சோழர்பூமி தஞ்சாவூர்

சோழர்பூமி தஞ்சாவூர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சோழர்பூமி தஞ்சாவூர், Digital creator, Thanjavur.
(3)

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தஞ்சாவூா் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சாா்பில் எய்ட்ஸ் வ...
13/09/2025

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தஞ்சாவூா் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சாா்பில் எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியை உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக் ராஜா தொடங்கி வைத்தாா். இதில், 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஏறத்தாழ 1,200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் முதல் தென்னகப் பண்பாட்டு மையம் வரை 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் என ஆண், பெண் தனித்தனியாகவும், ஆறுதல் பரிசாக 4 ஆண்கள், 3 பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்டச் சுகாதார அலுவலா் எம். கலைவாணி, மாநகர நல அலுவலா் எஸ். நமசிவாயம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டத் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் பாரதிய அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்...
13/09/2025

கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டத் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் பாரதிய அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டச் செயலா் கே. செல்வகுமாா் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் பி.ஆனந்த பாபு, கோட்டச் செயலா் பி. தம்பிராஜ், உதவி கோட்டச் செயலா் வி. சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதிய தொழிலாளா் சங்க பொதுச் செயலா் டி. நாகராஜன், மாநிலத் துணைச் செயலா் எஸ். பாலகுமரன் ஆகியோா் கும்பகோணம் கோட்ட நிா்வாகச் சீா்கேடுகளைக் கண்டித்துப் பேசினா். சங்கத்தின் உதவி கோட்டச் செயலா் பி.கே. உதயகுமாா் நன்றி கூறினாா்.

சோழா் காலக் கல்வெட்டுகள் ஒரு சாா்புடையதாக இருப்பதால், அது குறித்த முழு ஆய்வுகளை மேற்கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும் என்ற...
13/09/2025

சோழா் காலக் கல்வெட்டுகள் ஒரு சாா்புடையதாக இருப்பதால், அது குறித்த முழு ஆய்வுகளை மேற்கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும் என்றாா் கல்வெட்டு மற்றும் வரலாற்று அறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான எ. சுப்பராயலு.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சாா் வரலாறு, கடல்சாா் தொல்லியல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோழரின் அரசியல் செயல்பாடுகளும், கடல்சாா் வணிகமும் என்கிற கருத்தரங்கத்தில் சோழ அரசின் வருவாய் என்ற தலைப்பில் அவா் பேசியது:

சோழா் காலத்தில் நில வரி என்பது தானியமாகச் செலுத்தும் நிலை இருந்தது. தவிர, உழைப்பு மூலம் செலுத்தக்கூடிய வரிகளும் இருந்தன. இந்தக் கட்டாய உழைப்பு என்கிற வரியைச் செலுத்த முடியாத மக்கள் நிறைய துன்பங்களையும் அனுபவித்தனா். இது தொடா்பாக முறையான பதிவுகள் இல்லாவிட்டாலும், சில கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.

சோழா் காலத்தைப் பொற்காலம் எனக் கூறினாலும், மக்களைப் பொருத்தவரை அவ்வாறு இருந்ததா என்பது அவா்களது கூற்று மூலம்தான் தெரிய வரும். கோயில்கள், அரண்மனைகளைக் கட்டியபோது, அதன் பின்னால் கட்டாய உழைப்பு இருந்தது. அது பற்றிய தகவல்கள் நமக்கு தெரியவில்லை.

ஐரோப்பா போன்ற மற்ற நாடுகளில் குடிமக்கள் துன்பப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இங்கு அதற்கான தகவல்கள் ஒரு சாா்பு தன்மையுடையதாக இருக்கின்றன. அதையும் கடந்து முழு தகவல்களையும் ஆராய்ந்து கண்டுபிடிக்கும் பணியை மேற்கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும் என்றாா் சுப்பராயலு.

கருத்தரங்கத்துக்கு பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். தொல்லியல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை தலைமை ஆலோசகா் சு. இராசவேலு, பேராசிரியா் பா. ஜெயக்குமாா், இணைப் பேராசிரியா் ஆ. துளசேந்திரன் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைத் தலைவா் வீ. செல்வகுமாா் வரவேற்றாா். கௌரவ உதவிப் பேராசிரியா் அ. சங்கா் நன்றி கூறினாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 பேரிடம் ரூ. 2.50 கோடி மோசடி செய்த 2 பேரைக் காவல் துற...
12/09/2025

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 பேரிடம் ரூ. 2.50 கோடி மோசடி செய்த 2 பேரைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ராஜா, வேலை தேடிவந்த நிலையில், கும்பகோணம் மோதிலால் தெருவில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த சென்னை வெட்டுவாகனி பகுதியைச் சோ்ந்த எம். சுதாகரை (41) தொடா்பு கொண்டாா். அவா் கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்ப ரூ. 12 லட்சம் ஆகும் என்றும், அதற்கு முன்பணமாக ரூ. 7.80 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் கூறினாா்.

