01/09/2025
மன்னர் புலித்தேவர் பாண்டிய மன்னரா ?
13 ஆம் நூற்றாண்டில் தென்காசியில் வாழ்ந்த பாண்டியன் அரண்மனையில் காவல் பொறுப்பில் ஆதிக்கம் செலுத்தி வந்த சொக்கன்பட்டி குடும்பத்தை சேர்ந்த முதலாம் வலங்கைபுலி தேவர் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளது. இவர் செங்கோட்டை பாண்டியனின் வாரிசு பாண்டியனின் தங்கை வழி மருமகன் ஆவார். பாண்டிய மன்னரின் தங்கை வழியினர். தென்காசி - இலஞ்சி குமாரர் கோவில் வரலாற்று தகவல் கூறுவது, 1480களில் தென்காசியில் பாண்டிய மன்னர் வாழ்ந்த சமகாலத்தில் காளத்தியப்ப பாண்டியன் என்கிற சொக்கன்பட்டி மன்னர் வடகரை ஆதிக்கமாக இருக்கிறார். தன் முன்னோர்களான பாண்டியர்கள் வழியில் கோவில் திருப்பணிகள் செய்துள்ளார். நாயக்கர் காலத்தில் திருநெல்வேலி பஞ்ச பாண்டியர்கள் மோதிய கயத்தாறு போரில் "வாள்வீமன்" என்றொரு பாண்டிய இளவரசன் வீழ்ந்த பிறகு தான் போர் முடிவுற்றது பஞ்ச பாண்டியர்கள் அடங்கினர். "வாள்வீமன்" என்பது மறவர் சாதியின் கிளை. வீழ்ந்த பஞ்ச பாண்டியர் வாரிசை தனக்கு கீழ் குறுநில மன்னர்களாக வைத்து கொண்டார் மதுரை நாயக்கர். மேலும் நாயக்கரை எதிர்த்த வரலாறு என்பது 1543களில் மாறவர்மன் சுந்தர பெருமாள் (எ) கயத்தாறு வெட்டும் பெருமாள் பாண்டியனின் காலத்தில் தான். அதே சமகாலத்தில் மதுரை நாயக்கர் உடனான போரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவர் மகன் செல்ல பெருமாள் உயிரிழந்தார் அவருக்காக வெட்டும் பெருமாள் நடுகல் எழுப்பினார். 1753ல அதாவது மன்னர் புலித்தேவர் வாழ்ந்த சமகாலத்தில் இறந்த காலமெடுத்த குலசேகர தேவர்" என்கிற தென்காசி பாண்டிய மன்னனின் கல்வெட்டு உள்ளது. அவ்ளோ ஏன் ! புலித்தேவரின் இயற்பெயரே வரகுண சிந்தாமணி காத்தப்ப பூலித்துரை பாண்டியன் தான். மேலும் "புலித்தேவர்" என்பதே புலியை வென்ற பாண்டிய மன்னருக்கு கிடைத்த பட்டமாகும். "பூலித்தேவர், பூழித்தேவர், புலித்தேவர்" மூன்றுமே சரி தான். தென்காசியை சுற்றி வாழ்ந்த பாண்டியர் வாரிசுகளே பிற்கால மறவர் ஜமீன்கள். வரலாற்றில் இந்த குறுநில மன்னர்கள் தங்களை பாண்டியன், தேவர், பாண்டிய தேவர் போன்ற பெயர்களில் தான் வருகிறார்கள். அப்படி இருக்க ! பாண்டியன் வேற - மறவர் வேற என வரலாற்றை திரித்து பேசுவது மறவர் சாதி மீதுள்ள வன்மம் தானே தவிர வேறொன்றும் இல்லை. சிலர் வீம்புக்கு ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார்கள். இந்த வன்மம் இவர்களுக்கு இன்று வந்தது அல்ல. இவ்வாறு வன்மத்துடன் பேசுகிறவர்களின் முன்னோர்கள் தான் அன்று நம் முன்னோர்களை மரியாதையாக "பாண்டியன்" என்று அழைத்தது அன்று காவல் வரி தர மறுத்து, நமக்கு எதிராக சூழ்ச்சி செய்த ஆங்கிலேயர்களின் பேச்சை கேட்டு எதிராக செயல்பட்டது.. அவரவர் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. பாண்டிய மன்னர் வாழ்ந்த சமகாலத்தில் பாண்டியன், தேவர், பாண்டிய தேவர் என பெயர்களை கொண்டு குறுநில மன்னர்களாக பாண்டிய நாட்டில் வாழ்ந்த ஒரே தமிழ் சாதி மறவர் மட்டுமே. ஆனால் இவர்கள் தமிழ் தேசியம் பேசுவதாக சொல்லிக்கொள்வது உண்மையான தமிழர் வரலாற்றை சிதைத்து ஒழிக்க தான் என்கிற போது தான் நமக்கு தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கையே இல்லை.