பைகள் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், இதை மீறும் மனை உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Reports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share