Thabey

Thabey ThabeyChannel



தெருவில் பணக்காரன் நடக்கும் போது ஏழையின் வீட்டில் இருந்து இறைச்சி கறி சமைக்கும் மணம் வந்தது. அந்த வாசனையை அவனால் கடந்து ...
24/04/2022

தெருவில் பணக்காரன் நடக்கும் போது

ஏழையின் வீட்டில் இருந்து இறைச்சி கறி சமைக்கும் மணம் வந்தது.

அந்த வாசனையை அவனால் கடந்து போகவே முடியவில்லை. அப்படியே நின்று விட்டான்.

தற்செயலாக ஏழை வெளியே வர பணக்காரன் அங்கே நிற்பதைப் பார்த்து வரவேற்றான்.

அந்த ஏழையின் வீடு பிடிக்காவிட்டாலும் வீட்டில் இருந்து வந்த உணவின் மணம் பணக்காரனை உள்ளே போக சொன்னது. போய் தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்தான்.

“என்ன உன் வீட்டில் இறைச்சி கறி வாசமாக வீசுகிறது”

“ஆம் ஐயா கொஞ்சம் பட்டையும், ஏலமும், கிராம்பும், மிளகும், இஞ்சியும், பூண்டும் தூக்கலாக போட்டு நல்லெண்ணெய் ஊற்றி வைத்த காரணத்தால் இருக்கலாம். நீங்கள் சாப்பிட்டு விட்டு போங்கள்”

பணக்காரன் தலை அசைத்தான். இலையில் சோற்றை வைத்து கட்டியாக வைக்கப்பட்ட கறிக்குழம்பை ஊற்றினான்.

ஆசையாக பணக்காரன் ஒருவாய் கறியை எடுத்து வாயில் வைத்தான்.

“இது என்ன கறி. சுவை அற்புதம்”

“ஐயா இது முயல் கறி”

“முயல் கறியா... முயல் கறி உனக்கு ஏது. விலைக்கு வாங்கினாயா” என்று சொல்லி ஆசையாக ரசித்து சாப்பிட்டான் பணக்காரன்.

ஏப்பம் விட்டு நன்றி சொல்லி வெளியே வரும் போது தெருநாய் ஒன்று ஏழையின் வீட்டு வாசலில் படுத்திருந்தது.

“ச்சீ நாற்றம் பிடித்த நாயே நீ இங்கேயும் வந்து விட்டாயா. இந்த சனியனுக்கு நான் தினமும் எச்சில் உணவை வைப்பேன். வாசலில் காவலாய் காத்துகிடக்கும்” என்றான் பணக்காரன்.

“ஐயா. நீங்கள் சாப்பிட்ட சுவையான முயல் கறியின் முயலை இந்த நாய்தான் பிடித்து வந்தது. அருகில் இருக்கும் காட்டு விளைகளுக்குள் போய் இந்த நாய் நின்று கொண்டிருக்கும். ஒருநாள் அதிர்ஷ்டமாக கொழுத்த முயல் மாட்டியது போல. பிடித்து அது கூட சாப்பிடாமல் என் வீட்டுக்கு தூக்கி வந்து விட்டது”

இதைக் கேட்டதும் பணக்காரன் பொறாமையில் சட்டென்று திரும்பி நாயை வெறுப்பாக பார்த்தான். எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்.

மறுநாள் பணக்காரன் மதிய சாப்பாடு சாப்பிட்டு மீன் முள்ளை தூக்கி வெளியே போடப் போகையில் அந்த தெருநாய் வந்து உணவுக்காக நின்றது.

“நன்றி கெட்ட நாயே. தினமும் உனக்கு எச்சில் உணவு கொடுப்பது நான். ஆனால் நன்றியே இல்லாமல் நீ பிடித்த கொழுத்த முயலை அந்த பஞ்சத்து ஏழைக்கு கொடுத்து விட்டாயே” என்று திட்டினான்.

பசிதாங்காமல் நாய் அந்த மீன் முள்ளை பார்த்துக் கொண்டே இருந்தது. ”உனக்கு கிடையாது போ” என்று கல்லை எடுத்து நாய் மீது எறிந்த பணக்காரன் முள்ளை காக்கைகளுக்கு வீசினான்.

இந்த காட்சி எல்லாம் முடியவும், ஏழை அப்பக்கம் வரவும் சரியாக இருந்தது. அவன் பணக்காரனை சட்டை செய்யாத அவசரசத்தில் இருந்தான்.

