S.Govindaraj Sulur

S.Govindaraj Sulur கோவிந்தராஜ் சென்னியப்பன்

இளைஞரணி துணை அமைப்பாளர்
சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம்
கோவை தெற்கு மாவட்டம்

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வாருங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01/09/2025

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வாருங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

👌👌👌👌 முதலமைச்சராவதற்கு தகுதி இல்லாத ஒருவர் என்று சொல்லாமல் சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ...
31/08/2025

👌👌👌👌 முதலமைச்சராவதற்கு தகுதி இல்லாத ஒருவர் என்று சொல்லாமல் சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ...

💐💐💐
30/08/2025

💐💐💐

முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மாண்பு முதலமைச்சர் M. K. Stalin பயணம்!🖤❤️
30/08/2025

முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மாண்பு முதலமைச்சர் M. K. Stalin பயணம்!🖤❤️

29/08/2025
29/08/2025
பீகாரில் பீறிடும் மக்கள் சக்தி!பீகார் மாநி­லத்­தில் மாபெ­ரும் மக்­கள் பிர­ள­யத்­தையே உரு­வாக்கி வரு­கிறார்­கள் ராகுல் கா...
29/08/2025

பீகாரில் பீறிடும் மக்கள் சக்தி!

பீகார் மாநி­லத்­தில் மாபெ­ரும் மக்­கள் பிர­ள­யத்­தையே உரு­வாக்கி வரு­கிறார்­கள் ராகுல் காந்­தி­யும், தேஜஸ்­வீ­யும். மக்­கள் சக்­தி­யின் மகத்­தான எழுச்­சியை நேரில் சென்றுபார்த்து வாழ்த்­தி­விட்டு வந்­தி­ருக்­கி­றார் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.

“உங்­களை எல்­லாம் பார்ப்­ப­தற்­கா­கத்­தான் இரண்­டா­யி­ரம் கிலோ மீட்­டர் கடந்து நான் இங்கே வந்­தி­ருக்­கி­றேன். கடந்த ஒரு மாத கால­மாக, இந்­தி­யாவே பீகா­ரைத்­தான் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது. இது­தான் பீகார் மக்­களின் பலம்! ராகுல் காந்­தி­யின் பலம்! தேஜஸ்­வீ­யின் பலம்” என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் சொன்ன போது கூட்­டத்­தில் இருந்து கைதட்­டல் எழுந்­தது.

“பா.ஜ.க.வின் துரோக அர­சி­யல் தோற்­கப் போகி­றது. தேர்­த­லுக்கு முன்பே உங்­க­ளின் வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது! நீங்­கள் இரண்டு பேரும் பீகா­ரில் பெறப்­போ­கும் வெற்­றி­தான், இந்­தியா கூட்­ட­ணி­யின் அடுத்­த­டுத்த வெற்­றி­களுக்கு அடித்­த­ள­மாக அமைய இருக்­கி­றது. பீகார் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நீங்­கள் வெற்றி பெற்ற பிறகு நடை­பெ­றும் வெற்­றி­வி­ழாக் கூட்­டத்­தி­லும் நிச்­ச­ய­மாக – உறு­தி­யாக நானும் பங்­கேற்­பேன்”என்று சொல்லி விட்டு வந்­தி­ருக்­கி­றார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்.

சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­குத் தயா­ராகி வரு­கி­றது பீகார் மாநி­லம். அந்த மாநில முத­ல­மைச்­சர் நிதிஷ்­கு­மா­ருக்கு பல்­வேறு போக்­குக் காட்டி அடக்கி வைத்­தி­ருக்­கி­றது பா.ஜ.க. நடை­பெற்று முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பெரும்­பான்­மையை எட்ட முடி­யாத பா.ஜ.க., நிதிஷ்­கு­மா­ரின் ஆத­ரவை வைத்து இப்­போது ஆட்­சி­யில் இருக்­கி­றது. நிதிஷ்­கு­மா­ரும் – பா.ஜ.க.வும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் கையை விட்­டால் கீழே விழுந்­து­வி­டு­வார்­கள் என்ற நிலை­மை­யில்­தான் இருக்­கி­றார்­கள்.

