20/11/2024
🔴🔴🔴 20 Nov 2024
*தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம்; நெல்லை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை*
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தாமிரபரணி ஆற்றினை பொறுத்தவரை தற்போது வெள்ளபெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் பரவலாக பெய்து வரும் மழையால் சிறு ஓடைகள், கால்வாய்கள் மூலமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சுமார் 2100 கன அடி தண்ணீர் ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. பெய்யக்கூடிய மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம்.
எனவே பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஒடைகளில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது- மாவட்ட ஆட்சித்தலைவர் திருநெல்வேலி