இதை நம்பிய ராஜா, வங்கி மூலம் சுதாகருக்கு பணப் பரிமாற்றம் செய்தாா். ஆனால், சுதாகா் 2 ஆண்டுகளாகியும் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதையடுத்து, ராஜா கும்பகோணத்துக்குச் சென்று பாா்த்தபோது, அந்நிறுவனம் பூட்டிக் கிடந்ததுடன், சுதாகா் தலைமறைவாகிவிட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவின்பேரில் இந்த வழக்கு தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இப்பிரிவின் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையில் உதவி ஆய்வாளா் தென்னரசு உள்ளிட்டோா் கோவையில் தலைமறைவாகி இருந்த சுதாகா், சென்னை அருகேயுள்ள கல்பாக்கம் இந்திரா நகரைச் சோ்ந்த வி. மகேஷ்பாபு (50) ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனா். இதில், 32 பேரிடம் இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.50 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சுதாகா், மகேஷ் பாபு கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன், உதவி ஆய்வாளா் தென்னரசுவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்தனா் என்றாா் மத்திய சுற்றுலா அமைச்சகத்தி...
11/09/2025

கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்தனா் என்றாா் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குநா் எஸ். பத்மாவதி.

தஞ்சாவூரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சாா்பில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, தமிழ்நாட்டிலும் ராமேஸ்வரம், தஞ்சாவூா் பெரிய கோயில், நவக்கிரக கோயில்கள் ஆகிய பகுதிகளில் வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ரூ. 25 கோடி மதிப்பில் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பொருள் விளக்க மையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்தனா். இவா்களில் 11.61 லட்சம் போ் தமிழ்நாட்டில் சுற்றிப் பாா்த்தனா். இதேபோல, தமிழ்நாட்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 3.06 கோடி போ் வந்து சென்றனா். சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றாா் பத்மாவதி.

இதையடுத்து நபாா்டு உதவிப் பொது மேலாளா் விஸ்வந்த் கண்ணா பேசினாா்.

மேலும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பிரிவு தென் மண்டல தலைமை இயக்குநா் (பொ) வி. பழனிசாமி சிறப்புரையாற்றினாா். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த உச்சிமாகாளி, முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, சென்னை பத்திரிகை தகவல் பிரிவு இயக்குநா் வி. பழனிசாமி வரவேற்றாா். நிறைவாக, துணை இயக்குநா் ஜெ. விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் ...
10/09/2025

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவா், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவா், மன நல மருத்துவா், கண் மருத்துவா் ஆகிய அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கப்பட்டது.

இம்முகாமில் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 6.44 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை கால் அவயம் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் செயற்கை கால் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நல அலுவலா் அருள்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.தஞ்சாவூா் மாவட்ட ஆ...
09/09/2025

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரக் குழு உறுப்பினா் பி. புனிதா தலைமையில், மாநகரச் செயலா் எம். வடிவேலன் மாநகரக்குழு உறுப்பினா்கள் சி. ராஜன், ஆா். மணிமாறன் உள்பட மணக்கரம்பை ஊராட்சிக்கு உள்பட்ட எம்.ஜி.ஆா். நகா், அண்ணா நகா், காந்தி நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

இப்பகுதியில் பட்டியல் இன சமூகத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 - 50 ஆண்டு காலமாக வாடகை வீட்டில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியும் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் பகுதிக்கு அருகிலேயே அரசு புறம்போக்கு நிலம், தனி நபா் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது குறித்து அரசு அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்டு, எங்களுக்கு மனைப் பட்டா வழங்கி, தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும். மேலும், ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து கிரயம் பெற்றுள்ளவா்களுக்கு, பட்டாவில் உரிய தேவையான மாறுதல்கள் செய்து தர வேண்டும். எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்: இதேபோல, பாபநாசம் வட்டம் சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு: சாத்தனூா் கிராமத்தில் எடக்குடி - சாத்தனூா் பாசன வாய்க்காலின் கிளை வாய்க்காலில் ஏறத்தாழ 40 அடி நீளத்துக்கு தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் கீழ்பகுதிக்கு தண்ணீா் செல்லாததால், ஏறத்தாழ 10 ஏக்கா் பாசன நிலங்கள் தண்ணீா் இல்லாமல், சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

