NMK. Alagu Saravana kumar

NMK. Alagu Saravana kumar தனித்து நில்!
விமர்சனத்தை ஏற்றுக்கொள்!
அரசியல் பலகு!
புரட்சி செய்!🚩🚩🚩

நாடாளும் மக்கள் கட்சியின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாடாளும் மக்கள் கட்சியின்  வ...
23/11/2024

நாடாளும் மக்கள் கட்சியின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாடாளும் மக்கள் கட்சியின் வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

நாடாளும் மக்கள் கட்சியின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாடாளும் மக்கள் ...

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் திரு பாலாஜி அவர்கள், கத்தியால் குத்தப்பட...
14/11/2024

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் திரு பாலாஜி அவர்கள், கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைந்து நலம்பெற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஏற்கனவே பல முறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின் போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியிருக்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது, திமுக உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும்.

குன்றக்குடி முருகன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த  #சுப்புலட்சுமி யானையின்  மறைவு மிகுந...
14/09/2024

குன்றக்குடி முருகன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த #சுப்புலட்சுமி யானையின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

யானை தங்கியிருந்த கூடாரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பலத்த தீக்காயங்களுடன் யானை துன்புற்ற செய்தியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. யானையின் பாதுகாப்பு விஷயத்தில் கோவில் நிர்வாகத்தினர் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
#குன்றக்குடி #முருகன்கோவில் #யானை #சுப்புலட்சுமி

மிக மிக கஷ்டமான பதிவு...குன்றக்குடி ஸ்ரீஷண்முகநாதர் கோயில்... #சுப்புலட்சுமி என்னும் யானை கட்டப்பட்டிருந்த கொட்டகையில் த...
14/09/2024

மிக மிக கஷ்டமான பதிவு...

குன்றக்குடி ஸ்ரீஷண்முகநாதர் கோயில்...

#சுப்புலட்சுமி என்னும் யானை கட்டப்பட்டிருந்த கொட்டகையில் தீ பற்றியது! யானையைக் காக்க யாருமில்லை! யானையின் உடல் தீக்காயங்களால் சுடப்பட்டது! யானை கடுமையாகப் போராடி சங்கிலிகளை அவிழ்த்துத் தப்பியது! எனினும் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் இறந்தும் போனது!

இந்த நாடு எதை நோக்கி போகின்றது என்று தெரியவில்லை... இந்த செய்தி பெரிய வலியை உண்டாக்குகிறது.

விநாயகர் சதுர்த்தி முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை.. இது எதற்கான அறிகுறி????
#குன்றக்குடி #முருகன்கோவில் #யானை #சுப்புலட்சுமி

Address

Theni
625513

Website

Alerts

Be the first to know and let us send you an email when NMK. Alagu Saravana kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share