News Trichy

News Trichy We’re Passionate about our city, love sharing all the existing happenings in TRICHY.

26/01/2026

#வாக்குறுதி

வாக்கு என்பது ஒரு குடிமகனின் சக்திவாய்ந்த உரிமை. நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதன் மூலம் நம் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறோம். அந்த முடிவை எடுக்க உதவும் முக்கிய கருவி தான் வாக்குறுதிகள். வாக்குறுதி என்பது தேர்தல் காலங்களில், அரசியல் கட்சிகள் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் நாட்டின் எதிர்கால திசையை தீர்மானிக்கக்கூடியவை. வாக்களிக்கும் நேரத்தில் வாக்குறுதிகள் மிகவும் முக்கியமான வழிகாட்டியாக செயல்படுகின்றன.

நாம் உணர்ச்சிவசப்படாமல், யார் என்ன வாக்குறுதி கொடுக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நல்ல வாக்குறுதிகள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், தவறான அல்லது பொய்யான வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும். ஆகவே விழிப்புணர்வுடன் தேர்வு செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

அனைத்து வாக்குறுதிகளும் நம்பகமானவை அல்ல. அதனால் சில முக்கிய அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும். முதலில், நடைமுறையில் சாத்தியமா? என்பதைக் கேட்க வேண்டும். மிகப்பெரிய, கவர்ச்சியான வாக்குறுதிகள் பல நேரங்களில் செயல்படுத்த முடியாதவையாக இருக்கலாம்.

இரண்டாவது அதற்கான திட்டம் தெளிவானதா? ஒரு நல்ல வாக்குறுதி எப்போது, எப்படி, எந்த வளங்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட வேண்டும்…

மூன்றாவது முன்பு ஆட்சியில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

நான்காவது அது எல்லா மக்களுக்கும் பயனுள்ளதா? சில வாக்குறுதிகள் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கே சாதகமாக இருக்கலாம். வாக்குறுதிகள் பொதுநலனுடன் இருக்க வேண்டும்.

வாக்குறுதி என்பது வெறும் சொல் அல்ல. அது நம்பிக்கையின் அடையாளம். அதை உணர்ந்து நாம் சரியான முடிவெடுக்கும் போது தான் ஜனநாயகம் வலுவாகும். விழிப்புணர்வுடன் வாக்களிப்பது நல்ல சமூகத்திற்கான முதல் படியாகும்.


25/01/2026
திருச்சி கலெக்டர் அறிவிப்புதிருச்சி ரயில் நிலையம் மற்றும் திருச்சி கோட்டை நிலையத்திற்கு இடையில் 'New Steel Grider' மாற்ற...
25/01/2026

திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி ரயில் நிலையம் மற்றும் திருச்சி கோட்டை நிலையத்திற்கு இடையில் 'New Steel Grider' மாற்ற வேண்டி உள்ளதால், மேலப்புதூர்- பாலக்கரை கீழ் பாலம் வழியாக செல்லும் சாலை போக்குவரத்தினை வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதால் சாலைப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

10/01/2026

Dog show at Trichy Thiruvizha

ஶ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம்
08/01/2026

ஶ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம்

பஞ்சப்பூர் - கருமண்டபம்  புதிய சாலை
04/01/2026

பஞ்சப்பூர் - கருமண்டபம் புதிய சாலை

28/12/2025

தளபதி திருவிழா மலேசியா

நவீன விளையாட்டு சூழலை உருவாக்கும் தமிழ்நாடு....!!!
19/11/2025

நவீன விளையாட்டு சூழலை உருவாக்கும் தமிழ்நாடு....!!!

2026ல் பங்கு கேட்கமாட்டோம் : திருமா....!!!
19/11/2025

2026ல் பங்கு கேட்கமாட்டோம் : திருமா....!!!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு நான்கு புதிய விமான சேவைகள்....!!!!
19/11/2025

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு நான்கு புதிய விமான சேவைகள்....!!!!

Address

Tiruchirappalli
620020

Alerts

Be the first to know and let us send you an email when News Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share