Tru - Path TV

Call Contact the business

Tru - Path TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tru - Path TV, Digital creator, Tirupur.

Tru - Path TV – Revealing the Truth of God’s Word | உண்மையின் வழியில் நடக்க வழி காட்டும் தேவ வார்த்தை 🌿
✝️ Daily Bible promises, Tamil Christian devotionals & spiritual short videos to strengthen your faith in Christ.

👑 இன்றைய வாக்குத்தத்தம் – செப்டம்பர் 06📖 “நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும்… இருப்பாய்.”— ஏசாயா 62:3✨ உலகம் எப்...
06/09/2026

👑 இன்றைய வாக்குத்தத்தம் – செப்டம்பர் 06
📖 “நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும்… இருப்பாய்.”
— ஏசாயா 62:3
✨ உலகம் எப்படி பார்த்தாலும், தேவனுடைய பார்வையில் நீங்கள் விலையேறப்பெற்றவர்கள். அவர் உங்கள் வாழ்க்கைக்கு புதிய அடையாளத்தையும் மகிமையையும் அளிக்க வல்லவர். 🙏❤️
#இன்றையவாக்குத்தத்தம் #ஏசாயா623 #அனுதினபரலோகமன்னா

🌿 இன்றைய வாக்குத்தத்தம் – செப்டம்பர் 05📖 “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி… நீ வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.”— ஏசாய...
04/09/2026

🌿 இன்றைய வாக்குத்தத்தம் – செப்டம்பர் 05
📖 “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி… நீ வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.”
— ஏசாயா 58:11
வறட்சியான காலங்களிலும் தேவன் நம்மை நடத்தி, நம் ஆத்துமாவை திருப்தியாக்குகிறார். 💧🌱
அவரை நம்பி நடப்போம்; நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறட்டும். 🙏✨

📖 இன்றைய வாக்குத்தத்தம் – செப்டம்பர் 03“உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.”— ஏசாயா 54:17🙏 மன...
03/09/2026

📖 இன்றைய வாக்குத்தத்தம் – செப்டம்பர் 03
“உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.”
— ஏசாயா 54:17
🙏 மனிதர்களின் எதிர்ப்போ, சூழ்நிலைகளின் தடைகளோ நம்மை அழிக்க முடியாது. தேவன் நம்மோடு இருக்கும்போது, எந்த ஆயுதமும் நமக்கு எதிராக வெற்றி பெறாது. இன்று அவர்மேல் நம்பிக்கையுடன் முன்னேறுவோம். ✨

📖 இன்றைய வாக்குத்தத்தம் – செப்டம்பர் 02“நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி நீ என் ஜனமென...
02/09/2026

📖 இன்றைய வாக்குத்தத்தம் – செப்டம்பர் 02
“நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி நீ என் ஜனமென்று சொல்வதற்காக, என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.”
— ஏசாயா 51:16
🌿 தேவன் நம்மை தம்முடைய கரத்தின் நிழலில் காத்து, தமது வார்த்தையால் வழிநடத்துகிறார். இன்று அவருடைய வார்த்தையில் நம்பிக்கையுடன் நிலைத்திருப்போம். 🙏✨

சத்துருக்கள் எய்யும் ஆயுதங்கள் நம்முடைய இருதயங்களைக் காயப்படுத்துகையில், நம்முடைய பலவீனங்களை அவர் கண்டு, அவருடைய ஆறுதலின...
01/09/2026

சத்துருக்கள் எய்யும் ஆயுதங்கள் நம்முடைய இருதயங்களைக் காயப்படுத்துகையில், நம்முடைய பலவீனங்களை அவர் கண்டு, அவருடைய ஆறுதலின் தைலத்தை ஊற்றுவது, சர்வ வல்லமையுள்ளவரின் சார்பில் எத்துணை அன்பாக உள்ளது. கிறிஸ்துவினால் விடுவிக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளில் ஒருவரையும் அவர் மீண்டுமாக “மனுஷனுக்குப் பயப்படும் பயம் வருவிக்கும் கண்ணியாகிய” அடிமைத்தனத்திற்குள் செல்ல விட்டுவிடுவதில்லை. அவர் கிறிஸ்துவுக்குள்ளான ஒவ்வொரு மனுஷனையும், பாவம் மற்றும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலையையும், அவனுடைய சகல எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் கிரியைகளுக்கு அவனே பொறுப்பாளி என்பதையும் உணரச் செய்கின்றார். “படைகளின் ஆண்டவர் ஒருவரையே தூயவர் எனப் போற்றுங்கள்; அவருக்கே அஞ்சுங்கள்; அவர் திருமுன்னேயே நடுங்குங்கள்.” (திருவிவிலியம்)

மகா மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்கள்.உலகத்தின் பார்வையில் கிறிஸ்தவனின் பாதை, சமாதானமற்றதாகத் தோன்றுகின்றது. காரணம்,...
31/08/2026

மகா மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்கள்.