“வா வா என்ன ரொம்ப பசியா இருந்தியோ. எனக்கு இன்னைக்கு அரைநாள் கூலியா. இரண்டு ஆப்பம் கிடைச்சது. தொட்டுக்க கொஞ்சம் துவையலும் இருக்கு. வீட்டுக்கு வா ஆளுக்கொரு ஆப்பம் சாப்பிடலாம்” என்று நாயை அழைத்தான்.

கதவை திறந்து விட்டான். நாய் உரிமையுடன் ஏழையின் வீட்டுக்குள் நுழைந்தது.

வெளியே இருந்து பார்க்கும் போதே பணக்காரனுக்கு அவர்கள் ஆளுக்கொரு ஆப்பத்தை பகிர்ந்து சாப்பிடுவது தெரிந்தது.

நாயும் ஏழையும் அருகருகே இருந்து சாப்பிட்டார்கள். அந்த ஏழை நாயை கொஞ்சவும் இல்லை. அன்பை பொழியவும் இல்லை. ஆனால் அவனுக்கு சரி சமாக வைத்து தன் உணவை பகிர்ந்து கொண்டான்.

பிறருக்கு கொடுப்பது என்பது தன்னுடைய உணவில் மிஞ்சியதை தூக்கி எறிவது அல்ல, தன்னுடைய உணவை “வா பகிர்ந்து சாப்பிடலாம்” என்று நட்பாக கொடுப்பதுதான் என்ற உண்மையை பணக்காரன் உணர்ந்தான்.

அந்த ஏழையின் மதிப்பான அன்பிற்கு பரிசாகத்தான் நாய் கொழுத்த முயலை வேட்டையாடி அவனுக்கு கொடுத்திருக்கிறது, தனக்கு கொடுக்கவில்லை என்ற பெரிய உண்மையையும் தெரிந்து கொண்டான்.

எழுத்தாளர் ஜேக் லண்டன் சுயசரிதையில் தன் பிச்சை எடுத்து உண்ணும் வாழ்க்கை பற்றி பேசும் போது

“என்னப்பா பணக்காரர்கள் தானம் கொடுக்கிறீர்கள். பிறருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதை ஏழைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

”ஒரு நாய்க்கு எலும்பை வீசுவது அன்பு இல்லை. தனக்கு கிடைத்த எலும்பை நாயோடு பகிர்ந்து சாப்பிடுவதுதான் அன்பு”

என்பதை படித்த உடன் இப்படி ஒரு சிறார் கதை எழுத வேண்டும் என்று தோன்றியது.

படித்ததில் பிடித்தது!!!

💐 *இன்றைய சிந்தனை* 💐▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️*"மிகச்சிறந்த வெகுமதி"*▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️பிற மனிதர்களுக்கு மதிப்பளிப்பதுதான் மனிதன...
18/04/2022

💐 *இன்றைய சிந்தனை* 💐

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
*"மிகச்சிறந்த வெகுமதி"*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

பிற மனிதர்களுக்கு மதிப்பளிப்பது
தான் மனிதன் செலுத்தும்
*மிகச்சிறந்த வெகுமதி.*
ஒழுக்கம் விற்கப்படவோ
வாங்கப்படவோ முடியாதது.
மாறாக அது, முறையாக பிறந்து வளர்ந்தவனுடைய இதயத்தில்
இடப்பட்ட முத்திரையாகும்.

18/04/2022
13/04/2022

நம்பிக்கை மனிதன் 👌

தேனை🍯 எதனுடன் சேர்த்தால் என்ன பலன்கிடைக்கும்👉பாலில் 🥛தேன்🍯 கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் 💝பலம் பெறும்👉ப...
20/03/2022

தேனை🍯 எதனுடன் சேர்த்தால் என்ன பலன்கிடைக்கும்
👉பாலில் 🥛தேன்🍯 கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் 💝பலம் பெறும்
👉பழச்சாறுடன் 🍇🍓🍒தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து🍯 சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.
👉எலுமிச்சை🍋 பழச்சாறுடன் தேன்கலந்து🍯 சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
👉நெல்லிக்காய்🍈 சாறுடன் தேன்கலந்து🍯 சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
ஆரஞ்சுப்பழத்துடன்🍊 தேன்🍯 கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
👉ரோஜாப்பூ🥀 குல்கந்தில் தேன்கலந்து🍯 சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
👉தேங்காய்பாலில்🥛🍯 தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
👉இஞ்சியுடன் 🍯தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.
👉கேரட்டுடன்🥕 தேன் 🍯கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
👉தேனில்🍯 சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
👉இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன்👆 பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள்.

