13/07/2026
இனிய அகவை தின #நல்வாழ்த்துக்கள்💐💐💐
#வைதேகி
🌟 கடலூர் மாவட்டம் | பண்ருட்டி | அண்ணங்காரன் குப்பம் முந்திரிக்காட்டின் பெருமை மகள் 🌟
🤾♀️ தமிழக அணிக்காக 8 முறை தேசிய கபாடி போட்டிகளில் (Junior–2, Junior Federation–1, Khelo India Youth–2, Senior–2, Senior Federation–1) விளையாடி, தனது திறமையால் தனி முத்திரை பதித்த சிறந்த கபாடி வீராங்கனை.
🥈🥉 கேலோ இந்தியா யூத் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி, ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் தமிழ்நாட்டிற்கு கிடைக்க முக்கிய பங்காற்றியவர்.
🏆 3 முறை அகில இந்திய பல்கலைக்கழக கபாடி போட்டிகளில் பங்கேற்று அசத்தியவர்.
🥉 தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பையில், தமிழக அணி முதல்முறையாக வெண்கலப் பதக்கம் வெல்ல சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளில் ஒருவர்.
💪 PKR கல்லூரி – கோபி | சக்தி கல்லூரி – ஒட்டன்சத்திரம் | பாரதியார் பல்கலைக்கழகம் | மதர் தெரசா உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியவர்.
⭐ தற்போது தென்னிந்தியாவின் முன்னணி அணிகளில் ஒன்றான SMVKC – ஒட்டன்சத்திரம் அணியின் நட்சத்திர கபாடி வீராங்கனையாக ஜொலித்தது, விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டின் மூலமாகவேலை பெற்று சென்னை ஐ.சி.எப்-ல் தற்போது பணியாற்றி வருகிறார்...
🎂 V. வைதேகி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐🎉
தனது இயல்பான ஆட்டத்தை எந்தச் சூழலிலும் மாற்றாமல் வெளிப்படுத்துவது, தோல்வியிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் மீண்டும் எழுவது, கடைசி நொடி வரை போராடும் குணம்—இவை அனைத்தும் ஒரு சிறந்த கபாடி வீராங்கனைக்கான அடையாளங்கள். இதனை கொண்டவர் தான் வைதேகி . 👏🔥
உங்கள் கடின உழைப்பு, தன்னம்பிக்கை, போராட்ட மனப்பான்மை மேலும் பல தேசிய, சர்வதேச வெற்றிகளை உங்களுக்குப் பெற்றுத் தரட்டும். 🏅🇮🇳
வாழ்க! வளமுடன்! ❤️🙏
💐 வாழ்த்துவது:
கபாடியில் ஒருவன் – உங்கள் DR 🙏