10/08/2025
சிங்கம் எவ்வளவு காலம் உயிர் வாழ்ந்தாலும், ஒரு நாள் அது இறந்து போகும். அதுவும் அதனது இறப்பு பரிதாபகரமான முறையிலேயே இருக்கும்.
செழிப்பான இளவயதில் சிங்கத்தின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும். விலங்குகளை துரத்தும். நசுக்கி வேட்டையாடும். முடிந்தவரை சாப்பிடும். எஞ்சியதை கழுதைப் புலிகளுக்கு விட்டுச் செல்லும்.
ஆனால் காலம் கடந்து சிங்கத்தின் வயதும் முதிர்ந்து போகும். வயதான காலத்தில் சிங்கத்தினால் வேட்டையாட முடியாது. பிற விலங்குகளை விரட்டிப் பிடிக்கவும் முடியாது. தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளக்கூட முடியாது. அங்குமிங்கும் கத்தித் திரியும், கர்ஜிக்கும்.
அப்போது கழுதைப்புலிகள் சிங்கத்தினைச் சூழ்ந்து, நகங்களால் இழுத்து, தமது கோரைப் பற்களால் கடித்து, கொஞ்சம் கொஞ்சமாக சிங்கத்தை உயிருடனேயே தின்ன ஆரம்பிக்கும். இறுதியில் சிங்கம் பரிதாபமாக இறந்து போகும்.
இதுதான் வாழ்க்கை! வாழ்க்கை குறுகியது, வலிமை நிலையற்றது. உடல் அழகும் பட்டம், பதவி, சொத்து செல்வங்களும் சொற்ப காலத்துக்கே.
வாழ்க்கையில் நிரந்தரம் என்று எதுவுமில்லை என்பதை சிங்கத்தின் வாழ்வில் காண முடியும். இதனை முதியவர்களின் வாழ்க்கையிலும் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் இறுதிக் காலத்திலும் நம்மால் காண முடியும்.
எனவே உங்களிடம் இருப்பதைக் கொண்டு பெருமை காட்டாதீர்கள். பட்டம் பதவிகள் மூலம் பிறருக்கு அநியாயம் செய்யாதீர்கள். என்றோ ஒருநாள் உங்கள் பதவிகளை விட்டுச் செல்வீர்கள்.
அதனால் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.
படைப்பினங்களுக்கு இரக்கம் காட்டுங்கள். படைத்தவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்..!
Gujarat has recorded a remarkable 32% increase in its Asiatic Lion population over five years, with numbers climbing to 891 in 2025.
Happy