அதே­நே­ரத்­தில் பீகா­ரில் ராஷ்­டீ­ரிய ஜனதா தளம் கட்­சி­யைச் சேர்ந்த தேஜஸ்­வீக்­கான ஆத­ரவு அதி­க­மாகி வரு­கி­றது. அவ­ரோடு காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்­தி­யும் இணைந்து செல்­வ­தால் காங்­கி­ரஸ் – ஆர்.ஜே.டி. கூட்­ட­ணி­தான் ஆட்­சி­யைப் பிடிக்­கும் என்ற கருத்­துக்­க­ணிப்­பு­கள் வெளி­யாகி வரு­கின்­றன. நேர­டி­யாக மக்­கள் செல்­வாக்­கைப் பெற்று மீண்­டும் ஆட்­சி­யைப் பிடிக்க முடி­யாது என்று நினைக்­கும் பா.ஜ.க., குறுக்கு வழி­யைப் பின்­பற்றி வரு­கி­றது. இதற்கு தேர்­தல் ஆணை­யத்தை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

‘வாக்­கா­ளர் அட்டை சீர­மைப்பு’ என்ற பெய­ரால் 65 லட்­சம் வாக்­கா­ளர்­களின் வாக்­க­ளிக்­கும் உரி­மை­யைப் பறிக்­கப் பார்க்­கி­றார்­கள். இதற்கு எதி­ராக ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள் கடு­மை­யா­கப் போராடி வரு­கி­றார்­கள். லாலு­பி­ர­சாத், ராகுல்­காந்தி, தேஜஸ்வீ, பிரி­யங்கா ஆகி­யோர் பீகா­ரில் மக்­கள் திரளை திரட்டி வரு­கி­றார்­கள்.

தேர்­தல் ஆணை­யத்தை வைத்­துக் கொண்டு பா.ஜ.க. எத்­த­கைய வாக்­குத் திருட்டை நடத்­து­கி­றது என்­பதை அம்­ப­லப்படுத்­தி­னார் ராகுல் காந்தி. ஒரே ஒரு தொகு­தி­யில் போலி வாக்­கா­ளர்­கள், இல்­லாத முக­வ­ரி­கள், ஒரே முக­வ­ரி­யில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள அதிக எண்­ணிக்­கை­யி­லான வாக்­கா­ளர்­கள், செல்­லாத புகைப்­ப­டங்­கள், படி­வம் 6–இன் தவ­றான பயன்­பாடு ஆகி­ய­வற்­றால் நடந்­துள்ள மோச­டி­களை ராகுல் காந்தி அம்­ப­லப்­ப­டுத்­தி­னார். இதற்கு முறை­யான ஒரு பதி­லைக் கூட தேர்­தல் ஆணை­யத்­தால் சொல்ல முடி­ய­வில்லை. பதி­ல­ளிக்­கத் தயா­ராக இல்­லாத தேர்­தல் ஆணை­யம், ராகுல் காந்­தியை மிரட்­டிக் கொண்டு இருக்­கி­றது. 30 நாள் சிறை­யில் இருந்­தால் பதவி போய்­வி­டும் என்று சட்­டம் போட்டு மிரட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா.

இவை அனைத்­துக்­கும் எதி­ராக மாபெ­ரும் மக்­கள் சக்­தி­யைத் திரட்டி வரு­கி­றார் ராகுல் காந்தி. ‘வாக்­கா­ளர் அதி­கா­ரப் பய­ணம்’ என்ற பய­ணத்தை பீகா­ரில் தொடங்கி உள்­ளார்­கள் ராகுல் காந்­தி­யும், தேஜஸ்­வீ­யும். இவர்­கள் இரு­வ­ரும் செல்­லும் இட­மெல்­லாம் மக்­கள் அலை அலை­யாக வந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