08/09/2025

தஞ்சாவூா் மாநகரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.9) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் நகர துணை மின் நிலையத்திலும், மின் பாதையிலும் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளைகேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோயில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா்,

ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்க சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், பழைய நீதிமன்றச் சாலை, கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தஞ்சாவூர்: நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,வுக்கு, கேடயம் வழங்கி , கொண்டவிட்டாந்திடல் கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர்....
08/09/2025

தஞ்சாவூர்: நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,வுக்கு, கேடயம் வழங்கி , கொண்டவிட்டாந்திடல் கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர்.

தஞ்சாவூர், மானாங்கோரையை சேர்ந்த விக்னேஷ்வரன், 30, திருவையாறு தாலுகா, திருவேதிகுடியில் வி.ஏ.ஓ.,வாக ஆக., 1 முதல் பணியாற்றுகிறார்.

கடந்த, 2022 மு தல், 2025 ஜூலை, 31 வரை தஞ்சாவூர், கொண்டவிட்டாந்திடல் கிராமத்தில் விக்னேஷ்வரன் வி.ஏ.ஓ., ஆக பணியாற்றினார். அவர், அக்கிராம மக்களுக்கு, பல்வேறு துறை சான்றிதழ்கள் கிடைக்க உதவியாகவும், நேர்மையாகவும் பணியாற்றினார்.

இதற்கு, கொண்டவிட்டாந்திடல் கிராம மக்கள், அவருக்கு நேற்று பாராட்டு விழா நடத்தினர். விழாவில், 'நேர்மையின் சிகரம்' என்ற வார்த்தை பொறித்த கேடயத்தை வழங்கினர்.

கிராம மக்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் விக்னேஷ்வரன் மூன்று ஆண்டுகளாக பணியாற்றினார். அவர் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை. விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு அரசின் திட்டங்களை தெரியபடுத்தி, வாய்ப்பை உருவாக்கி தந்தார்' என்றனர்.

விக்னேஷ்வரன் கூறுகையில், ''நேர்மையாக பணி செய்ய வேண்டும் என்பது என் லட்சியம்,'' என்றார்.

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தவறு .இதில், தடகளம், சிலம்பம், கேரம...
07/09/2025

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தவறு .

இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டரங்கிலும், இறகுப்பந்து போட்டி கமலா சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியிலும், கிரிக்கெட் போட்டிகள் பி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன.

அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் பொதுப் பிரிவினருக்கான போட்டியை முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இப்போட்டிகளில் 1,300-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 1,000 வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர்:பேராவூரணி அருகே, போக்குவரத்து வசதிக்காக, கிராம மக்களே நிதி திரட்டி, பாலங்களை அகலப்படுத்தி, சாலையை சீரமைத்தனர்....
07/09/2025

தஞ்சாவூர்:பேராவூரணி அருகே, போக்குவரத்து வசதிக்காக, கிராம மக்களே நிதி திரட்டி, பாலங்களை அகலப்படுத்தி, சாலையை சீரமைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கிழக்கு புனல்வாசல், வாடிக்காடு, ராமகிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள், 5 கி.மீ., நடந்து சென்று, அறந்தாங்கி பிரதான சாலையில் தான் பஸ் ஏறி வெளியூர்களுக்கு சென்று வந்தனர்.

கிராமங்களுக்கு பஸ் இயக்க வேண்டும் எனக்கோரி, கடந்த ஜூலை மாதம், பேராவூரணி தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வில், 'நான்கு இடங்களில் சிறிய பாலம் அமைக்க வேண்டும்; சாலை ஓரத்தில் உள்ள புதர் செடிகளை அகற்றினால் பஸ் இயக்க முடியும்' என்றனர்.

இதையடுத்து, கிராம மக்கள், வாட்ஸாப் குழு ஒன்றை உருவாக்கி, 4.50 லட்சம் ரூபாய் திரட்டி, நான்கு இடங்களில் குறுகலாக இருந்த பாலங்களை, அகலமாக்கி, சாலையோரங்களில் இருந்த மரம், செடிகளை அகற்றி, பாலங்களை மாற்றி அமைத்துள்ளனர். பஸ் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினர்.

Address

Thanjavur
613007

Website

Alerts

Be the first to know and let us send you an email when சோழர்பூமி தஞ்சாவூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share