*💜இன்றைய சிந்தனை..( 13.03.2022)..**...........................................**''மரியாதை கொடுங்கள்..''**..................
13/03/2022

*💜இன்றைய சிந்தனை..( 13.03.2022)..*
*...........................................*

*''மரியாதை கொடுங்கள்..''*
*...........................................*

இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்களின்
சுயசரிதையைப் படித்தோம் என்றால் அவர்களிடத்தில் தலைக்கனம் ( EGO) என்ற குணமே இருக்காது.

தன்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி, தன் கீழ்நிலை பணியாளர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் தயங்க மாட்டார்கள்.

சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்..

ஒரு நாள் மாலை வேலை முடியும் தறுவாயில் இறைச்சி பதப்படுத்தும் குளிர்சாதன( Freezer ) அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக் கொண்டு விட்டது.

உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா.... உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பி விட்டனர்...

இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணிக் கவலை அடைந்தான் சிவா.... அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந்தான்..

தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்..... மகிழ்ச்சியில் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டான்....

அவரிடம், "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டான்.

"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும், சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..

ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை. உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்... அப்போ தான் உங்களைக் கண்டு பிடிச்சேன் ." என்றார்..

*ஆம்.,தோழர்களே..,.*

*ஒருவருக்கொருவர் மற்றவர்களைத் தன்னை விட கீழ் நிலையில் உள்ளவர்* *என்று தரக்குறைவாக எண்ணாமல்* *ஒருவருக்கொருவர் மரியாதை*
*(அன்பு) செலுத்திக் கொள்வது* *எப்போதுமே நன்மை பயக்கும்..*

*சுயநலமில்லாத உங்களது பழக்கம் மற்றவர்களிடத்து உங்களை பெரிதும் விரும்பச் செய்யும்.*

*ஒருவருடைய மனதை புண்படுத்தாத, நல்ல குணங்கள் உங்களையும் அறியாமல் உங்களிடம் குடியிருக்கும் போது மற்றவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை...✍🏼🌹*

*சோறு வரும் வழி:*01. வயல் காட்டைச் சீர்செய்தல்02. ஏர் பிடித்தல்03. உழவு ஓட்டுதல்04. பரம்படித்தல்05. விதை நெல் சேகரித்தல்...
05/03/2022

*சோறு வரும் வழி:*

01. வயல் காட்டைச் சீர்செய்தல்

02. ஏர் பிடித்தல்

03. உழவு ஓட்டுதல்

04. பரம்படித்தல்

05. விதை நெல் சேகரித்தல்

06. விதை நேர்த்தி செய்தல்

07. விதைகளை நீரில் ஊற
வைத்தல்

08. நாற்றங்காலில் விதைத்தல்

09. நாற்றாக வளருதல்

10. நாற்று எடுத்தல்

11. முடிச்சு கட்டுதல்

12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்

13. நடவு நடுதல்

14. களையெடுத்தல்

15. உரமிடுதல்

16. எலியிடம் தப்புதல்

17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்

18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்

19. கதிர் முற்றுதல்

20. கதிர் அறுத்தல்

21. கட்டு கட்டுதல்

22. கட்டு சுமந்து வருதல்

23. களத்துமேட்டில் சேர்த்தல்

24. கதிர் அடித்தல்

25. பயிர் தூற்றல்

26. பதறுபிரித்தல்

27. மூட்டை கட்டுதல்

28. நெல் ஊறவைத்தல்

29. நெல் அவித்தல்

30. களத்தில் காயவைத்தல்

31. மழையிலிருந்து பாதுகாத்தல்

32. நெல் குத்துதல்

33. நொய்யின்றி அரிசியாதல்

34. அரிசியாக்குதல்

35. மூட்டையில் பிடித்தல்

36. விற்பனை செய்தல்

37. எடை போட்டு வாங்குதல்

38. அரிசி ஊறவைத்தல்

39. அரிசி கழுவுதல்

40. கல் நீக்குதல்

41. அரிசியை உலையிடல்

42. சோறு வடித்தல்

43. சோறு சூடு தணிய வைத்தல்

44. சோறு இலையில் இடல்

இத்தனை தடைகளைத் தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது உலகமகா பாவம்.
உண்ணும் முன் உணருவோம்,
அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும், அதன்பின்னுள்ள
உழவனின் உழைப்பையும்.!

*வாழ்க விவசாயம் வெல்க விவசாயி*

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+919940012434

Alerts

Be the first to know and let us send you an email when Thabey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thabey:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share