‘நின்­றால் மாநாடு, நடந்­தால் ஊர்­வ­லம்’ என்று சொல்­லத்­தக்க வகை­யில் தினந்­தோ­றும் காட்­சி­கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. தேஜஸ்வீ ஜீப் ஓட்ட அதில் ஏறி வலம் வந்­தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி – தேஜஸ்வீ பைக் பய­ணம் போனார்­கள். ராகுல் பின்­னால் பைக்­கில் பிரி­யங்­கா­வும் அமர்ந்து சென்­றார். இவர்­க­ளுக்­குப் பின்­னால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் பைக்­கில் சென்­றார்­கள். புர்­னியா நக­ரில் வலம் வந்த போது தான் பய­ணித்த திறந்த வேனில் இருந்து இறங்­கிய ராகுல் காந்தி, திடீ­ரென ஹெல்­மெட் அணிந்­து­கொண்டு, பைக்­கில் ஏறி­னார். அவ­ருக்­குப் பின்­னால் பீகார் காங்­கி­ரஸ் கமிட்­டித் தலை­வர் ராஜேஷ் குமார் ஏறிக்­கொள்ள, தேஜஸ்வீ யாதவ் தனது பாது­காப்­பா­ள­ரு­டன் மற்­றொரு பைக்கை ஓட்­டி­னார். இவை இரண்டு கட்­சித் தொண்­டர்­க­ளை­யும் உற்­சா­கம் அடைய வைத்­துள்­ளது. இரண்டு மாபெ­ரும் கட்­சி­க­ளின் கூட்டு, மக்­க­ளுக்­கான பெரிய ஈர்ப்­பாக அமைந்­துள்­ளது.

“தேர்­தல் ஆணை­யத்­தின் உத­வி­யு­டன் வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர திருத்­தம் என்ற பெய­ரில் ஏழை­க­ளின் வாக்­கு­க­ளைத் திருட பா.ஜ.க. விரும்­பு­கி­றது. பீகா­ரில் இது நடக்க, ‘இந்­தியா’ கூட்­டணி அனு­ம­திக்­காது. அர­சி­ய­ல­மைப்பு நாட்­டின் ஒவ்­வொரு குடி­ம­க­னுக்­கும் சம உரி­மை­களை உறுதி செய்­கி­றது. ஆனா­லும் சிறப்பு தீவிர திருத்­தம் அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­னது. சட்­ட­சபைத் தேர்­த­லில் பா.ஜ.க. மற்­றும் அதன் கூட்­டா­ளி­க­ளுக்கு பீகார் மக்கள் தகுந்த பதி­லடி கொடுப்­பார்­கள்”என்று பேசி வரு­கி­றார் ராகுல்.

“உங்­கள் வாக்­கு­களை மட்­டும் பறிக்க நினைப்­ப­தா­கக் கரு­தா­தீர்­கள். உங்­கள் இருப்­பையே பறிக்க நினைக்­கி­றார்­கள்” என்று தேஜஸ்வீ சொல்லி வரு­கி­றார். ஜன­நா­ய­க­மும், தேர்­தல் முறை­யும் பா.ஜ.க.வால் சீர­ழிக்­கப்­பட்டு வரு­வதை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கி­றது இவர்­கள் இரு­வ­ரது உரை­யும்.

“ராகு­லின் பய­ணம் இத்­தனை ஈர்ப்­புக்­கு­ரி­ய­தாக இருக்­கும் என்று நாங்­கள் நினைக்­க­வில்லை. இது பா.ஜ.க.வின் பல­வீ­னத்­தையே காட்­டு­கிறது” என்று பா.ஜ.க.வினர் சிலர் இந்தி ஊட­கங்­க­ளில் பேட்டி அளித்­த­தா­கச் செய்தி வெளி­யாகி உள்­ளது.

16 நாட்­கள் நடை­பெ­றும் இந்­தப் பய­ணம், 20 மாவட்­டங்­க­ளில் 1,300 கிலோ­மீட்­ட­ருக்­கும் மேல் பய­ணம் செய்து பாட்­னா­வில் நிறை­வ­டைய உள்­ளது. இந்­தி­யா­வின் மிக முக்­கிய அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள், மாநில முத­ல­மைச்­சர்­கள் பங்­கேற்­கி­றார்­கள். பீகா­ருக்­கான எழுச்­சி­யாக மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வுக்­கான எழுச்­சி­யா­க­வும் மாறிக் கொண்­டி­ருக்­கி­றது.

- முரசொலி தலையங்கம்🖤❤️

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🖤❤️
28/08/2025

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🖤❤️

Address

Sulur

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.Govindaraj Sulur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share