உலகத்தின் பார்வையில் கிறிஸ்தவனின் பாதை, சமாதானமற்றதாகத் தோன்றுகின்றது. காரணம், கர்த்தருடைய பரிசுத்தவான்கள் அடிக்கடி சீற்றம் நிறைந்த பிரயாணத்தையே மேற்கொள்கின்றனர். ஆனால் நம்முடைய இருதயங்கள் விசுவாசத்தின் வாயிலாக கிறிஸ்துவில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நாம் நம்முடைய நங்கூரத்தை விட்டுவிடாதிருந்தால், நாம் எவ்வளவு கடுமையாகத் தாக்கி எறியப்பட்டாலும் சரி, புயல்கள் எவ்வளவு கடுமையாக வீசினாலும் சரி, ஜீவியத்தின் அனைத்து சீற்றங்களிலும் நாம் காக்கப்பட்டிருப்போம். விசுவாசமானது, ஏசாயா தீர்க்கதரிசியோடு கூறலாம். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களினால் நாம் இளைப்பாறலாம், ஏனெனில், நம்முடைய நங்கூரமானது தேவனுடைய சிங்காசனத்தைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது. நம்முடைய போதகரின் இருதயத்தின் பாவையானது, “நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்” என்பதே. இவர் ஆதிமுதல் பிதாவோடு இருந்துள்ளார். அவருடைய அன்னையும், நற்குணத்தையும் இவர் அறிந்திருந்தார்; அவருடைய வல்லமையின் வெளிப்படுத்தல்களை இவர் கண்டிருந்தார்; அவருடைய இரக்கம் நிறைந்த அன்பை இவர் கவனித்திருந்தார். ஆகவே, தேவனோடு இதைப்போன்ற உறவிற்குள் வந்திருக்கும் நாமும், அவரை அறிந்துகொண்டு, அவருடைய அன்பிலும், உண்மையிலும் நம்பிக்கைகொள்ளலாம்.

🌿 இன்றைய வாக்குத்தத்தம் – ஆகஸ்ட் 30📖 “அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.”— ஏசாயா 49:15மனிதர்கள் நம்மை மறந்தாலும...
30/08/2026

🌿 இன்றைய வாக்குத்தத்தம் – ஆகஸ்ட் 30
📖 “அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.”
— ஏசாயா 49:15
மனிதர்கள் நம்மை மறந்தாலும், தேவன் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. ❤️
அவருடைய கரங்களில் நாம் எப்போதும் நினைவில் இருக்கிறோம்.
🙏 இன்று தேவனை நம்பிக்கையுடன் பற்றிக்கொள்வோம்!
#இன்றையவாக்குத்தத்தம் #அனுதினபரலோகமன்னா #ஏசாயா4915 #தேவனுடையவார்த்தை

🌿 இன்றைய வாக்குத்தத்தம் – ஆகஸ்ட் 29📖 “என் ஆலோசனை நிலைத்திருக்கும்; எனக்குச் சித்தமானதையெல்லாம் செய்வேன்.”— ஏசாயா 46:10நம...
29/08/2026

🌿 இன்றைய வாக்குத்தத்தம் – ஆகஸ்ட் 29
📖 “என் ஆலோசனை நிலைத்திருக்கும்; எனக்குச் சித்தமானதையெல்லாம் செய்வேன்.”
— ஏசாயா 46:10
நம் வாழ்க்கை எப்படி மாறினாலும், தேவனுடைய திட்டம் மாறாது. நாம் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலைகளிலும் அவரை நம்புவோம். 🙏
❤️ தேவன் நம் வாழ்க்கையில் தொடங்கியதை நிறைவேற்றுவார்!
#இன்றையவாக்குத்தத்தம் #அனுதினபரலோகமன்னா

🙏 இன்றைய வாக்குத்தத்தம் | ஆகஸ்ட் 28“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்…நீ அக்கினியில் நடக்கும்போது வேகா...
27/08/2026

🙏 இன்றைய வாக்குத்தத்தம் | ஆகஸ்ட் 28

“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்…
நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்.”
— ஏசாயா 43:2

🌊 தண்ணீர்கள் வந்தாலும் பயப்படாதே.
🔥 அக்கினி சூழ்ந்தாலும் கலங்காதே.
🤝 உன் வழியில் எத்தனை சோதனைகள் வந்தாலும், தேவன் உன்னோடு இருக்கிறார்.

இன்றைய நாள் முழுவதும் இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு பற்றிக்கொள்வோம். ❤️

“நான் உன்னோடு இருக்கிறேன்” — இதுவே நம் தைரியம்!

🙏 ஆமென்.

🙏 இன்றைய வாக்குத்தத்தம் – ஆகஸ்ட் 27“பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்.”— ஏசாயா 41:13நம் கையைப் பிடித்து வழிநடத்தும...
26/08/2026

🙏 இன்றைய வாக்குத்தத்தம் – ஆகஸ்ட் 27
“பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்.”
— ஏசாயா 41:13
நம் கையைப் பிடித்து வழிநடத்தும் தேவன் நம்மோடு இருக்கிறார். ❤️
எந்த சூழ்நிலையிலும் பயப்படாமல், அவர்மேல் நம்பிக்கை வைப்போம்.
இன்றைய நாள் முழுவதும் தேவனுடைய கரம் உங்களைத் தாங்கட்டும். 🙏✨

Address

Tirupur
641603

Telephone

+918610613803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tru - Path TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tru - Path TV:

Shortcuts

Share