
29/06/2025
29.06.2025 | சேலம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக நிரம்பியுள்ளது.
ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பாக 1957ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி இருந்தது.
#திருச்செங்கோடு_நியூஸ்_குழுமம்