People of Thanjavur

People of Thanjavur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from People of Thanjavur, Digital creator, Thanjavur.
(2)

“People of Thanjavur”a social media page to connect with the people of Thanjavur and the rest of the world.

“உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைநகரம் உங்களை அன்புடன் அழைக்கிறது”

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் டிச. 1-இல் நடைபெறவுள்ள குடமுழுக்கிற்கான பூசைகள் நிறைவடைந்த நிலைய...
30/11/2025

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் டிச. 1-இல் நடைபெறவுள்ள குடமுழுக்கிற்கான பூசைகள் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் சோலையப்பன் தெருவில் உள்ள படித்துறையில் காவிரி நீா் உள்ளிட்ட தீா்த்தங்கள் எடுக்கப்பட்டு, யானை மீது அமா்த்தி 44 கலசங்கள் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன. ராஜகோபுரம் உள்பட 44 கோபுரக் கலசங்களுக்கும், 63 நாயன்மாா் மண்டபத்திற்கும் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் இந்த ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

திருடு போன 60 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு!தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல்...
29/11/2025

திருடு போன 60 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு!

தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன மற்றும் திருடு போன செல்போன்கள் குறித்து பொதுமக்கள் அளித்த புகார்களின் பேரில், காவல்துறையினர் இஎம்இஐ எண் மற்றும் சிஇஐஆர் செயலி மூலம் தேடி 60 செல்போன்களை மீட்டனர். இவற்றின் மதிப்பு சுமார் 9 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இந்த செல்போன்களை பொதுமக்களிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வின் போது டிஎஸ்பி சோமசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் 'தித்வா' புயல் உருவாகி வட தமிழகத்தை நோக்கி நகர்கிறத...
29/11/2025

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் 'தித்வா' புயல் உருவாகி வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இதனால் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை டெல்டா மாவட்டங்கள், வடகடலோர மற்றும் தென் மாவட்டங்களில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அதிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சைக்கு விரைந்துள்ளனர். வேளாங்கண்ணியில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு உபகரணங்களுடன் முகாமிட்டுள்ளனர். பேரிடர் நேரத்தில் மக்களை காப்பாற்ற தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.

கடந்த இரண்டு நாட்களாக திரிபுரசுந்தரி நகர் - டேனியல் தாமஸ் நகரை இனைக்கும் பிரதான முதலாம் மெயின் சாலையில் உள்ள பாதாள சாக்க...
28/11/2025

கடந்த இரண்டு நாட்களாக திரிபுரசுந்தரி நகர் - டேனியல் தாமஸ் நகரை இனைக்கும் பிரதான முதலாம் மெயின் சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி பழுதாகி அப்பகுதி மக்கள் குச்சி வைத்துள்ளனர் …..

தினமும் குப்பைகளை சேகரிக்கும் மாநகராட்சி இதை கண்டுகாணாமல் இருப்பது வேதனை மழைக்காலம் இப்படி மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது விரைந்து சரி செய்க!

தஞ்சாவூரில் நாளை (நவம்பர் 29) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத...
28/11/2025

தஞ்சாவூரில் நாளை (நவம்பர் 29) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும் இந்த புயலுக்கு'டிட்வா' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்கள் தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்...
27/11/2025

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்கள் தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ள நவம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் வாக்காளா் உதவி மையங்கள் நடைபெறவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

வாக்காளா்கள் தங்களது நிறைவு செய்த படிவங்களை வழங்குவதற்கும், நிறைவு செய்யாத படிவங்கள் தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து மீள வழங்குவதற்கும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான வாக்காளா் உதவி மையங்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளில் நவம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், தற்காலிகமாக இடம்பெயா்ந்த வாக்காளா்கள் தங்களது பழைய வாக்குச் சாவடிக்கு சென்று கணக்கெடுப்புப் படிவங்கள் பெற்று நிறைவு செய்து உடனடியாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில்  120 சி.என்.ஜி., பஸ்கள் இயக்க திட்டம்…காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு வாகனங்களில்...
27/11/2025

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 120 சி.என்.ஜி., பஸ்கள் இயக்க திட்டம்…

காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு வாகனங்களில் சி.என்.ஜி., எரிவாயு பயன்படுத்தும் முறை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பஸ்களிலும் டீசல் இன்ஜின், சி.என்.ஜி.,க்கு மாற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் இரு பஸ்களில் சி.என்.ஜி., இன்ஜின் மாற்றப்பட்டது. தற்போது வரை எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பஸ்களில் 120 பஸ்களின் டீசலுக்கு பதில் சி.என்.ஜி., பயன்படுத்த ராமநாதபுரம் ஏ.ஜி.பி., நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குநர் தசரதன், ஏ.ஜி.பி., நிறுவன மண்டலத் தலைவர் இசக்கிமுத்து பூமாரி ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டனர். ஏ.ஜி.பி., நிறுவனத்தினர் கூறியதாவது:

ராமநாதபுரத்தில் 12 தனியார் பஸ்கள் சி.என்.ஜி., எரிபொருளில் இயங்கி வருகின்றன. புதிய தொழில்நுட்பத்தில் பஸ்களின் இன்ஜின்கள் சி.என்.ஜி.,க்கு மாற்றப்படுகிறது. இதனால் குறைந்த செலவில் அதிக தொலைவு பயணிக்க முடியும் என்றனர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து தென்னிந்தியா முழுவதும் சைக...
26/11/2025

நெதர்லாந்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து தென்னிந்தியா முழுவதும் சைக்கிள் சுற்றுலா பயணத்தை நேற்று தொடங்கியுள்ளனர். நவீன வசதிகளுடன் கூடிய சைக்கிள்களில் கேமரா பதிவுகளுடன் இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். ஒரு மாத காலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பார்வையிட உள்ளனர்

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு தொடர்பாக, அங்கு பணியாற்றிய முன்னாள் மாநகராட்சி கமிஷனர் உட்பட நான்கு பேர் மீ...
26/11/2025

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு தொடர்பாக, அங்கு பணியாற்றிய முன்னாள் மாநகராட்சி கமிஷனர் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர், ஜெப மாலைபுரத்தில் 28 ஏக்கரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, குப்பைகளை தரம் பிரிக்க, 2018ல் 'பயோமைனிங்' முறையில், 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்கு, குப்பையை தரம் பிரிக்க ஒப் பந்தம் வழங்கப்பட்ட து.

ஒப்பந்தம் இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், 40,115 யூனிட் மின்சாரத்தை பயன் படுத்தி, 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது. பின், புதிய நிறுவனத்துக்கு, 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க, 10.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

ஆனால், ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும், 5,000 கன மீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, 10.60 கோடி ரூபாய் பில் தொகையை வாங்கியுள்ளார்.

அதற்கு, 8, 328 யூனிட் மின்சாரத்தை பயன் படுத்தியுள்ளனர்.

இதில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க, ஐகோர்ட் கிளையில், தஞ்சாவூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு நடந்து வந்த நிலையில், நவ., 20ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து, தேவையான ஆவணங்களை எடுத்து சென்றனர்.

விசாரணை மேலும், இது தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வந்த போது, வழக்குப் பதிவு தாமதம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, நேற்று முன்தினம், தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் கமிஷனரும், தற்போதைய துாத்துக்குடி உதவி கமிஷனருமான சர வணகுமார், 48, ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், 62, பணியிட மாறு தல் செய்யப்பட்டுள் ள உதவி பொறியாளர் கார்த்திகேயன், 49, ஒப்பந்ததாரர் மணிசே கரன், 37, ஆகிய நான்கு பேர் மீதும், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.


வழக்கு பின்னணி
இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட மூன்று அரசு அலுவலர்கள், ஒப்பந்த விதிகளை மீறி, மணிசேகரன் என்ற தனி நபருடன், மாநகராட்சி ஒப்பந்ததாரர் பதிவேட்டில் பதிவு செய்யாத அவரது நிறுவனத்திற்கு பணி உத்தரவு வழங்கி உள்ளனர். குப்பை தொடர்பாக ஆய்வறிக்கை கொடுப்பதற்கு நியமனம் செய்யப்பட்ட மூன்றாவது குழுவான, சென்னை அண்ணா பல்கலை சூழ்நிலையியல் கல்விமைய அலுவலர்களை எவ்வித அறிவிப்புமின்றி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். குப்பை கிடங்கில் அகற்றப்படாமல் இருந்த குப்பைகளை, அகற்றாமலேயே தரம்பிரித்து அகற்றிவிட்டதாக அளவு புத்தகங்களில் போலி பதிவுகளை செய்துள்ளனர். இதனால், அரசுக்கு, 9.57 கோடி ரூபாய் அளவுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தி உள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

25/11/2025

Address

Thanjavur
613007

Website

Alerts

Be the first to know and let us send you an email when People of Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share