08/05/2025
….விடுகதை சொல்லிவிட்டாய் …
வானவில்லையே கண்டேன்
அதில் வண்ணமாகவே சேர்ந்தேன்
சின்ன மழை சாரல் அது
மெல்ல தூறலிட
மனம் சலனம் கொண்டதென்னவோ
சரி க ம ப என்று சரணம் பாடும்
மௌன குயிலின்
ராகம்
கேட்ட ஒற்றை ரசிகன் இவனோ …
அடி
நாளை நல்ல சேதி
என்று ..
இன்றே தேதியிட்டு
மீதியே இல்லாமல்
என்னை கழித்து விட்டாய்
நிலவை சுற்றிய
நட்சத்திரங்கள் கூட
வேறு வரம் வாங்கி கொண்டு
வெளிநாடு சென்றதென்று
விடுகதை சொல்லிவிட்டாய்
பூவை அரும்பிய செடி
வாசம் நுகர்ந்தது இல்லை
பூசல் கொண்ட மனம்
பேச மறுத்ததில்லை
பனியில் உறைந்த பாதம்
நெருப்பை வெறுப்பதில்லை
பாசம் கொண்ட இதயம்
நிழல் உன்னை மறப்பதில்லை
என்றும் அன்புடன்
P.கோபாலகிருஷ்ணன்